Загрузка страницы

கண்காட்டும் நுதலானும் - தேவாரம் | Kankaattum Nuthalaanum - Thevaram | Palan Tharum Pathikangal

Kankaattum Nuthalaanum - Devara Pathigam | Album : Palan Tharum Pathigangal | Singer : Bombay Saradha | Rendered : Thirugnanasambandar | Music : Veeramani Kannan | Amutham Music

கண்காட்டும் நுதலானும் - தேவார பதிகம் | இசைத்தொகுப்பு : பலன் தரும் பதிகங்கள் | குரலிசை : பாம்பே சாரதா | அருளியவர் : திருஞானசம்பந்தர் | இசை : வீரமணி கண்ணன் | அமுதம் மியூசிக்

பாடல்வரிகள் :

குழந்தை செல்வம் பெற்றிடவே ஈசனை வணங்கிடுவோம்
திருவெண்காடு திருப்பெண்ணாகடம் நாளும் சென்றிடுவோம்

கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே

மண்ணொடுநீ ரனல்காலோ டாகாயம் மதிஇரவி
எண்ணில்வரு மியமானன் இகபரமு மெண்டிசையும்
பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே

விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டுங் காட்சியதே

வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர்
ஆலமிடற் றான்அடியார் என்றடர அஞ்சுவரே

தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்
ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்
பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே

சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய
மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே

பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
உன்மத்தன் உரம்நெரித்தன் றருள்செய்தான் உறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க
விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே

கள்ளார்செங் கமலத்தான் கடல்கிடந்தான் எனஇவர்கள்
ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்
வெள்ளானை தவஞ்செய்யும் மேதகுவெண் காட்டானென்(று)
உள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே

போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
பேதையர்கள் அவர்பிறிமின் அறிவுடையீர் இதுகேண்மின்
வேதியர்கள் விரும்பியசீர் வியன்திருவெண் காட்டானென்
றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே

தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்
விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்
பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே

திருஞானசம்பந்த சம்பந்தர் சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் முதல் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார்.
திருஞானசம்பந்தர் நாயனாரின் அற்புதங்கள் (பெரியபுரணம் வழி)
ஞானப்பால் உண்டமை ஞானசம்பந்தப் பிள்ளையார் மூன்றாண்டு நிறையப் பெற்ற பின்னர் ஒரு நாள் காலை தந்தையாருடன் சீர்காழி திருகோயிலின் திருக்குளத்திற்குச் சென்றார். சிவபாத இருதயர் மைந்தனைக் கரையில் அமரச்செய்து நீருள் முழ்கி அகமருடஜெபம் செய்தார்.

தந்தையைக் காணாமையாலும், முன்னைத்தவம் தலைக்கூடியதாலும் திருத்தோணிச்சிகரம் பார்த்து “அம்மே! அப்பா!” என்று அழைத்தருளி அழுதருளினார். அப்பொழுது, திருத்தோணிபுரபெருமான் உமா தேவியாரோடும் விடைமீதமர்ந்து காட்சி கொடுத்தார். உவமையிலாக் கலை ஞானமும் உணர்வரிய மெய்ஞானமும் கலந்த திருமுலைப்பால் ஊட்டுவாயாக எனப்பெருமான் பணித்தார். அப்படியே பெருமாட்டியும் எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்தருளி உண் அடிசில் என ஊட்டினார். ஞானம் உண்ட பிள்ளையார் சிவஞானச்செல்வராய்த் திகழ்ந்தார்.
எண்ணரிய சிவஞானத்
தின்ன முதங்குழைத் தருளி
உண்ணடிசில் எனஊட்ட
உமையம்மை எதிர்நோக்கும்
கண்மலர்நீர் துடைத்தருளிக்
கையிற்பொற் கிண்ணமளித்
தண்ணலைஅங் கழுகைதீர்த்
தங்கண்ணார் அருள்புரிந்தார்.

For Music Streming & Downloads
Apple Music : https://music.apple.com/in/album/palan-tharum-pathikangal/459012099
Spotyfy : https://open.spotify.com/album/3tNb0PjoEmteqDJ6elxjxA?si=hDZxG0CARxC5euyZ1touuA
Amazon Prine Music : https://music.amazon.in/albums/B005HMIMDS?ref=dm_sh_891f-3862-647d-5bd2-cfe3d
Jiosavan : https://www.jiosaavn.com/album/palan-tharum-pathikangal/zvHx9A0po1c_
Wynk Music : https://wynk.in/music/album/palan-tharum-pathikangal/si_3698
Google Play Store : https://play.google.com/store/music/album/VeerAmani_Kannan_Palan_Tharum_Pathikangal?id=Bckjjnmmutzhadwowp5tnofb3vu&hl=en

For More Videos: https://www.youtube.com/c/AmuthamMusic
Facebook : https://www.facebook.com/amuthammusicofficial
#Palantharumpthiganagal#osarun#bombaysaradha
Amuthammusic#dailyprayers#lordsiva#thevaram

Видео கண்காட்டும் நுதலானும் - தேவாரம் | Kankaattum Nuthalaanum - Thevaram | Palan Tharum Pathikangal канала Amutham Music
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
29 июня 2020 г. 4:30:11
00:14:24
Другие видео канала
கரு உற்பத்தி மந்திரம்/Karu Manthiram/கர்ப்பரட்சாம்பிகை/karbarakshmbigai/ திருக்கருகாவூர் பாடல்கரு உற்பத்தி மந்திரம்/Karu Manthiram/கர்ப்பரட்சாம்பிகை/karbarakshmbigai/ திருக்கருகாவூர் பாடல்Garbarakshambigai song-pregnancy songs-கருவை உருவாக்கும்  சக்தி வாய்ந்த  கரு மந்திரம்-Baby boon songGarbarakshambigai song-pregnancy songs-கருவை உருவாக்கும் சக்தி வாய்ந்த கரு மந்திரம்-Baby boon songகுழந்தை வரம் அருளும் | கண்காட்டும் நுதலானும் | kankattum Nudhalanum lyrics திருவெண்காடு திருப்பதிகம்குழந்தை வரம் அருளும் | கண்காட்டும் நுதலானும் | kankattum Nudhalanum lyrics திருவெண்காடு திருப்பதிகம்16.கண்காட்டும் நுதலானும் | திருவெண்காடு | திருஞானசம்பந்தர் தேவாரம் | திருமுறைத் தமிழாகரன்16.கண்காட்டும் நுதலானும் | திருவெண்காடு | திருஞானசம்பந்தர் தேவாரம் | திருமுறைத் தமிழாகரன்Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original FullKanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Fullகுழந்தைப்பேறு அமைய - கண்காட்டும் நுதலானும் & செகமாயை திருப்புகழ் | Kankaatum Nudhalanum & Jegamayaiகுழந்தைப்பேறு அமைய - கண்காட்டும் நுதலானும் & செகமாயை திருப்புகழ் | Kankaatum Nudhalanum & JegamayaiPREGNANCY GOD || Mulaivanam song 2PREGNANCY GOD || Mulaivanam song 2ஜக மாயை - திருப்புகழ் | Jagaha Mayai - Thiruppugazh | Nithysaree Mahadevanஜக மாயை - திருப்புகழ் | Jagaha Mayai - Thiruppugazh | Nithysaree Mahadevanவேற்குழவி வேட்கை பாடல் வரிகள் குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கு பாம்பன்சுவாமிகள் அருளியதிருமந்திரம்வேற்குழவி வேட்கை பாடல் வரிகள் குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கு பாம்பன்சுவாமிகள் அருளியதிருமந்திரம்MANTRA FOR HAVING A BABY ❯ LISTEN TO 3 TIMES A DAY! ❯ LORD GANESHA MANTRAMANTRA FOR HAVING A BABY ❯ LISTEN TO 3 TIMES A DAY! ❯ LORD GANESHA MANTRAKan Kaattu Nuthalanum - கண்காட்டு நுதலானுங் - குழந்தை வரம் அருளும் திருவெண்காட்டுப் பதிகம்-ThevaramKan Kaattu Nuthalanum - கண்காட்டு நுதலானுங் - குழந்தை வரம் அருளும் திருவெண்காட்டுப் பதிகம்-ThevaramS.P.Balasubramaniyam Lingashtakam(Tamil) | எஸ்.பி.பாலசுப்ரமணியம் லிங்காஷ்டகம்("தமிழ்")S.P.Balasubramaniyam Lingashtakam(Tamil) | எஸ்.பி.பாலசுப்ரமணியம் லிங்காஷ்டகம்("தமிழ்")முல்லைவனம் | கர்பரக்ஷாம்பிகை | Mullaivanam | Sri Garbarakshambikai | Amutham Musicமுல்லைவனம் | கர்பரக்ஷாம்பிகை | Mullaivanam | Sri Garbarakshambikai | Amutham MusicJega Maayai - செகமாயை (Thiruppugazh) - குழந்தைப்பேறு தரும் திருப்புகழ் பாடல் + விளக்கம்Jega Maayai - செகமாயை (Thiruppugazh) - குழந்தைப்பேறு தரும் திருப்புகழ் பாடல் + விளக்கம்Mantra MALE Child 100% Son Santaan Gopal MantraMantra MALE Child 100% Son Santaan Gopal Mantraகருவை உருவாக்கி கலையாமல் காத்து மகப்பேறு அருளும் அன்னை கர்ப்பரட்சாம்பிகை கவசம் | Apoorva Audioகருவை உருவாக்கி கலையாமல் காத்து மகப்பேறு அருளும் அன்னை கர்ப்பரட்சாம்பிகை கவசம் | Apoorva AudioKolaru Pathigam | Bombay Saradha | LyricalKolaru Pathigam | Bombay Saradha | Lyricalகுழந்தை செல்வம் பெற்றிட 48 நாள் விரதம் இருந்து காலை மாலை தினமும் கேளுங்கள் சிவன் பாடல்கள்குழந்தை செல்வம் பெற்றிட 48 நாள் விரதம் இருந்து காலை மாலை தினமும் கேளுங்கள் சிவன் பாடல்கள்கந்த சஷ்டி கவசம் - பாராயண பாடல் வரிகள் | Kanda Sashti Kavacham with Lyrics Tamil | Vijay Musicalsகந்த சஷ்டி கவசம் - பாராயண பாடல் வரிகள் | Kanda Sashti Kavacham with Lyrics Tamil | Vijay Musicals
Яндекс.Метрика