Загрузка страницы

TPM | Songs | Tamil | 2021 l Annual Convention | Lyrics 👇 | Chennai | Jukebox |

Songs
0:14 -Vaasalgalay, uyarungal​
8:34 - En Yeisuvay endhan sneigidharay ​
16:40 - Undhan anbin aaliku karaiyay illai
24:38 - Balathinaalum alla paraakramathaalum alla ​
31:51 - Uyirtheluvar suthar parandhuyarvar
வாசல்களே, உயருங்கள்,
மகிமையின் ராஜா பிரவேசிக்கிறார் சேனைகளின் கர்த்தராம் இவர்
பராக்கிரமசாலி இவரே கன மகிமை துதி உமக்கே
ஆமென் ! அல்லேலூயா !

1.உம் சமுகம் எங்கள் முன் செல்வதால்
உம் இளைப்பாறுதல் அடைகின்றோம்
ஜீவனோ மரணமோ ஏதாகிலும் - தேவ
அன்பினின்று பிரியாமல் காத்தீர்

2 உந்தன் பெலத்தில் நீர் எழுந்தருளி
உயர் பெலத்தால் எங்கள் இடைக்கட்டினீர்
சேனைக்குள் பாய்ந்து ஜெயமெடுத்தோம் -உயர்
மதிலையும் தாண்டிட பெலனளித்தீர்

3.வல்லமை அதிகாரமுள்ள வார்த்தை
வாய்க்குமே அனுப்புகிற காரியம்
கேட்கும் என் வார்த்தையில் நிலைத்திருந்தால் - நீ
கேட்கிறவைகளைக் கொடுப்பேன் என்றீர்

4. உந்தன் தீர்மானத்தால் அழைக்கப்பட்டு
உம்மில் அன்பு வைத்த எங்களுக்கு
சகலமும் நன்மைக்காய் நடப்பதினால் - நாங்கள்
சந்தோஷமாய் என்றும் முன் செல்கிறோம்

5. ஆதி அன்பால் அன்புகூர்ந்தோருக்கு
ஆதி கிரியைகள் செய்வோருக்கும்
ஆயத்தமாக்கிய நன்மைகளை - நாங்கள்
ஆயத்தமுள்ளோராய்ச் சுதந்தரிப்போம்

#2
1.என் இயேசுவே எந்தன் சிநேகிதரே
எல்லா காலத்திலும் சிநேகித்து வந்தீர்
மனதார உம்மோடு பேசிடுவேன்
உள்ளத்தை உம்மிடம் ஊற்றிடுவேன்

உம் மார்பில் சாய்ந்து உம்மோடு இருப்பேன்
பொய்யுலகை நாடி ஓடிடமாட்டேன்
நேசரின் நேசத்தில் இளைப்பாறுவேனே
இயேசுவே நீர் போதுமே

2.தேவனால் கூடாததொன்றில்லையே
ஒருவராய் அதிசயம் செய்திடுவாரே
இருதய பாரத்தைச் சொல்லிடுவேன்
அகமதில் ஆறுதல் அடைந்திடுவேன்

3.சிலுவையில் கோரமாய்ப் பாடுபட்டு
இரத்தத்தை முற்றிலும் எனக்காய் சிந்தினீர்
ஜீவனை ஊற்றின மா தயவே !
என் ஜீவனை வார்த்து சிநேகிப்பேனே

4. என்னை உமக்காக ஒப்புவித்தேன்
வாழ்வது இனிமேல் உமக்காகத் தானே
அபிஷேகத்தால் உம்மோடொன்றாக்கினீர்
உம்மில் நிலைத்துப் பிழைத்திடுவேன்

5 .தாயின் கருவில் உருவாகுமுன்னே
கண்டெடுத்தீரே உம் அன்பினால் என்னை
பரிசுத்தனாய்க் குற்றமில்லாதோனாய் நிறுத்திடுவீரே உம் முன்பில் என்னை

#3
1.உந்தன் அன்பின் ஆழிக்குக் கரையே இல்லை
உந்தன் நேச வாழ்வுக்கு முடிவே இல்லை - அன்பில்
நீளம் அகலமும் உயரம் ஆழமெல்லாம்
நித்தியம்தான் வர்ணிக்கும் நித்ய காலமாய்

இயேசுவே என்னையும் நேசித்தீர்
உம் அன்பிற்கீடாய் என்ன செய்குவேன்
நேசா ! என் நேசமெல்லாம் நேசர் உமக்கே .
நானும் உமக்கே சொந்தமே

2. பாவ துரோகம் எண்ணாது பதில் செய்யாது
குரூர வாதை ஏற்று நேசித்ததேனோ - விண்ணில்
பொற்காயம் ஒவ்வொன்றாய் முத்தி செய்துமே யான்
பொன்னேசுவின் நேசத்தில் கண்ணீர் சொரிவேன்

3.மேற்கு கிழக்கு தூரமாய் தோஷமெல்லாம்
மாற்றி மறந்தீர் மன்னித்தெறிந்ததையும் - மேலே
மன்னவா உம்மையல்லால் வேறே ஆசை இல்லை
மகத்துவ கானம் பாடி அணைத்திடுவேன்

4. வானம் பூமிமேல் உயர்ந்தது போலவே
விண் ஆவியால் தூய வாழ்வீந்தீரே - வானில்
வனப்புமிக ஜொலிக்கும் உயர் கோபுரங்களை
வானவரோடு சுற்றி அகமகிழ்வேன்

5.சேவை செய்யும் தாசரும்மோடிருப்பர்
சேவையில் சுத்தரோடென்னைக் காப்பீரே - நேசர்
இயேசுவின் அன்பில் மூழ்கி ஆழத்தை அறிய
சீயோனில் சேவிப்பேன் யுகாயுகங்களாய்

#4
பலத்தினாலும் அல்ல பராக்கிரமத்தாலும் அல்ல
உம் ஆவியாலே எல்லாம் ஆகிடும்
அன்பரே உந்தன் பாதம் அண்டி நான் வந்துவிட்டேன்
உம் ஆவியாலே அபிஷேகியும்

1.குறைகளை மறைப்பவன் வாழ்வடையான்
அறிக்கையைச் செய்கிறவன் தாழ்வடையான் பரிசுத்தனாகவே நான் வாழ்ந்திடவே
பாவியாம் என்மேல் இரங்கிடுமே

2.சுயமாக நான் ஒன்றும் செய்யாமலே
நிதானித்து உந்தன் சித்தம் செய்திடவே
சமர்ப்பித்து உந்தன் பாதம் அடிபணிந்தேன்
ஆவியால் மறுரூபம் ஆகிடுவேன்

3.எதிரியாம் பிசாசை நான் வீழ்த்திடவே
நீர் ஜெயித்தது போல ஜெயித்திடவே
வசனத்தில் நிலைத்திடச் செய்திடுமே
உன்னதா ! உம்மோடென்னை இணைத்திடுமே

4.விருதினைப் பெற்றுக்கொள்ள உதவிடுமே
விருதாவாய் ஓடிடாமல் காத்திடுமே
பின்னானவைகளை நான் மறந்திடுவேன்
உம்மை நான் அடைந்திட தொடர்ந்திடுவேன்

5.என்று நீர் வருவீரோ என் இயேசுவே
ஏங்குதென் உள்ளம் உம்மோடிணைந்திடவ
நேசத்தின் அனல் என்னில் எரிந்திடுதே
நேசரை என்றென்றுமாய் மணந்திடவே

#5
உயிர்த்தெழுவர் சுத்தர் பறந்துயர்வர்
உயிர்த்தெழுந்த கிறிஸ்துவோடு ஏகுவர்
உறங்கிடும் சுத்தரோ உணர்ந்தெழும்பிடுவர்
உயிரோடு இருப்போர் மறுரூபமடைவர்

1.அழிவுள்ள சரீரம் அழியாமை அடைய
அழிவில்லா வித்தால் ஜெநிப்பித்தாரன்றோ
அழியாமை ஜீவனும் சுவிசேஷத்தால் பெற்றோர்
அக்ஷயர் ஆகுவர் க்ஷணப்பொழுதிலே

2.மகிமையினால் கிறிஸ்து உயிர்தெழுந்ததுபோல்
மகிமையடையும் ஈன சரீரமும்
மரணத்தின் சாயலில் கிறிஸ்துவோடிணைந்தவர்
மறுரூபம் அடைவர் நொடிப்பொழுதிலே

3.பலமுள்ளதாய் மாறும் பலவீன சரீரம்
வல்ல ஆவியால் பெலன் அடைந்துமே
ஆன்ம சக்தியால் மாமிசமும் மாய்த்தவர்
பலங்கொண்டு மறைவர் கணப்பொழுதிலே

4.பரிசுத்தமுள்ள ஆவியால் உயிர்த்ததுபோல
ஆவியின் மேனி பெறும் ஜென்ம தேகம்
நித்திய ஆவியால் மனம் தூய்மை அடைந்தோர்
தூயராய் மாறுவர் இமைப்பொழுதிலே

5.சிலுவையைச் சுமந்து ஜீவனைப் பகைத்தவர்
ஜெயிப்பர் சாவினைத் தரிப்பர் சாவாமை
ஜீவனில் முடிவில்லாது இயேசுவுடனே
ஜீவனில் வாழுவர் சீயோனிலென்றுமேPlease | Subscribe| Like| Share | Comment|

Видео TPM | Songs | Tamil | 2021 l Annual Convention | Lyrics 👇 | Chennai | Jukebox | канала Judy
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
11 марта 2021 г. 9:24:45
00:40:29
Яндекс.Метрика