Загрузка страницы

திருப்புகழ் -விறல்மாரன் ஐந்து (திருச்செந்தூர்) | Thirupugazh - Viral Maran (Thiruchendur)

Credits: Singer Jayshri Prakash

......... பாடல் .........

விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து ...... வெயில்காய

மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் ...... வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப ...... மயல்தீர

குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து ...... குறுகாயோ

மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
வழிபாடு தந்த ...... மதியாளா

மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவேலெ றிந்த ...... அதிதீரா

அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
மடியாரி டைஞ்சல் ...... களைவோனே

அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
அலைவாயு கந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

விறல்மாரன் ... வீரனாம் மன்மதன்

ஐந்து மலர்வாளி சிந்த ... ஐந்து மலர்ப் பாணங்களையும் செலுத்த,*

வானி லிந்து மிக வெயில் காய ... ஆகாயத்தில் நிலவு அதிகமாக
வெயில் போலக் காய,

மிதவாடை வந்து ... நிதானமான தென்றல் காற்று வந்து

தழல்போல வொன்ற ... தீப்போல வீசிப் பொருந்த,

வினைமாதர் தந்தம் வசைகூற ... வீண்வம்பு பேசும் பெண்கள் தத்தம்
வசை மொழிகளைக் கூற,

குறவாணர் குன்றி லுறை ... குறவர்கள் வாழும் குன்றில் இருக்கும்

பேதை கொண்ட ... (வள்ளி போன்ற) பேதைப்பெண்ணாகிய
நான் அடைந்த

கொடிதான துன்ப மயல்தீர ... கொடிய துன்ப விரக மயக்கம் தீர,

குளிர்மாலை யின்க ண் ... குளிர்ந்த மாலைப் பொழுதினிலே

அணிமாலை தந்து ... நீ அணிந்த கடப்ப மாலையைத் தந்து

குறைதீர வந்து குறுகாயோ ... என் குறையைத் தீர்க்க வந்து
அணுகமாட்டாயா?

மறிமா னுகந்த இறையோன் ... இள மானை உகந்து ஏந்தும்
இறைவன் சிவபிரான்

மகிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா ... (உன் உபதேசம் பெற்று)
மகிழ்ந்து உனக்கு வழிபாடு செய்யப் பெற்ற அறிஞனே,

மலைமாவு சிந்த ... கிரெளஞ்சமலையும், மாமரமும் (சூரனும்)
வீழ்ந்து படவும்,

அலைவேலை யஞ்ச ... அலைகடல் கொந்தளித்து அஞ்சவும்,

வடிவே லெறிந்த அதிதீரா ... கூரிய வேலை வீசிய அதி தீரனே,

அறிவால் அறிந்து ... அறிவு கொண்டு உன்னை அறிந்து,

உன்னிருதாள் இறைஞ்சும் ... உனது இரு தாள்களையும் வணங்கும்

அடியார் இடைஞ்சல் களைவோனே ... அடியார்களின் துயரைக் களைபவனே,

அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து ... அழகிய செம்பொன்
மயில்மீது அமர்ந்து

அலைவா யுகந்த பெருமாளே. ... திருச்செந்தூரில் மகிழ்ந்தமரும்
பெருமாளே.

Видео திருப்புகழ் -விறல்மாரன் ஐந்து (திருச்செந்தூர்) | Thirupugazh - Viral Maran (Thiruchendur) канала Mayuran Musical
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
26 июня 2017 г. 7:31:02
00:01:49
Другие видео канала
Thirumanam Nadakka – Thiruppugazh PaadalThirumanam Nadakka – Thiruppugazh Paadalவிறல்மார னைந்து - திருச்செந்தூர் | Viralmaara Naindhu | Thiruppugazh | Amutham Musicவிறல்மார னைந்து - திருச்செந்தூர் | Viralmaara Naindhu | Thiruppugazh | Amutham MusicKanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original FullKanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Full48 நாட்களுக்குள் திருமணம் நடக்க உதவும் அருணகிரிநாதரின் சக்திவாய்ந்த மந்திரம் !48 நாட்களுக்குள் திருமணம் நடக்க உதவும் அருணகிரிநாதரின் சக்திவாய்ந்த மந்திரம் !Thiruppugazh avanidhanilE  (pazhani) - திருப்புகழ் அவனிதனிலே  (பழநி)Thiruppugazh avanidhanilE (pazhani) - திருப்புகழ் அவனிதனிலே (பழநி)திருப்புகழ் - உனைத் தினம்  (திருப்பரங்குன்றம்) |  Thirupugazh - Unai Dhinam (Thiruparankundram)திருப்புகழ் - உனைத் தினம் (திருப்பரங்குன்றம்) | Thirupugazh - Unai Dhinam (Thiruparankundram)திருப்புகழ் - நாத விந்து  (பழநி | திருஆவினன்குடி) | Thirupugal - Nadha vindhu  (Pazhani)திருப்புகழ் - நாத விந்து (பழநி | திருஆவினன்குடி) | Thirupugal - Nadha vindhu (Pazhani)விறல் மாரன் ஐந்து | திருப்புகழ் | Viral Maran Aiyndhu |  பக்திப்பாடல்கள் |விறல் மாரன் ஐந்து | திருப்புகழ் | Viral Maran Aiyndhu | பக்திப்பாடல்கள் |விறல்மாரன் ஐந்து/ViralMaran Ainthu:Thiruppugazh|Tamil & English Lyrics|Credits:Singer JayshriPrakashவிறல்மாரன் ஐந்து/ViralMaran Ainthu:Thiruppugazh|Tamil & English Lyrics|Credits:Singer JayshriPrakashதிருப்புகழ் - அகரமுமாகி  (பழமுதிர்ச்சோலை) | Thirupugal - Agaramum Aagi (Pazhamudhircholai)திருப்புகழ் - அகரமுமாகி (பழமுதிர்ச்சோலை) | Thirupugal - Agaramum Aagi (Pazhamudhircholai)அண்டர்பதி குடியேற - சிறுவாபுரி | Andarpathi Kudiyera - Siruvaapuri | Thiruppugazh | Amutham Musicஅண்டர்பதி குடியேற - சிறுவாபுரி | Andarpathi Kudiyera - Siruvaapuri | Thiruppugazh | Amutham MusicThirupuzhal Viral Maran Thiruchendur with lyricsThirupuzhal Viral Maran Thiruchendur with lyricsதிருப்புகழ் - சுரும்பு அணி  (இலஞ்சி) | Thirupugal - Surumpani (Ilanji)திருப்புகழ் - சுரும்பு அணி (இலஞ்சி) | Thirupugal - Surumpani (Ilanji)திருப்புகழ் - தொந்தி சரிய  (திருச்செந்தூர்) | Thirupugal - Thonthi Sariya (Thiruchendur)திருப்புகழ் - தொந்தி சரிய (திருச்செந்தூர்) | Thirupugal - Thonthi Sariya (Thiruchendur)திருப்புகழ் - சினத்தவர் முடிக்கும்  (திருத்தணி) | Thirupugal - Sinathavar Mudikkum (Thiruthani)திருப்புகழ் - சினத்தவர் முடிக்கும் (திருத்தணி) | Thirupugal - Sinathavar Mudikkum (Thiruthani)விறல்மாரன் ஐந்து:திருப்புகழ்/ViralMaran Ainthu:Thiruppugazh|Tamil Lyrics|6times recital |Tiruchendurவிறல்மாரன் ஐந்து:திருப்புகழ்/ViralMaran Ainthu:Thiruppugazh|Tamil Lyrics|6times recital |Tiruchendurசுந்தரகாண்டம் 5 நிமிடங்களில் பாராயணம் / கேட்டதை கொடுக்கும் சுந்தரகாண்டம்/ Sundarakandam in 5 minutesசுந்தரகாண்டம் 5 நிமிடங்களில் பாராயணம் / கேட்டதை கொடுக்கும் சுந்தரகாண்டம்/ Sundarakandam in 5 minutesKolaru Pathigam | Bombay Saradha | LyricalKolaru Pathigam | Bombay Saradha | Lyricalஸ்வர்ணாகர்ஷண பைரவர் அஷ்டகம் - Swarna Akarshana Bhairavar Ashatakam | Bairava Song | Vijay Musicalsஸ்வர்ணாகர்ஷண பைரவர் அஷ்டகம் - Swarna Akarshana Bhairavar Ashatakam | Bairava Song | Vijay Musicals
Яндекс.Метрика