Загрузка страницы

முத்தைத்தரு - நூல் | Muthaitharu - Nool | Thiruppugazh | Sudha Ragunathan | Amutham Music

Muthaitharu - Nool | Album : Thiruppugazh | Vocal : Smt. Sudha Ragunathan | Lyrics : Arunagiri Nathar | Music : Embar S Kannan | Amutham Music

முத்தைத்தரு - நூல் | இசைத்தொகுப்பு : திருப்புகழ் | குரலிசை : ஸ்ரீமதி. சுதா ரகுநாதன் | அருளியவர் : அருணகிரி நாதர் | இசை : எம்பார் S கண்ணன் | அமுதம் மியூசிக்

பாடல்வரிகள் :

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே

அருணகிரிநாதர் 15ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டிலுள்ள திருவண்ணாமலையில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் கருதப்படுகிறது. இவருக்கு ஒரு மூத்த சகோதரி உண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார்.
தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு தன் குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி வெட்கப்பட்டு, வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்டு, அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கி “அருணகிரி நில்!” என்று யாரோ சொல்வதைக் கேட்டார்.
அதனால் திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யார் எனப் பார்க்கும்போது, வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது. மேலும், முருகப் பெருமான், சீர்திருத்தம் மற்றும் பக்தியின் பாதையை அவருக்குக் காட்டினார், மனிதகுலத்தின் நலனுக்காக பக்தி பாடல்களை உருவாக்க“முத்தைத் தரு பத்தித் திருநகை” என பாடலின் முதல் அடியை எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தார் என அருணகிரிநாதரின் வரலாற்றைப் பற்றி புராண நூல்களில் குறிப்பு காணப்படுகிறது.

அருணகிரிநாதர், தென்னிந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களுக்குச் சென்று 16,000 பாடல்களை இயற்றினார். அவற்றுள் சுமார் 2,000 பாடல்கள் மட்டும் இன்று வரை பாடப்படுகின்றன. அவரது பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன, மேலும் ஒரு புதிய வழிபாட்டு முறையான இசை மூலம் வழிபடுவதை உலகிற்கு உணர்த்தும் விதமாக உள்ளன.
முருக பக்தர்களுக்கு, அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் " தேவாரத்திற்கு” இணையாகவும், "கந்தர் அலங்காரம்“ திருவாசகத்திற்கு இணையாகவும் மற்றும் "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் போற்றப்படுகின்றது.

Song Download & Streaming
Apple Music : https://music.apple.com/in/album/thirupugazh-panchabootha-sthala/455052425
Amazon Music : https://music.amazon.in/albums/B005G6QPK2?ref=dm_sh_539b-62ba-7641-cc05-a7611
Youtube Music : https://music.youtube.com/playlist?list=OLAK5uy_kTvp6dYa9zum71XXFIW-omvPxbB6erAVg&feature=share
Spotify : https://open.spotify.com/album/5r2stCA8t8joxBYS0zpr9k?si=0d4VK811SsmVU43uGzYhtA
Napster : https://us.napster.com/artist/sudha-raghunathan/album/thirupugazh---panchabootha-sthala-thirupugazh
Jio Saavan : : https://www.jiosaavn.com/album/thirupugazh/ESOoCn-e2Gw_
Wynk : https://wynk.in/music/album/thirupugazh/si_5521

For More Videos: https://www.youtube.com/channel/UCoNxAmtUT8egLRH7ahMoFaw
Facebook : https://www.facebook.com/amuthammusicofficial
For More Videos : https://www.youtube.com/user/AmuthamMusicVideos
: https://www.youtube.com/c/AmuthamMusic
:https://www.youtube.com/c/AmuthamMusicSanskritSeries
Facebook : https://www.facebook.com/amuthammusicofficial
#Amuthammusic#Sudharagunathan#thiruppugazh

Видео முத்தைத்தரு - நூல் | Muthaitharu - Nool | Thiruppugazh | Sudha Ragunathan | Amutham Music канала Amutham Music
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
30 апреля 2020 г. 12:51:47
00:03:11
Другие видео канала
கார்த்திகை தீபம் பக்தி பாடல்கள் | குரலிசை - சுதா ரகுநாதன்| Karthigai Deepam Songs | Sudha Ragunathanகார்த்திகை தீபம் பக்தி பாடல்கள் | குரலிசை - சுதா ரகுநாதன்| Karthigai Deepam Songs | Sudha Ragunathanஓம் சிவாய ஓம் || K L.ராகுல் || பிரதோஷ சிறப்பு பாடல் || Om Sivaya Om || K L.Rahulஓம் சிவாய ஓம் || K L.ராகுல் || பிரதோஷ சிறப்பு பாடல் || Om Sivaya Om || K L.Rahul#ytshorts #shorts #ytshort  மந்திர யோகம்  || S P பாலசுப்ரமணியம் || Mandira Yogam - Sri Guru Bhagavan#ytshorts #shorts #ytshort மந்திர யோகம் || S P பாலசுப்ரமணியம் || Mandira Yogam - Sri Guru BhagavanAshada Navarathri 2023 || Sri Varahi Sahsranama Stotram || J.Bhakatavatsalam || Sri Varahi StothramAshada Navarathri 2023 || Sri Varahi Sahsranama Stotram || J.Bhakatavatsalam || Sri Varahi Stothramவைகாசி விசாகம் முருகன் பக்தி பாடல்கள் || குரலிசை -  சுதா ரகுநாதன்வைகாசி விசாகம் முருகன் பக்தி பாடல்கள் || குரலிசை - சுதா ரகுநாதன்சித்ரா பௌர்ணமி பாடல்கள் || சுதா ரகுநாதன் || Chithra Pournami Songs || Sudha Ragunathanசித்ரா பௌர்ணமி பாடல்கள் || சுதா ரகுநாதன் || Chithra Pournami Songs || Sudha Ragunathanபங்குனி உத்திரம் பாடல்கள்  || சுதா ரகுநாதன் || Panguni Uthiram Songs || Sudha Ragunathanபங்குனி உத்திரம் பாடல்கள் || சுதா ரகுநாதன் || Panguni Uthiram Songs || Sudha RagunathanMadhyamavathi || Sudha Ragunathan || Juke BoxMadhyamavathi || Sudha Ragunathan || Juke BoxRama Navami Krithi's  || Sudha Ragunathan || Juke BoxRama Navami Krithi's || Sudha Ragunathan || Juke Boxதைப்பூசம் பாடல்கள் || சுதா ரகுநாதன்  || Thai Poosam Songs || Sudha Ragunathanதைப்பூசம் பாடல்கள் || சுதா ரகுநாதன் || Thai Poosam Songs || Sudha Ragunathanதை திருநாள் மங்கள இசை || மயிலை கார்த்திகேயன் & குழுவினர் || நாதஸ்வர இசைதை திருநாள் மங்கள இசை || மயிலை கார்த்திகேயன் & குழுவினர் || நாதஸ்வர இசைSaint Thyagaraja's Pancharathna Krithis || Thyagaraja Aradhana || Various ArtistSaint Thyagaraja's Pancharathna Krithis || Thyagaraja Aradhana || Various ArtistRama Nisamana || Celebrating Thyagaraja Aradhana 2023 || Ranjani & GayatriRama Nisamana || Celebrating Thyagaraja Aradhana 2023 || Ranjani & Gayatriதிருப்பாவை  || Thiruppavai ||  மாலோல கண்ணன் & N S ரங்கநாதன்திருப்பாவை || Thiruppavai || மாலோல கண்ணன் & N S ரங்கநாதன்கந்தசஷ்டி|| முருகன் பக்தி பாடல்கள்|| சுதா ரகுநாதன் || Skandha Shasthi || Murugan Devotional Songsகந்தசஷ்டி|| முருகன் பக்தி பாடல்கள்|| சுதா ரகுநாதன் || Skandha Shasthi || Murugan Devotional Songsதீப ஒளி திருநாள் மங்கள இசை || மயிலை M கார்த்திகேயன் & குழுவினர்தீப ஒளி திருநாள் மங்கள இசை || மயிலை M கார்த்திகேயன் & குழுவினர்Sri Vishnu Sahasranamam & Other Slokas || Maalola Kannan || Juke BoxSri Vishnu Sahasranamam & Other Slokas || Maalola Kannan || Juke BoxDevi Mahathmyam & Durga Sapthastathi (Full Verson) || J Bhaktavatsalam & Ganesan (Juke Box)Devi Mahathmyam & Durga Sapthastathi (Full Verson) || J Bhaktavatsalam & Ganesan (Juke Box)Navadurga (Navarathri Songs) || Sudha RagunathanNavadurga (Navarathri Songs) || Sudha Ragunathanசரஸ்வதி அந்தாதி  || சுதா ரகுநாதன் || Saraswathi Anthadi || Sudha Ragunathanசரஸ்வதி அந்தாதி || சுதா ரகுநாதன் || Saraswathi Anthadi || Sudha RagunathanSri Chakraraja ||  Navarathri 2022 || Priya SistersSri Chakraraja || Navarathri 2022 || Priya Sisters
Яндекс.Метрика