Загрузка страницы

PREGNANCY GOD || Mulaivanam song 2

உலக மக்களுக்கு எவ்வளவு செல்வம் இருந்தாலும், மழலைச் செல்வம் இல்லை என்றால் அது வெற்று வாழ்க்கை ஆகிவிடும். ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும் அந்தக் குடும்பத்துக்கு குழந்தைப் பேறுதான் முதன்மையானதாக கருதப்படுகிறது. திருமணமாகி பல ஆண்டு களாகியும் கருத்தரிக்காதவர்கள், கருத்தரித்தாலும் உடனுக்குடன் அது தங்காமல் சிதைந்து போவது, தாய்க்கும், குழந்தைக்கும் பிரச்சினை ஏற்படுவது.. இப்படி எத்தனையோ உள்ளன.

மருத்துவ உலகம் இதில் எவ்வளவோ முன்னேறி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும் அத்தகைய மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர்களே, சில நேரங்களில் மனித சக்தி, மருத்துவ சக்தியை விட தெய்வ சக்தி ஒன்றுள்ளது என்று நம்புகிறார்கள். தம்மை நம்பி வந்தவர்களுக்கும் வழிகாட்டுகிறார்கள். அப்படி தெய்வ சக்தியை நம்பும் மக்களுக்கு, பலனளிக்க எத்தனையோ ஆலயங்கள் இருப்பினும், திருக்கருகாவூர் கருக்காத்த நாயகி அம்மன் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள்.

இந்தத் திருக்கோவில் அமைந்திருக்கும் ஊரில் வசிக்கும் பெண்களுக்கு, கருச்சிதைவு ஏற்பட்டதில்லை என்று உறுதியுடன் சொல்கிறார்கள். குழந்தைப் பேறு வேண்டியும், சுகப்பிரசவம் நடைபெற வேண்டியும் தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து போகிறார்கள்.

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து, அம்பிகையில் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்துக் கொடுக்கப்படும் நெய்யை, 48 நாட்கள் தொடர்ந்து இரவில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டு. அதே போல கருவுற்ற பெண்கள் சுகப் பிரசவம் அடைய, அம்பிகையின் அருள்பெற்ற விளக்கெண்ணெயை, அடிவயிற்றில் தடவிக்கொள்வது உரிய பலனைத் தரும் என்பது நம்பிக்கை.

திருமணம் நடப்பதற்கும், திருமணமாகி கருத்தரிப்பதற்கும் பெண்கள் இந்தத் திருக்கோவிலுக்கு நேரில் வந்து, அம்பாள் சன்னிதியில் உள்ள வாசல்படியை நெய்யால் மெழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்து வழிபட்டுச் செல்கிறார்கள். நேரில் வர இயலாதவர்களுக்கு, தபால் மூலம் பிரசாதம் அனுப்பும் திட்டமும் கோவில் நிர்வாகத்தால் செயல்படுத்தப்படுகிறது.

நன்றிக் கடன் :

பக்தர்களின் பிரார்த்தனை பலித்ததும், தம்பதி சமேதராகவும், தாய் தனது குழந்தையை ஏந்திக் கொண்டும் ஆலயத்திற்கு வருகிறார்கள். பின்னர் அம்பாளின் சன்னிதிக்கு வந்து தங்களின் சக்திக்கேற்ப கற்கண்டு, வாழைப்பழம், பணம், சர்க்கரை போன்றவற்றை எடைக்கு எடை துலா பாரம் தருகிறார்கள். மேலும் அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனை செய்வதும், புடவை சாத்துவதும் திருக்கோவிலில் நாளும் காணக்கூடிய அற்புதமான காட்சிகளாகும். அம்பிகை சன்னிதியிலேயே ஒரு துலாக் கோல் இருக்கிறது.

சுயம்புவான முல்லைவன நாதருக்கு, புனுகு சட்டம் சாத்தி வழிபட்டால், தோஷம் நிவர்த்தியாகும். குறிப்பாக தோல் நோய் நீங்கும் என்பதும் அனுபவப்பட்டவர்களின் வாக்கு.

அமைவிடம் :

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பாபநாசத்தில் இருந்து தெற்கே 6 கிலோமீட்டர் தொலைவிலும், தஞ்சாவூர்– நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் சாலியமங்கலத்திற்கு வடக்கே 10 கிலோமீட்டர் தொலைவிலும், விருத்த காவிரி என்னும் வெட்டாற்றின் கரையில் அமைந்துள்ளது திருக்கருகாவூர் திருத்தலம். பஞ்ச ஆரண்யத் தலங்களில் முதன் முதலில் தரிசிக்க வேண்டிய தலமாகவும், சனத்குமார முனிவரால், நாரதருக்கு எடுத்துச் சொல்லப்பட்ட பெருமைக் குரியத் தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது.

Music: Amutham Company
Singer: Sudha Ragunathan

Видео PREGNANCY GOD || Mulaivanam song 2 канала Bhoomika's Little World
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
27 декабря 2020 г. 17:11:12
00:09:03
Другие видео канала
Garbharakshambikai Padalgal - Sudha Ragunathan - Amutham MusicGarbharakshambikai Padalgal - Sudha Ragunathan - Amutham MusicSanthana Gopala Mantra - 108 Times - Mantra for Pregnancy - Garbharaksha SlokaSanthana Gopala Mantra - 108 Times - Mantra for Pregnancy - Garbharaksha SlokaKanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original FullKanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Fullகரு உற்பத்தி மந்திரம்/Karu Manthiram/கர்ப்பரட்சாம்பிகை/karbarakshmbigai/ திருக்கருகாவூர் பாடல்கரு உற்பத்தி மந்திரம்/Karu Manthiram/கர்ப்பரட்சாம்பிகை/karbarakshmbigai/ திருக்கருகாவூர் பாடல்"Kandha Sashti Kavasam", By Super Singer Fame Priyanka | Top Tamil News"Kandha Sashti Kavasam", By Super Singer Fame Priyanka | Top Tamil Newsஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை 108 போற்றி | Sri Garbarakshambigai  |108 Potri | Sudha Ragunathan |ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை 108 போற்றி | Sri Garbarakshambigai |108 Potri | Sudha Ragunathan |PREGNANCY GOD SONG - Garbarakshambigai wmv   YouTubePREGNANCY GOD SONG - Garbarakshambigai wmv YouTubeSkanda Shasti Kavacham | K S Chithra | Traditional | 22:24Skanda Shasti Kavacham | K S Chithra | Traditional | 22:24கந்த சஷ்டி கவசம் - பாராயண பாடல் வரிகள் | Kanda Sashti Kavacham with Lyrics Tamil | Vijay Musicalsகந்த சஷ்டி கவசம் - பாராயண பாடல் வரிகள் | Kanda Sashti Kavacham with Lyrics Tamil | Vijay MusicalsHara Hara Sivane Arunachalane Annamalaye PotriHara Hara Sivane Arunachalane Annamalaye Potriஅதிசயங்கள் நிறைந்த கர்ப்பரட்சாம்பிகை கோயில் | Karparatchambigai Templeஅதிசயங்கள் நிறைந்த கர்ப்பரட்சாம்பிகை கோயில் | Karparatchambigai TemplePregnancy Mantra  ||  Pregnancy Protection  ||  Garbarakshambigai Amman  ||  Super Effective!!!Pregnancy Mantra || Pregnancy Protection || Garbarakshambigai Amman || Super Effective!!!முருகன் பிள்ளை வரம் கொடுக்கும் பார்வதியின் மகன்  | Murugan Devotional Tamil Songsமுருகன் பிள்ளை வரம் கொடுக்கும் பார்வதியின் மகன் | Murugan Devotional Tamil SongsMantra to Protect Your Baby | Shree Bal Shiva Mantra JaapMantra to Protect Your Baby | Shree Bal Shiva Mantra Jaapவெள்ளிக்கிழமை அன்று  மாலையில் கேளுங்கள் வீட்டில் செல்வம் பெருகும் அஷ்டலக்ஷ்மி பாடல்கள்வெள்ளிக்கிழமை அன்று மாலையில் கேளுங்கள் வீட்டில் செல்வம் பெருகும் அஷ்டலக்ஷ்மி பாடல்கள்Kangal Neeye  -  G V Prakash Kumar  (Cover by Sithara Krishnakumar)Kangal Neeye - G V Prakash Kumar (Cover by Sithara Krishnakumar)முல்லைவனம் | கர்பரக்ஷாம்பிகை | Mullaivanam | Sri Garbarakshambikai | Amutham Musicமுல்லைவனம் | கர்பரக்ஷாம்பிகை | Mullaivanam | Sri Garbarakshambikai | Amutham Musicகருகாக்கும் அம்மனுக்கு | Karukakkum Ammanukku | Sri Garbarakshambigai | Amutham Musicகருகாக்கும் அம்மனுக்கு | Karukakkum Ammanukku | Sri Garbarakshambigai | Amutham Musicகுழந்தை பேறு வரம் தந்து கருவை காக்கும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை மந்திரம் /garbaratchambigaiகுழந்தை பேறு வரம் தந்து கருவை காக்கும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை மந்திரம் /garbaratchambigaiGarbarakshambigai song1 கர்பரக்ஷாம்பிகை பாடல்1 pregnancy songsGarbarakshambigai song1 கர்பரக்ஷாம்பிகை பாடல்1 pregnancy songs
Яндекс.Метрика