Загрузка страницы

நாத விந்து - திருவாவினன்குடி | Nadha Vindhu - Thiruvaavinankudi | Thiruppugazh | Amutham Music

Nadha Vindhu - Thiruvaavinankudi | Album : Thiruppugazh | Vocal : Smt. Sudha Ragunathan | Rendered By : Arunagiri Nathar | Music : Embar S Kannan | Amutham Music

நாத விந்து - திருவாவினன்குடி | இசைத்தொகுப்பு : திருப்புகழ் | குரலிசை : ஸ்ரீமதி. சுதா ரகுநாதன் | அருளியவர் : அருணகிரி நாதர் | இசை : எம்பார் S கண்ணன் | அமுதம் மியூசிக்

பாடல்வரிகள் :

நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித சுவாமி நமோநம வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம பரசூரர்

சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம அருள்தாராய்

ஈத லும்பல கோலா லபூஜையும்
ஓத லுங்குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையு மறவாத

ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கம்பிர நாடா ளுநாயக வயலூரா

ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முன்னாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயிலையில் ஏகி

ஆதி யந்த உலா ஆசுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் பெருமாளே

தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம அருள்தாராய்

அருணகிரிநாதர் 15ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டிலுள்ள திருவண்ணாமலையில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் கருதப்படுகிறது. இவருக்கு ஒரு மூத்த சகோதரி உண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார்.
தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு தன் குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி வெட்கப்பட்டு, வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்டு, அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கி “அருணகிரி நில்!” என்று யாரோ சொல்வதைக் கேட்டார்.
அதனால் திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யார் எனப் பார்க்கும்போது, வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது. மேலும், முருகப் பெருமான், சீர்திருத்தம் மற்றும் பக்தியின் பாதையை அவருக்குக் காட்டினார், மனிதகுலத்தின் நலனுக்காக பக்தி பாடல்களை உருவாக்க“முத்தைத் தரு பத்தித் திருநகை” என பாடலின் முதல் அடியை எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தார் என அருணகிரிநாதரின் வரலாற்றைப் பற்றி புராண நூல்களில் குறிப்பு காணப்படுகிறது.
அருணகிரிநாதர், தென்னிந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களுக்குச் சென்று 16,000 பாடல்களை இயற்றினார். அவற்றுள் சுமார் 2,000 பாடல்கள் மட்டும் இன்று வரை பாடப்படுகின்றன. அவரது பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன, மேலும் ஒரு புதிய வழிபாட்டு முறையான இசை மூலம் வழிபடுவதை உலகிற்கு உணர்த்தும் விதமாக உள்ளன.
முருக பக்தர்களுக்கு, அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் " தேவாரத்திற்கு” இணையாகவும், "கந்தர் அலங்காரம்“ திருவாசகத்திற்கு இணையாகவும் மற்றும் "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் போற்றப்படுகின்றது.

For Download & Streaming
itunes : https://itunes.apple.com/in/album/thirupugazh-panchabootha-sthala/id455052425
Amazon Music : https://music.amazon.in/albums/B005G6QPK2?ref=dm_sh_4afa-ac8c-99fe-f50e-64e5c&force=true
Google Music :https://play.google.com/store/music/album/Sudha_Ragunathan_Thirupugazh_Panchabootha_Sthala_T?id=Bvropns3slgen3galbya3gf574q&hl=en
spotify : https://open.spotify.com/album/5r2stCA8t8joxBYS0zpr9k?si=3peOMXugSuyk2-Hpa-bxcw
napster :https://bit.ly/35zFDRv
Wynk Music :https://wynk.in/music/album/thirupugazh/si_5521

Sudha Ragunathan's Music Apps
https://play.google.com/store/apps/details?id=com.fourez,
https://play.google.com/store/apps/details?id=com.evergreenmelody,
https://play.google.com/store/apps/details?id=com.thirupugaz
https://play.google.com/store/apps/details?id=com.danceofsiva

#Amuthammusic#Sudharagunathan#thiruppugazh

Видео நாத விந்து - திருவாவினன்குடி | Nadha Vindhu - Thiruvaavinankudi | Thiruppugazh | Amutham Music канала Amutham Music
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
25 августа 2020 г. 4:30:15
00:03:30
Другие видео канала
முத்தைத்தரு - நூல்  | Muthaitharu - Nool | Thiruppugazh | Sudha Ragunathan | Amutham Musicமுத்தைத்தரு - நூல் | Muthaitharu - Nool | Thiruppugazh | Sudha Ragunathan | Amutham MusicNada bindu kaladi namo by m s subbulakshmiNada bindu kaladi namo by m s subbulakshmiTHIRUPPUGAZH | Naadha Vindhu Kalaadhi | Senjurutti | AadhiTHIRUPPUGAZH | Naadha Vindhu Kalaadhi | Senjurutti | Aadhiஇருமலு ரோக முயலகன் - திருத்தணி | Irumalu Roga - Thiruthani | Thiruppugazh | Amutham Musicஇருமலு ரோக முயலகன் - திருத்தணி | Irumalu Roga - Thiruthani | Thiruppugazh | Amutham MusicThirupugazh | K S Chithra | L Krishnan | TraditionalThirupugazh | K S Chithra | L Krishnan | Traditionalகண்ணன் வருகின்ற நேரம்  - Sivasri Skandaprasadகண்ணன் வருகின்ற நேரம் - Sivasri Skandaprasadஎல்லாவித பிரச்சனைகளுக்கும் தீர்வு - திருப்புகழ் | Thiruppugazh is the solution for all our problemsஎல்லாவித பிரச்சனைகளுக்கும் தீர்வு - திருப்புகழ் | Thiruppugazh is the solution for all our problemsஅண்டர்பதி குடியேற - சிறுவாபுரி | Andarpathi Kudiyera - Siruvaapuri | Thiruppugazh | Amutham Musicஅண்டர்பதி குடியேற - சிறுவாபுரி | Andarpathi Kudiyera - Siruvaapuri | Thiruppugazh | Amutham MusicMuthai Tharu I Sooryagayathri I ThiruppugazhMuthai Tharu I Sooryagayathri I Thiruppugazhஐங்கரனை ஒத்த மனம் - கொங்கணகிரி | Aingranai - Konganagiri | Thiruppugazh | Amutham Musicஐங்கரனை ஒத்த மனம் - கொங்கணகிரி | Aingranai - Konganagiri | Thiruppugazh | Amutham Musicதிருப்புகழ் - நாத விந்து  (பழநி | திருஆவினன்குடி) | Thirupugal - Nadha vindhu  (Pazhani)திருப்புகழ் - நாத விந்து (பழநி | திருஆவினன்குடி) | Thirupugal - Nadha vindhu (Pazhani)Thiruppugazh - Sudha Ragunathan -  திருப்புகழ் - திருமதி.சுதா ரகுநாதன் (Part 1)Thiruppugazh - Sudha Ragunathan - திருப்புகழ் - திருமதி.சுதா ரகுநாதன் (Part 1)Nadavindu – Ragam Kuranji | T. M. Krishna | ThiruppugazhNadavindu – Ragam Kuranji | T. M. Krishna | Thiruppugazhநாடி தேடி தொழுவார் - திருவானைக்காவல் | Naadi Thedi Thozhuvaar - Thiruppugazh | Amutham Musicநாடி தேடி தொழுவார் - திருவானைக்காவல் | Naadi Thedi Thozhuvaar - Thiruppugazh | Amutham MusicSri Subramanya Bhujangam | With Tamil Lyrics | Composed By Adi Shankaracharya | Bombay SistersSri Subramanya Bhujangam | With Tamil Lyrics | Composed By Adi Shankaracharya | Bombay Sistersவிறல்மார னைந்து - திருச்செந்தூர் | Viralmaara Naindhu | Thiruppugazh | Amutham Musicவிறல்மார னைந்து - திருச்செந்தூர் | Viralmaara Naindhu | Thiruppugazh | Amutham Musicபரிமள களப - திருப்புகழ் | Parimala Kalabha - Thiruppugazh | Nithyasree Mahadevanபரிமள களப - திருப்புகழ் | Parimala Kalabha - Thiruppugazh | Nithyasree Mahadevanதிருப்புகழ் -விறல்மாரன் ஐந்து  (திருச்செந்தூர்) | Thirupugazh - Viral Maran (Thiruchendur)திருப்புகழ் -விறல்மாரன் ஐந்து (திருச்செந்தூர்) | Thirupugazh - Viral Maran (Thiruchendur)நாளென் செயும் வினைதான் என் செயும் | கந்தரலங்காரம் | அருணகிரிநாதர் | பாடல் வரிகளுடன்நாளென் செயும் வினைதான் என் செயும் | கந்தரலங்காரம் | அருணகிரிநாதர் | பாடல் வரிகளுடன்
Яндекс.Метрика