Загрузка страницы

கும்பகோணம் அரூர் சிதம்பரம் | Kumbakonam | Thiruppugazh | Amutham Music

கும்பகோணம் அரூர் சிதம்பரம் | Kumbakonam
Kumbakonam - Kshtrakkovai | Album : Thiruppugazh | Vocal : Smt. Sudha Ragunathan | Rendered By : Arunagiri Nathar | Music : Embar S Kannan | Amutham Music

கும்பகோணம் அரூர் சிதம்பரம் | இசைத்தொகுப்பு : திருப்புகழ் | குரலிசை : ஸ்ரீமதி. சுதா ரகுநாதன் | அருளியவர் : அருணகிரி நாதர் | இசை : எம்பார் S கண்ணன் | அமுதம் மியூசிக்

பாடல்வரிகள் :

கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம்
உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு
கொன்றை வேணியர் மாயூர மம்பெறு சிவகாசி

கொந்து லாவிய ராமே சுரந்தனி
வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர்
கும்பு கூடிய வேளூர் பரங்கிரி தனில்வாழ்வே

செம்பு கேசுர மாடானை யின்புறு
செந்தி லேடகம் வாழ்சோலை யங்கிரி
தென்றன் மாகிரி நாடாள வந்தவ ஜெகநாத

செஞ்சொ லேரக மாவா வினன்குடி
குன்று தோறுடன் மூதூர் விரிஞ்சைநல்
செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் வருதேவே

கம்பை மாவடி மீதேய சுந்தர
கம்பு லாவிய காவேரி சங்கமு
கஞ்சி ராமலை வாழ்தேவ தந்திர வயலூரா

கந்த மேவிய போரூர் நடம்புரி
தென்சி வாயமு மேயா யகம்படு
கண்டி யூர்வரு சாமீக டம்பணி மணிமார்பா

எம்பி ரானொடு வாதாடு மங்கையர்
உம்பர் வாணிபொ னீள்மால் சவுந்தரி
எந்த நாள்தொறு மேர்பாக நின்றுறு துதியோதும்

இந்தி ராணிதன் மாதோடு நன்குற
மங்கை மானையு மாலாய்ம ணந்துல
கெங்கு மேவிய தேவால யந்தொறு பெருமாளே

அருணகிரிநாதர் 15ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டிலுள்ள திருவண்ணாமலையில் பிறந்தவர் . இவரது தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் கருதப்படுகிறது. இவருக்கு ஒரு மூத்த சகோதரி உண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார்.
தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு தன் குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி வெட்கப்பட்டு, வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்டு, அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கி “அருணகிரி நில்!” என்று யாரோ சொல்வதைக் கேட்டார்.
அதனால் திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யார் எனப் பார்க்கும்போது, வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது. மேலும், முருகப் பெருமான், சீர்திருத்தம் மற்றும் பக்தியின் பாதையை அவருக்குக் காட்டினார், மனிதகுலத்தின் நலனுக்காக பக்தி பாடல்களை உருவாக்க“முத்தைத் தரு பத்தித் திருநகை” என பாடலின் முதல் அடியை எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தார் என அருணகிரிநாதரின் வரலாற்றைப் பற்றி புராண நூல்களில் குறிப்பு காணப்படுகிறது.

அருணகிரிநாதர், தென்னிந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களுக்குச் சென்று 16,000 பாடல்களை இயற்றினார். அவற்றுள் சுமார் 2,000 பாடல்கள் மட்டும் இன்று வரை பாடப்படுகின்றன. அவரது பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன, மேலும் ஒரு புதிய வழிபாட்டு முறையான இசை மூலம் வழிபடுவதை உலகிற்கு உணர்த்தும் விதமாக உள்ளன.
முருக பக்தர்களுக்கு, அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் " தேவாரத்திற்கு” இணையாகவும், "கந்தர் அலங்காரம்“ திருவாசகத்திற்கு இணையாகவும் மற்றும் "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் போற்றப்படுகின்றது.

Song Download & Streaming
Apple Music : https://music.apple.com/in/album/thirupugazh-panchabootha-sthala/455052425
Amazon Music : https://music.amazon.in/albums/B005G6QPK2?ref=dm_sh_539b-62ba-7641-cc05-a7611
Youtube Music : https://music.youtube.com/playlist?list=OLAK5uy_kTvp6dYa9zum71XXFIW-omvPxbB6erAVg&feature=share
Spotify : https://open.spotify.com/album/5r2stCA8t8joxBYS0zpr9k?si=0d4VK811SsmVU43uGzYhtA
Napster : https://us.napster.com/artist/sudha-raghunathan/album/thirupugazh---panchabootha-sthala-thirupugazh
Jio Saavan : : https://www.jiosaavn.com/album/thirupugazh/ESOoCn-e2Gw_
Wynk : https://wynk.in/music/album/thirupugazh/si_5521

For More Videos: https://www.youtube.com/channel/UCoNxAmtUT8egLRH7ahMoFaw
Facebook : https://www.facebook.com/amuthammusicofficial
For More Videos : https://www.youtube.com/user/AmuthamMusicVideos
: https://www.youtube.com/c/AmuthamMusic
:https://www.youtube.com/c/AmuthamMusicSanskritSeries
Facebook : https://www.facebook.com/amuthammusicofficial
#Amuthammusic#Sudharagunathan#thiruppugazh

#Amuthammusic#Sudharagunathan#thiruppugazh

Видео கும்பகோணம் அரூர் சிதம்பரம் | Kumbakonam | Thiruppugazh | Amutham Music канала Amutham Music
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
23 июня 2020 г. 4:30:11
00:06:05
Другие видео канала
Teruvil Varano  || - Maiyyal || S Sowmya (Full Verson)Teruvil Varano || - Maiyyal || S Sowmya (Full Verson)Varanamukaha Vaa  || Sudha Ragunathan || Ellam Inba Mayam (Live)Varanamukaha Vaa || Sudha Ragunathan || Ellam Inba Mayam (Live)Sowmithree || Nithyashree Mahadevan || Juke BosSowmithree || Nithyashree Mahadevan || Juke BosKanakangi (Varnam) || Vidhya Ragunath || Music Season 2021Kanakangi (Varnam) || Vidhya Ragunath || Music Season 2021அன்பு லக்ஷ்மி || லக்ஷ்மி சிறப்பு பாடல் || Anbu lakshmi || Rajeevi Ganesh || Veeramani Kannanஅன்பு லக்ஷ்மி || லக்ஷ்மி சிறப்பு பாடல் || Anbu lakshmi || Rajeevi Ganesh || Veeramani KannanDasaratha Rama || Celebrating Margazhi of 2022 || Udayalur K KalyanaramanDasaratha Rama || Celebrating Margazhi of 2022 || Udayalur K KalyanaramanAarupadai Veedamarndha || Sudha Ragunathan || Sukha BhaavamAarupadai Veedamarndha || Sudha Ragunathan || Sukha BhaavamKalabhirava Kavacham || Kalabhirava Stotrani || J.BhaktavatsalamKalabhirava Kavacham || Kalabhirava Stotrani || J.Bhaktavatsalamநாலாயிர திவ்ய பிரபந்தம் || பெரிய  திருமொழி - ஐந்தம் பத்து || K. மாலோல கண்ணன் & N S ரங்கநாதன்நாலாயிர திவ்ய பிரபந்தம் || பெரிய திருமொழி - ஐந்தம் பத்து || K. மாலோல கண்ணன் & N S ரங்கநாதன்விடியற்காலையில் -  வடுக பைரவர் | Vidiyarkaalaiyil - Vaduga Bhairavar | SPB | Sri Ashta Bhairavarவிடியற்காலையில் - வடுக பைரவர் | Vidiyarkaalaiyil - Vaduga Bhairavar | SPB | Sri Ashta BhairavarMayamma || Bombay S Jayashree || Music Season 2021Mayamma || Bombay S Jayashree || Music Season 2021Konji Konji Va Guhane || Nithyahshree Mahadevan || Music Season 2020Konji Konji Va Guhane || Nithyahshree Mahadevan || Music Season 2020ஆடி பூரம் || ஜெய ஜெய தேவி || துர்கை அம்மன் சிறப்பு பக்தி பாடல் || குரலிசை - M. அம்ருதாஆடி பூரம் || ஜெய ஜெய தேவி || துர்கை அம்மன் சிறப்பு பக்தி பாடல் || குரலிசை - M. அம்ருதா(Varnam) Valachi || Dwani 1 || Sudha Ragunathan(Varnam) Valachi || Dwani 1 || Sudha RagunathanSaravana Bhava || Ranjani & Gayatri || Music Season 2021Saravana Bhava || Ranjani & Gayatri || Music Season 2021Sri Guruguha || Celebrating Margazhi of 2022 || Ranjani & GayatriSri Guruguha || Celebrating Margazhi of 2022 || Ranjani & GayatriSai Bhajan  - Shaswathi - Nithyashree Mahadevan (Full Verson)Sai Bhajan - Shaswathi - Nithyashree Mahadevan (Full Verson)Ka Va Va || T M krishna || Music Season 2021Ka Va Va || T M krishna || Music Season 2021Madhava Mamava || Celebrating Margazhi of 2022 || T M KrishnaMadhava Mamava || Celebrating Margazhi of 2022 || T M KrishnaAnandanatana || S Sowmya || Music Season 2021Anandanatana || S Sowmya || Music Season 2021Seshachala Nayakam || Sankari Krishnan || Music Season 2021Seshachala Nayakam || Sankari Krishnan || Music Season 2021
Яндекс.Метрика