Загрузка страницы

விறல்மார னைந்து - திருச்செந்தூர் | Viralmaara Naindhu | Thiruppugazh | Amutham Music

Viralmaara Naindhu - Thiruchendur | Album : Thiruppugazh | Vocal : Smt. Sudha Ragunathan | Lyrics : Arunagiri Nathar | Music : Embar S Kannan | Amutham Music

விறல்மார னைந்து - திருச்செந்தூர் | இசைத்தொகுப்பு : திருப்புகழ் | குரலிசை : ஸ்ரீமதி. சுதா ரகுநாதன் | அருளியவர் : அருணகிரி நாதர் | இசை : எம்பார் S கண்ணன் | அமுதம் மியூசிக்

பாடல்வரிகள் :

விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து வெயில்காய

மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயல்தீர

குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ

மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
வழிபாடு தந்த மதியாளா

மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவேலெ றிந்த அதிதீரா

அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
மடியாரி டைஞ்சல் களைவோனே

அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
அலைவாயு கந்த பெருமாளே

அருணகிரிநாதர் 15ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டிலுள்ள திருவண்ணாமலையில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் கருதப்படுகிறது. இவருக்கு ஒரு மூத்த சகோதரி உண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார்.
தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு தன் குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி வெட்கப்பட்டு, வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்டு, அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கி “அருணகிரி நில்!” என்று யாரோ சொல்வதைக் கேட்டார்.
அதனால் திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யார் எனப் பார்க்கும்போது, வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது. மேலும், முருகப் பெருமான், சீர்திருத்தம் மற்றும் பக்தியின் பாதையை அவருக்குக் காட்டினார், மனிதகுலத்தின் நலனுக்காக பக்தி பாடல்களை உருவாக்க“முத்தைத் தரு பத்தித் திருநகை” என பாடலின் முதல் அடியை எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தார் என அருணகிரிநாதரின் வரலாற்றைப் பற்றி புராண நூல்களில் குறிப்பு காணப்படுகிறது.
அருணகிரிநாதர், தென்னிந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களுக்குச் சென்று 16,000 பாடல்களை இயற்றினார். அவற்றுள் சுமார் 2,000 பாடல்கள் மட்டும் இன்று வரை பாடப்படுகின்றன. அவரது பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன, மேலும் ஒரு புதிய வழிபாட்டு முறையான இசை மூலம் வழிபடுவதை உலகிற்கு உணர்த்தும் விதமாக உள்ளன.
முருக பக்தர்களுக்கு, அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் " தேவாரத்திற்கு” இணையாகவும், "கந்தர் அலங்காரம்“ திருவாசகத்திற்கு இணையாகவும் மற்றும் "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் போற்றப்படுகின்றது.

To Download (itunes) : https://itunes.apple.com/in/album/thirupugazh-panchabootha-sthala/id455052425
Amazon : http://www.amazon.com/Thirupugazh-Panchabootha-Sthala-Sudha-Ragunathan/dp/B005G6QPK2/ref=sr_1_11?s=dmusic&ie=UTF8&qid=1433570625&sr=1-11&keywords=Sudha+Ragunathan&refinements=p_n_feature_browse-bin%3A625150011
Google Play Store:https://play.google.com/store/music/album/Sudha_Ragunathan_Thirupugazh_Panchabootha_Sthala_T?id=Bvropns3slgen3galbya3gf574q&hl=en
Music App : https://play.google.com/store/apps/details?id=com.fourez,
:https://play.google.com/store/apps/details?id=com.evergreenmelody,
:https://play.google.com/store/apps/details?id=com.thirupugaz
:https://play.google.com/store/apps/details?id=com.danceofsiva

#Amuthammusic#Sudharagunathan#thiruppugazh

Видео விறல்மார னைந்து - திருச்செந்தூர் | Viralmaara Naindhu | Thiruppugazh | Amutham Music канала Amutham Music
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
6 июня 2020 г. 4:30:20
00:03:15
Другие видео канала
திருப்புகழ் -விறல்மாரன் ஐந்து  (திருச்செந்தூர்) | Thirupugazh - Viral Maran (Thiruchendur)திருப்புகழ் -விறல்மாரன் ஐந்து (திருச்செந்தூர்) | Thirupugazh - Viral Maran (Thiruchendur)Muthai tharu (Thiruppugazh) | Vande Guru Paramparaam | SooryanarayananMuthai tharu (Thiruppugazh) | Vande Guru Paramparaam | Sooryanarayananசடையா எனுமால் - தேவார பதிகம் | Sadaiyaa Enumaal - Thevara Pathigam | Palan Tharum Pathikangalசடையா எனுமால் - தேவார பதிகம் | Sadaiyaa Enumaal - Thevara Pathigam | Palan Tharum PathikangalThiruppugazh avanidhanilE  (pazhani) - திருப்புகழ் அவனிதனிலே  (பழநி)Thiruppugazh avanidhanilE (pazhani) - திருப்புகழ் அவனிதனிலே (பழநி)Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original FullKanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Full48 நாட்களுக்குள் திருமணம் நடக்க உதவும் அருணகிரிநாதரின் சக்திவாய்ந்த மந்திரம் !48 நாட்களுக்குள் திருமணம் நடக்க உதவும் அருணகிரிநாதரின் சக்திவாய்ந்த மந்திரம் !THIRUPPUGAZH | Naadha Vindhu Kalaadhi | Senjurutti | AadhiTHIRUPPUGAZH | Naadha Vindhu Kalaadhi | Senjurutti | Aadhiநாத விந்து - திருவாவினன்குடி | Nadha Vindhu - Thiruvaavinankudi | Thiruppugazh | Amutham Musicநாத விந்து - திருவாவினன்குடி | Nadha Vindhu - Thiruvaavinankudi | Thiruppugazh | Amutham MusicMuthai Tharu I Sooryagayathri I ThiruppugazhMuthai Tharu I Sooryagayathri I Thiruppugazhகும்பகோணம் அரூர் சிதம்பரம் | Kumbakonam | Thiruppugazh | Amutham Musicகும்பகோணம் அரூர் சிதம்பரம் | Kumbakonam | Thiruppugazh | Amutham MusicThirupuzhal Viral Maran Thiruchendur with lyricsThirupuzhal Viral Maran Thiruchendur with lyricsThirupugazh | K S Chithra | L Krishnan | TraditionalThirupugazh | K S Chithra | L Krishnan | Traditionalமுத்தைத்தரு - நூல்  | Muthaitharu - Nool | Thiruppugazh | Sudha Ragunathan | Amutham Musicமுத்தைத்தரு - நூல் | Muthaitharu - Nool | Thiruppugazh | Sudha Ragunathan | Amutham Musicதிருமணம் நடக்க திருப்புகழ்- விளக்கமுடன் Marriage Thirupugal Explanation Viral maran | Shanmuga Priyaதிருமணம் நடக்க திருப்புகழ்- விளக்கமுடன் Marriage Thirupugal Explanation Viral maran | Shanmuga Priyaகல்யாண வரம் தரும் நித்ய கல்யாண பெருமாள் 🔔Nithyakalyana Perumal 🔔 Tamil Devotional Song 🔔Apoorvaaudioகல்யாண வரம் தரும் நித்ய கல்யாண பெருமாள் 🔔Nithyakalyana Perumal 🔔 Tamil Devotional Song 🔔Apoorvaaudioஇருமலு ரோக முயலகன் - திருத்தணி | Irumalu Roga - Thiruthani | Thiruppugazh | Amutham Musicஇருமலு ரோக முயலகன் - திருத்தணி | Irumalu Roga - Thiruthani | Thiruppugazh | Amutham Musicதிருமண திருப்புகழ் 48 நாட்கள் சொன்னால் திருமணம் நடக்கும்திருமண திருப்புகழ் 48 நாட்கள் சொன்னால் திருமணம் நடக்கும்Kamakshi Amman virutham with Tamil lyricsKamakshi Amman virutham with Tamil lyricsவிறல்மாரன் ஐந்து/ViralMaran Ainthu:Thiruppugazh|Tamil & English Lyrics|Credits:Singer JayshriPrakashவிறல்மாரன் ஐந்து/ViralMaran Ainthu:Thiruppugazh|Tamil & English Lyrics|Credits:Singer JayshriPrakash
Яндекс.Метрика