Загрузка страницы

தேய்பிறை அஷ்டமி பைரவர் பாடல் - Theipirai Ashtami Kala Bhairavar Kavasam Tamil | Vijay Musicals

Song : Sivanadhu Vadivaai - Tamil Lyrics
Album : Danam Tharum Bhairavar
Singer : Usha Raj
Lyrics : Senkathirvanan
Music : Pradeep
Production : Vijay Musicals
#bhairavar #ashtami #vijaymusicals

பாடல் : சிவனது வடிவாய் - தமிழ் பாடல்வரிகள்
ஆல்பம் : தனம் தரும் பைரவர்
குரலிசை : உஷா ராஜ்
கவியாக்கம் : செங்கதிர்வாணன்
இசை : பிரதீப்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்

பாடல்வரிகள் :

சூரியன் மகனாம் சனீஸ்வரன் தன்
அண்ணன் எமதர்மராஜன் போக்கால்
அலட்சியமாகி கௌரவம் குறைந்து
கவலை அடைந்தான் கலங்கிடலானான்

அன்னை சாயாதேவி உடனே உன்னை
வணங்கிட அறிவுரை சொன்னாய்
உன்னருளாலே கிரஹங்களில் ஒன்றாய்
பதவியும் பெற்று உயர்ந்திடலானான்

அதனால் உன்னை சனீஸ்வர பகவான்
உருவாய்க் கொண்டு திருவடி பணிந்தான்
உள்ளம் உருகி உன்னடி வணங்க
ஊழ்வினையகலும் உயர்வுகள் சேரும்

திருஷ்டி தோஷம் வைத்து அகலும்
பில்லி சூனியம் அச்சம் விலகும்
அமாவாசை நாளில் பூஜைகள் செய்ய
ஆயிரம் ஆயிரம் நன்மைகள் கூடும்

குழந்தைப்பேறு இல்லாதவர்க்கும்
கொடுப்பாய் நீயே திருவருள் தானே
செந்நிற அரளி மலர்களினாலே
அர்ச்சனை செய்தால் பலன் தருவாயே

சிறிதளவாக மிளகினை எடுத்து அகலிடை
வைத்து நல்லெண்ணெய் ஊற்றி
தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய
இழந்தவையெல்லாம் கைவந்த சேரும்

வழக்குகள் தன்னில் வெற்றியைக் காண
அமாவாசைதோறும் அன்னதானமிடனும்
தேங்காய் சாதம் தேனென வைத்து
பைரவர் உனக்கு படைத்தால் நன்மை

தொழிலில் லாபம் வழக்கினில்
வெற்றி தொடர்ந்தே கிடைக்கும்
துன்பத்தை உடைக்கும்
அருவியைப் போலே அருள்தரும் அரசே

திருமணமாகா கன்னியும் காளையும்
ஞாயிறுதோறும் உன்னடி பணிவார்
ராகு காலத்தில் ருத்ராபிஷேகம்
விபூதி அபிஷேகம் செய்திட வருவர்

நெய்வடை செய்து மாலைத் தொடுத்து
உனக்கே சாற்றி உன்பதம் தொழுவார்
சகஸ்ரநாம அர்ச்சனை செய்து
கல்யாண யோகம் கைமீது பெறுவர்

ஒவ்வொரு சனியும் வில்வத்தினாலே
சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால்
கவ்வியத் துன்பம் கலைந்தே போகும்
நல்லவையெல்லாம் நடந்திடலாகும்
--------------

சங்கடம் தீர்க்கும் சங்கரன் நீயே
சரட்ணடைந்தோமே உன் திருவடியே
திங்களைச் சூடிய சிவனும் நீயே
தினம் தினம் உன்னை வணங்கிடுவோமே

பாம்பினை அணிந்த பைரவர் நீயே
பாவம் போக்கும் தெய்வம் நீயே
வேண்டும் வரங்கள் தருபவன் நீயே
வெற்றிக்கு உதவும் வேந்தனும் நீயே

அஷ்ட பைரவ மூர்த்தி வருக
ஆனந்த வாழ்வு இனிதே தருக
துஷ்டரை விரட்டும் தூயவன் வருக
தொழுதிடுவோர்க்கு நன்மைகள் தருக

பட்டம் பதவி எத்தனை இருந்தும்
கேட்டவர் பார்வை விழித்திட பார்க்கும்
தட்டிக் கேட்கும் தைரியம் தருவாய்
தக்க சமயத்தில் துணையாய் வருவாய்

குற்றம் குறைகள் யாவும் பொறுத்து
குழந்தையைப் போலே எங்களை காப்பாய்
பற்றுடன் உன்னை பதம் பணிவோமே
பைரவர் உந்தன் அருள் பெறுவோமே

வேதங்கள் நான்கை நாயென மாற்றி
வாகனமாக கொண்டவன் நீயே
பாதம் பணிந்தோம் பரிவினைக் கேட்டோம்
பைரவர் நீயே மனம் கனிவாயே

வைரவன் பட்டி திருத்தலம் தன்னில்
வரங்களை வாரி வழங்கிடுவோனே
புயலென துன்பம் எதிர்வரும் போது
தடுத்தாட்கொள்ளும் இறைவன் நீயே

கார்த்திகை மாதம் சஷ்டியில் நடக்கும்
சூரசம்ஹாரம் தனிச் சிறப்பாகும்
அரக்கனைக் கொன்று அமைதியை தந்து
அகிலம் காக்கும் ஆண்டவன் நீயே

வடியுடையம்மன் வளவொளி நாதர்
இணைந்தருள் செய்ய உடனிருப்பாயே
தளத்தின் தீர்த்தம் வடுக தீர்த்தம்
அடியார் வாழ்வில் தருமே மாற்றம்

பங்குனி மாத பெளர்ணமி நாளில்
நீராடி மகிழ்வோர் சிவனிடம் சேர்வார்
சித்திரைத் திங்கள் நட்சத்திரத்தன்று
நீராடும் பெண்கள் மகப்பேறடைவார்

இதுபோல் எனக்கும் பலவித நன்மை
புரியும் உனக்கு நன்றியை சொல்வோம்
அதர்மம் அழிக்க வடிவெடுத்தாயே
அருஞ்சுணையாக அருள் கொடுத்தாயே

அசுரர்கள் இழைத்த கொடுமையைக் கண்டு
அஞ்சிடலானார் தேவரும் முனியும்
காசி நகரில் பிரகதாரன் எனும்
முனிவர் செய்தார் குருபிறை யாகம்

பைரவக் கடவுள் நீயதில் தோன்றி
வருத்தம் தீர அருள் செய்தாயே
பாலகனாகத் தோன்றியதாலே
வடுகநாதனின் பெயர் பெற்றாயே

அசுரரைக் கொன்று சூலத்தில் அவரின்
உடலைக் கிழித்து குருதியைக் குடித்தாய்
ஐங்கில்மரமே தலத்தின் விருக்ஷம்
அதனைப் பணிந்தால் வருமே சுபிக்ஷம்

சுயம்பாய் நீயும் வந்தாய் என்று
சரித்திரச் சான்று கூறுவதுண்டு
அயர்வில்லாமல் எங்களைக் காக்கும்
ஐயனின் பாதம் பணிந்திட வந்தோம்

பகைவரை விரட்டும் பைரவர் வருக
பக்தரைக் காக்கும் காவலன் வருக
உலகினை ஆளும் உத்தமன் வருக
உயிரினம் உன்னை போற்றிட வருக

இடர் பல நீக்கும் ஈசன் வருக
எளியவர் வணங்கும் நேசன் வருக
சுடர்விழி காட்டும் சுந்தரன் வருக
சுகமுடன் வாழத் திருவருள் புரிக

தடைகளை புரட்டும் தலைவன் வருக
தன்னிகரில்லா இறைவன் வருக
மேடையென திரண்டு மங்கலம் தருக
மண்ணுலகெல்லாம் செழிப்புற செய்க

வைரவப்பட்டி வள்ளல் வருக
வடுகநாதனே வரங்கள் தருக
தயவுடன் எம்மை தங்கிட வருக
தாரணி செழிக்க அருள்மழை பொலிக

சிவனுருவான வடிவே சரணம்
செந்நிற அரளி அணிவாய் சரணம்
புவனம் காக்கும் பொன்னடி சரணம்
புரிவாய் புரிவாய் அருளே சரணம்

செய்வினை அகற்றும் சிவனே சரணம்
செஞ்சடையோனே திருவடி சரணம்
நெய்வடை மாலை அணிந்தாய் சரணம்
நினைத்ததை நடத்தி வைப்பாய் சரணம்

ஆலயக் காவல் புரிவாய் சரணம்
ஆதரவளிக்கும் அரனே சரணம்
உடுக்கை ஏந்திய உருவே சரணம்
உத்தமர்க்கருளும் திருவே சரணம்

சூலம் கையில் தரித்தாய் சரணம்
பிரம்மனின் அகந்தை அழித்தாய் சரணம்
காலம் மூன்றும் கடந்தாய் சரணம்
கை தொழுவோரை காப்பாய் சரணம்

சட்டைநாதனே சரணம் சரணம்
சம்ஹார பைரவா சரணம் சரணம்
அஷ்ட ரூபனே சரணம் சரணம்
அஷ்டமி தோன்றலே சரணம் சரணம்

உக்ர பைரவா சரணம் சரணம்
உன்னடி பணிந்தோம் சரணம் சரணம்
மகரகுண்டலா சரணம் சரணம்
மங்கலம் தருவாய் சரணம் சரணம்

காசி நாதனே சரணம் சரணம்
கருணா மூர்த்தி சரணம் சரணம்
நிறைவளிப்பவனே சரணம் சரணம்
நின்னருள் வேண்டும் சரணம் சரணம்

To get more updates follow us on :

Instagram - https://www.instagram.com/vijaymusicals/
Facebook - https://www.facebook.com/VijayMusical

Видео தேய்பிறை அஷ்டமி பைரவர் பாடல் - Theipirai Ashtami Kala Bhairavar Kavasam Tamil | Vijay Musicals канала Vijay Musical
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
16 ноября 2022 г. 5:00:16
00:21:30
Другие видео канала
Lakshmi Ashtothram | Sanskrit Devotional Song | Lakshmipathy | Lakshmi Devi Song | Vijay MusicalsLakshmi Ashtothram | Sanskrit Devotional Song | Lakshmipathy | Lakshmi Devi Song | Vijay Musicalsஜகம் காக்கும் | Jagam Kaakum | Ayyappan Song in Tamil with Lyrics | K S Chitra | Vijay Musicalsஜகம் காக்கும் | Jagam Kaakum | Ayyappan Song in Tamil with Lyrics | K S Chitra | Vijay Musicalsசகல சௌபாக்யம் தரும் கற்பகமே | Sakala Sowbhakyam Tharum Karpagame | Amman Song | Vijay Musicalsசகல சௌபாக்யம் தரும் கற்பகமே | Sakala Sowbhakyam Tharum Karpagame | Amman Song | Vijay Musicalsதைப்பூசம் மேல்மருவத்தூர் அம்மன் பாடல்கள் | Thaipusam Melmaruvathur Amman Songs | Vijay Musicalsதைப்பூசம் மேல்மருவத்தூர் அம்மன் பாடல்கள் | Thaipusam Melmaruvathur Amman Songs | Vijay Musicals2024 ராம நவமி பாடல்கள் | Sri Rama Navami Special Songs in Tamil | Vijay Musicals2024 ராம நவமி பாடல்கள் | Sri Rama Navami Special Songs in Tamil | Vijay Musicalsமார்கழி பதினொன்றாம் நாள் பாடல்கள் | Day 11 Margazhi Songs | Perumal Songs in Tamil | Vijay Musicalsமார்கழி பதினொன்றாம் நாள் பாடல்கள் | Day 11 Margazhi Songs | Perumal Songs in Tamil | Vijay Musicalsஉலகமெலாம் படைத்தவளே | Ulagamelam Padaithavale | Amman Song | Uthra | Vijay Musicalsஉலகமெலாம் படைத்தவளே | Ulagamelam Padaithavale | Amman Song | Uthra | Vijay Musicalsமுருகன் புன்னகை | Murugan Punnagai | Murugan Song with Lyrics in Tamil | Bharadwaj | Vijay Musicalsமுருகன் புன்னகை | Murugan Punnagai | Murugan Song with Lyrics in Tamil | Bharadwaj | Vijay Musicalsமார்கழி இருபத்தேழாவது நாள் பாடல்கள் | Day 27 Margazhi Songs | JukeBox | Vijay Musicalsமார்கழி இருபத்தேழாவது நாள் பாடல்கள் | Day 27 Margazhi Songs | JukeBox | Vijay MusicalsChandi Sahasranamavali | 1008 Names of Shakthi | Powerful Sanskrit Mantra | Vijay MusicalsChandi Sahasranamavali | 1008 Names of Shakthi | Powerful Sanskrit Mantra | Vijay Musicalsகார்த்திகை தீபம் | தீபம் மகாதீபம் | Deepam Mahadeepam | Karthigai Deepam Sivan Song | Vijay Musicalsகார்த்திகை தீபம் | தீபம் மகாதீபம் | Deepam Mahadeepam | Karthigai Deepam Sivan Song | Vijay Musicals2023 பங்குனி உத்திரம் | தெய்வ திருக்கல்யாணங்கள் | Panguni Uthiram Murugan Songs | Vijay Musicals2023 பங்குனி உத்திரம் | தெய்வ திருக்கல்யாணங்கள் | Panguni Uthiram Murugan Songs | Vijay Musicalsஅழகு முகத்தின் | Azhagu Mugathin | Murugan Song with Tamil Lyrics | T L Maharajan | Vijay Musicalsஅழகு முகத்தின் | Azhagu Mugathin | Murugan Song with Tamil Lyrics | T L Maharajan | Vijay Musicals2024 ஷீர்டி சாய் பாபா ஜெயந்தி பாடல்கள் | Sai Baba Jayanthi Songs in Tamil | Vijay Musicals2024 ஷீர்டி சாய் பாபா ஜெயந்தி பாடல்கள் | Sai Baba Jayanthi Songs in Tamil | Vijay Musicalsமாசி மாசம் அம்மன் பாடல்கள் | Maasi Maasam Amavasai Amman Songs Tamil - JukeBox | Vijay Musicalsமாசி மாசம் அம்மன் பாடல்கள் | Maasi Maasam Amavasai Amman Songs Tamil - JukeBox | Vijay Musicalsநினைப்பது எல்லாம் | Ninaippathu Ellam | Amman Song | Rajarajachozhan | Vijay Musicalsநினைப்பது எல்லாம் | Ninaippathu Ellam | Amman Song | Rajarajachozhan | Vijay Musicalsஉண்ணாமுலை உமையாளொடும் | Unnamulai - Mudhal Thirumurai | Panniru Thirumurai | Vijay Musicalsஉண்ணாமுலை உமையாளொடும் | Unnamulai - Mudhal Thirumurai | Panniru Thirumurai | Vijay Musicalsபொன்னும் மெய்ப்பொருளும் | Ponnum Meiporulum | Sivan Song Tamil | Panniru Thirumurai | Vijay Musicalsபொன்னும் மெய்ப்பொருளும் | Ponnum Meiporulum | Sivan Song Tamil | Panniru Thirumurai | Vijay Musicalsமூகாம்பிகையே | Mookambigaiye Logambigaiye | Amman Song in Tamil | K J Yesudas | Vijay Musicalsமூகாம்பிகையே | Mookambigaiye Logambigaiye | Amman Song in Tamil | K J Yesudas | Vijay Musicalsஆருத்ரா தரிசனம் பாடல்கள் | Arudra Darisanam - Sivan Songs in Tamil | Thiruvathirai | Vijay Musicalsஆருத்ரா தரிசனம் பாடல்கள் | Arudra Darisanam - Sivan Songs in Tamil | Thiruvathirai | Vijay Musicals
Яндекс.Метрика