Загрузка страницы

அண்டர்பதி குடியேற - சிறுவாபுரி | Andarpathi Kudiyera - Siruvaapuri | Thiruppugazh | Amutham Music

Andarpathi Kudiyera - Siruvaapuri | Album : Thiruppugazh | Vocal : Smt. Sudha Ragunathan | Lyrics : Arunagiri Nathar | Music : Embar S Kannan | Amutham Music

அண்டர்பதி குடியேற - சிறுவாபுரி | இசைத்தொகுப்பு : திருப்புகழ் | குரலிசை : ஸ்ரீமதி. சுதா ரகுநாதன் | அருளியவர் : அருணகிரி நாதர் | இசை : எம்பார் S கண்ணன் | அமுதம் மியூசிக்

பாடல்வரிகள் :

அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற வருளாலே

அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு மகிழ்வாக

மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு மெதிர்காண

மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி வரவேணும்

புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
புந்திநிறை யறிவாள வுயர்தோளா

பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு வடிவேலா

தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய முருகேசா

சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு பெருமாளே

தண்சிறுவை தனில்மேவு பெருமாளே

அருணகிரிநாதர் 15ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டிலுள்ள திருவண்ணாமலையில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் கருதப்படுகிறது. இவருக்கு ஒரு மூத்த சகோதரி உண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார்.
தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு தன் குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி வெட்கப்பட்டு, வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்டு, அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கி “அருணகிரி நில்!” என்று யாரோ சொல்வதைக் கேட்டார்.
அதனால் திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யார் எனப் பார்க்கும்போது, வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது. மேலும், முருகப் பெருமான், சீர்திருத்தம் மற்றும் பக்தியின் பாதையை அவருக்குக் காட்டினார், மனிதகுலத்தின் நலனுக்காக பக்தி பாடல்களை உருவாக்க“முத்தைத் தரு பத்தித் திருநகை” என பாடலின் முதல் அடியை எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தார் என அருணகிரிநாதரின் வரலாற்றைப் பற்றி புராண நூல்களில் குறிப்பு காணப்படுகிறது.
அருணகிரிநாதர், தென்னிந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களுக்குச் சென்று 16,000 பாடல்களை இயற்றினார். அவற்றுள் சுமார் 2,000 பாடல்கள் மட்டும் இன்று வரை பாடப்படுகின்றன. அவரது பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன, மேலும் ஒரு புதிய வழிபாட்டு முறையான இசை மூலம் வழிபடுவதை உலகிற்கு உணர்த்தும் விதமாக உள்ளன.
முருக பக்தர்களுக்கு, அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் " தேவாரத்திற்கு” இணையாகவும், "கந்தர் அலங்காரம்“ திருவாசகத்திற்கு இணையாகவும் மற்றும் "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் போற்றப்படுகின்றது.

For Download & Streaming
itunes : https://itunes.apple.com/in/album/thirupugazh-panchabootha-sthala/id455052425
Amazon Music : https://music.amazon.in/albums/B005G6QPK2?ref=dm_sh_4afa-ac8c-99fe-f50e-64e5c&force=true
Google Music :https://play.google.com/store/music/album/Sudha_Ragunathan_Thirupugazh_Panchabootha_Sthala_T?id=Bvropns3slgen3galbya3gf574q&hl=en
spotify : https://open.spotify.com/album/5r2stCA8t8joxBYS0zpr9k?si=3peOMXugSuyk2-Hpa-bxcw
napster :https://bit.ly/35zFDRv
Wynk Music :https://wynk.in/music/album/thirupugazh/si_5521

Sudha Ragunathan's Music Apps
https://play.google.com/store/apps/details?id=com.fourez,
https://play.google.com/store/apps/details?id=com.evergreenmelody,
https://play.google.com/store/apps/details?id=com.thirupugaz
https://play.google.com/store/apps/details?id=com.danceofsiva
#Amuthammusic#Sudharagunathan#thiruppugazh

Видео அண்டர்பதி குடியேற - சிறுவாபுரி | Andarpathi Kudiyera - Siruvaapuri | Thiruppugazh | Amutham Music канала Amutham Music
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
8 июля 2020 г. 4:30:13
00:03:10
Другие видео канала
THIRUPPUGAZH-Andarpathi( Siruvaapuri) -Bombay Saradha அண்டர்பதி குடியேற   திருப்புகழ் பாம்பேசாரதாTHIRUPPUGAZH-Andarpathi( Siruvaapuri) -Bombay Saradha அண்டர்பதி குடியேற திருப்புகழ் பாம்பேசாரதாபரிமள களப - திருப்புகழ் | Parimala Kalabha - Thiruppugazh | Nithyasree Mahadevanபரிமள களப - திருப்புகழ் | Parimala Kalabha - Thiruppugazh | Nithyasree MahadevanAndarpathi Kudiyera Devotional Song - Album Lord Muruga - Volume 4Andarpathi Kudiyera Devotional Song - Album Lord Muruga - Volume 4உத்ரா உன்னிகிருஷ்ணனின் தேனான குரலில் மஹாலக்ஷ்மி வருவாயேஉத்ரா உன்னிகிருஷ்ணனின் தேனான குரலில் மஹாலக்ஷ்மி வருவாயேSiruvapuri pathigam for Dream houseSiruvapuri pathigam for Dream houseKanakadhara Stotram | Tamil | Lyrical | TranslatedKanakadhara Stotram | Tamil | Lyrical | TranslatedMuthaitharu | Dr. Shobana Vignesh | ThiruppugazhMuthaitharu | Dr. Shobana Vignesh | Thiruppugazh48 நாட்களுக்குள் திருமணம் நடக்க உதவும் அருணகிரிநாதரின் சக்திவாய்ந்த மந்திரம் !48 நாட்களுக்குள் திருமணம் நடக்க உதவும் அருணகிரிநாதரின் சக்திவாய்ந்த மந்திரம் !Hanuman Chalisa (Tamil)Hanuman Chalisa (Tamil)Kumarasthavam - குமாரஸ்தவம் -  Lyrics by Pamban swamigal - Sung by Seergazhi GovindarajanKumarasthavam - குமாரஸ்தவம் - Lyrics by Pamban swamigal - Sung by Seergazhi Govindarajanதிருப்புகழ் - ஆறுமுகம் ஆறுமுகம் (Thiruppugazh 114)திருப்புகழ் - ஆறுமுகம் ஆறுமுகம் (Thiruppugazh 114)KOLARU  THIRU PATHIGAM THEVARAM / Bombay Saradha/பாம்பே சாரதா/கோளறு பதிகம்-KOLARU THIRU PATHIGAM THEVARAM / Bombay Saradha/பாம்பே சாரதா/கோளறு பதிகம்-Muthai Tharu I Sooryagayathri I ThiruppugazhMuthai Tharu I Sooryagayathri I Thiruppugazhநீண்ட ஆயுளை பெற தினமும் கேளுங்கள் மிருத்யுஞ்சய மந்திரம் | Mruthunjaya Manthram | தமிழ்பாடல் தொகுப்புநீண்ட ஆயுளை பெற தினமும் கேளுங்கள் மிருத்யுஞ்சய மந்திரம் | Mruthunjaya Manthram | தமிழ்பாடல் தொகுப்பு"ANDARAPATHI"("அண்டர்பதி")~SRI ARUNAGIRINATHAR -THIRUPUKAZH -BY SRI P. SAMBANDHA GURUKKAL."ANDARAPATHI"("அண்டர்பதி")~SRI ARUNAGIRINATHAR -THIRUPUKAZH -BY SRI P. SAMBANDHA GURUKKAL.Sri Kandha Sashti Kavasam-Sulamangalam sisters..Sri Kandha Sashti Kavasam-Sulamangalam sisters..திருப்புகழ் -விறல்மாரன் ஐந்து  (திருச்செந்தூர்) | Thirupugazh - Viral Maran (Thiruchendur)திருப்புகழ் -விறல்மாரன் ஐந்து (திருச்செந்தூர்) | Thirupugazh - Viral Maran (Thiruchendur)திருப்புகழ் - நாத விந்து  (பழநி | திருஆவினன்குடி) | Thirupugal - Nadha vindhu  (Pazhani)திருப்புகழ் - நாத விந்து (பழநி | திருஆவினன்குடி) | Thirupugal - Nadha vindhu (Pazhani)THIRUPPUGAZH( VELVI IRANDDENU) SIRUVAPURI -BOMBAY SARADHA-திருப்புகழ்  (வேள்வி இரண்டென )பாம்பேசாரதாTHIRUPPUGAZH( VELVI IRANDDENU) SIRUVAPURI -BOMBAY SARADHA-திருப்புகழ் (வேள்வி இரண்டென )பாம்பேசாரதா
Яндекс.Метрика