Загрузка страницы

TPM TAMIL Songs 2020|LYRICS 👇|International Convention Songs Chennai

#TPMConvention2020
TPM SONGS TAMIL 2020|International Convention Songs Chennai
1.Ennippaar Nee - 0:17 👆
2.Silivain Nilalil - 6:30 👆
3.Ivarey Nam Dheivan - 15:23 👆
4.Kaala Kaalamai -22:37 👆
5.Seeyon Seeyon - 30:34 👆

📌1.COUNT HIS BENEFITS
எண்ணிப்பார் நீ எண்ணிப்பார்
தேவன் செய்த நன்மைகள் எண்ணிப்பார்
கண்ணின் மணி என காத்து உள்னைத் தம்
கரத்தில் சுமந்ததை எண்ணிப்பார்

1 .வாக்குத் தவறாது தேவன் உன்னை
வாக்கின்படி காத்தார் எண்ணிப்பார்
போக்கிடம் இன்றி நீ தவித்த வேளை
போஷித்துக் காத்ததை எண்ணிப்பார் - எண்ணி

2 .தாயும் தந்தையும் உள்னை மறந்தபோதும்
தாங்கி அணைத்ததை எண்ணிப்பார்
தாய் மறந்தாலும் நான் மறவேன் என
தயவாய்க் காத்ததை எண்ணிப்பார் - எண்ணி

3. அறியாமையுள்ள காலங்களைத் தேவன் பாராமல் இருந்ததை எண்ணிப்பார்
அறிந்தும் அறியா செய்த பிழைகள்
அனைத்தும் பொறுத்ததை எண்ணிப்பார் - எண்ணி

4. தூரமாய்ச் சென்ற உன்னைத் தூக்கிச் சுமந்து
மந்தையில் சேர்த்ததை எண்ணிப்பார்
ஆரங்கள் சூட்டி அலங்கரித்து
ஆலயமாக்கினார் எண்ணிப்பார் - எண்ணி

5. சீக்கிரம் வருவேன் என்றுரைத்தவரை
சீக்கிரம் காண்பதை எண்ணிப்பார்
துயரங்கள் நீக்கி கண்ணீர் துடைத்து தம்
மார்போடு அணைப்பதை எண்ணிப்பார் - - எண்ணி

2.📌THE SHADOW OF THE CROSS
சிலுவையின் நிழலில் தங்கி நான்
என்றும் இளைப்பாறுவேன் தங்கிடுவேன் தாபரிப்பேன் கல்வாரி நேசரின் பாதத்திலே

1. சிலுவையில் இயேசுவை நான் காணும் நேரமெல்லாம்
சிந்தித்தென் ஜீவியத்தை சீர்செய்குவேன்
அங்கமெல்லாம் அடிபட்டு தொங்குகிறார் இயேசுவே
தூயனாய் என்னையும் மாற்றிடவே - சிலுவையின்

2 .அகோரப் பாடுகளால் அந்தக்கேடடைந்தவராய்
என் பாவம் போக்க ஜீவன் ஈந்தவரே
எண்ணில்லா அன்பினையே என்னுள்ளம் நினைக்கையிலே
ஒப்புவித்தேன் என்னைச் சுத்தனாக்கும் -சிலுவையின்

3 .கொல்கொதா நாயகரின் கொடூர மரணமதை
தியானித்தென் ஓட்டமதை ஓடிடுவேன்
மூன்றாணி மீதினில் கள்வரின் மத்தியிலே முள்முடி சூடினார் எனக்காகவே - சிலுவையின்

4 .தாங்கொண்ணா வேதனை சுற்றி வதைத்தநேரம்
தாசனாம் எந்தனுக்காய் ஏற்றவரே .
சிலுவை மரணமோ கொடியதோர் வேதனை எப்படிப் போற்றுவேன் என் இயேசுவை - சிலுவையின்

5. கல்வாரி அன்பினால் கழுவி எந்தனை நீர் கறைதிரை அற்றோனாய் மாற்றினீரே
எக்காளச் சத்தத்தைக் கேட்டிடும் நாளிலே கர்த்தராம் இயேசுவை சந்திப்போமே - சிலுவையின்

3.📌HE IS OUR GOD
1 .இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர்
சர்வவும் சிருஷ்டித்த சர்வவல்லவர்
சகலமும் தம் வசனம் தாங்குவதாலே
எல்லாமே தம் நிலையில் நிற்கிறது

வானாதி வானங்களே ! கெம்பீரமாய்ப் பாடுங்கள் பூமியின் குடிகளே ! களிகூர்ந்து பாடிடுவோம் தேவன் தம் ஜனத்தின் கண்ணீரைத் துடைத்தார் தேவ ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்

2 .இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர் ஆழத்தில் அதிசயங்கள் செய்பவர்
அலைகளே மிஞ்சிவராதே என்றதால்
ஆறுதல் அடைந்தோராய் முன் செல்கிறோம் -
வானாதி

3. இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர் மரணத்தை ஜெயமாக விழுங்கியவா மரணவாசலினின்று தூக்கி எடுத்ததால்
ஜீவ மார்க்கத்தில் சாட்சியாய் நிற்கிறோம் - வானதி

4 .இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர் முற்றிலும் அழகில் சிறந்த நேசர்
தினம் உந்தன் நுகம் ஏற்றுப் பின் செல்வதாலே
திவ்ய சுபாவத்தில் சிறந்தோராவோம் -வானதி

5 .இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர்
சர்வ பூமியையும் மகிழ்விப்பவர் இணைந்துயர்ந்து வளர்ந்தேறுவதாலே இணையில்லா இராஜாவின் நகரமாவோம் - வானதி

4.📌GOD IS ON MY SIDE
1 .காலா காலமாய் நேசரென் இயேசுவே ஞாலமகிலவும் உம் புகழ் சாற்றுவேன்
கானக வழியதில் ஜீவ ஒளியாய்
காருண்யனே என்னையும் கருத்தாய்க் காத்தீரன்றோ

இயேசுவே நீர் எந்தன் பட்சமானதால் எனக்கெதிராய் இருப்பவள் யார் ?
நல் ஆயனும் நீரே நல் நேயனும் நீரே
நேர் பாதை காட்டி காத்திடும் என் தீபமும் நீரே

2. பாதை தவறியே மாய்ந்த எந்தனுக்காய்
பாதை சத்தியம் ஜீவனாய் உதித்தே
மன்னித்து மறந்தீர் என் பாவம் அனைத்தும் மந்தையில் சேர்த்திரன்றோ தந்தையே உமக்கென் செய்வேன்

3 .பொன்னும் வெள்ளியும் அக்கினி சூளையில்
புடமிட்டு சுத்தம் செய்திடுவது போல்
உபத்ரவத்தின் குகையில் சோதித்தென்னை உத்தமனாய் நிறுத்த தெரிந்தெடுத்திரன்றோ - இயோவே

4 .துரைத்தனம் அதிகாரம் வல்லமையும்
திருச் சபைக்கெதிராய் போராடிடுதே
திடன் அடைந்து தைர்யமாய் போராடிட
ஆவியின் பெலன் ஈந்திடும் உம்மோடு ஜெயம் பெறவே - இயேசுவே

5 .உமக்குப் பயந்து உம் நாமம் தியானிப்போரை உமக்காய்ச் சேர்த்திட நேசர் நீர் வருவீர்
உமது சம்பத்தைக் கடாட்சிக்கும் நாளில் உம்முடன் இயேசுவே நான் சீயோனில் சேர்ந்திடுவேன்- இயேசுவே

5.📌WAY TO JOYOUS AND GLORIOUS ZION
சீயோன்! சீயோன் ! !
சர்வ பூமியின் மகிழ்ச்சியும் நீயே
மாமகா ராஜன் திவ்ய நகரமே
மகிமையாய் இலங்கிடும் சிகரமே

1 .தேகமாம் திரைச்சீலையைக் கிழித்தே நூதனமாம் ஜீவமார்க்கமதைத் திறந்தார்
இயேசுவோடு பாடுகள் சகித்த சுத்தர்கள் சீயோனிலே ஆளுகை செய்வர் - சீயோன் !

2 .துக்கமும் கிருபையும் நிறைந்தோராய்
சத்தமிடா ஆட்டைப் போல தத்தம் செய்தாரே அழுகையின் தாழ்வதில் நிதம் உருவ நடந்தே
பெலன் அடைந்தே சீயோன் சேருவர் - சீயோன் !

3 .சாலகமாம் நிந்தை வழி ஏகியே
சாலேமையும் சீயோனையும் வென்றடைந்தனர் இயேசுவோடு நிந்தையைச் சுமந்து சென்றவர் சீயோனிலே சந்தோஷிப்பரே - சீயோன் !

4. இருதயத்தின் செவ்வையான வழியதில் தீட்டும் திருடும் அருவருப்பும் பொய்யர் அதிலில்லை கற்புள்ளவராயும் கபடமில்லாதவராய் சீயோனிலே காணப்படுவர் - சீயோன் !

5 .பரிசுத்தமே அதின் அலங்காரமே
பரிசுத்த பர்வதத்திலே வாசம் செய்பவர்
ஆவி ஆத்மா தேகமதில் பரிசுத்தருமே
சீயோனைச் சுதந்தரிப்பரே - சீயோன் !

Видео TPM TAMIL Songs 2020|LYRICS 👇|International Convention Songs Chennai канала Early Lark
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
11 марта 2020 г. 23:30:44
00:38:02
Другие видео канала
TPM MALAYALAM Songs 2020|International Convention Songs ChennaiTPM MALAYALAM Songs 2020|International Convention Songs ChennaiTPM Message / முழங்கால் ஜெபம் / Bible Study / Bible Sermons / pastor Durai / TPM / TamilTPM Message / முழங்கால் ஜெபம் / Bible Study / Bible Sermons / pastor Durai / TPM / TamilTPM Tamil Songs Medley | Composed by SIS.EBEN |TPM Tamil Songs Medley | Composed by SIS.EBEN |Tpm Tamil Song 531 | En nesar thedi vanthar | என் நேசர் | Tamil LyricsTpm Tamil Song 531 | En nesar thedi vanthar | என் நேசர் | Tamil LyricsTPM | Youth Meeting | 2020  | All Songs | Lyrics 👇 | Jukebox |TPM | Youth Meeting | 2020 | All Songs | Lyrics 👇 | Jukebox |TPM Tamil Song No. 456 - Ulaga thottram munnennaiyumTPM Tamil Song No. 456 - Ulaga thottram munnennaiyumTPM TAMIL SONGS | 526 TO 558TPM TAMIL SONGS | 526 TO 558TPM Tamil Song No. 480 - Nesare Um Nesam NinaikkaiyilTPM Tamil Song No. 480 - Nesare Um Nesam Ninaikkaiyilஉபத்திரவங்கள் ஏன் வருகிறது / tribulation / pas durai message / tamil / TpM Messageஉபத்திரவங்கள் ஏன் வருகிறது / tribulation / pas durai message / tamil / TpM Messageவேதம் கொரோனாவை பற்றி சொல்வது என்ன ?|WHAT BIBLE SAYS ABOUT CORONA? | TPM Messages | Christian messageவேதம் கொரோனாவை பற்றி சொல்வது என்ன ?|WHAT BIBLE SAYS ABOUT CORONA? | TPM Messages | Christian messageTPM Songs | TPM Tamil Songs | 2014 - 2018 Mix Songs | Jukebox | The Pentecostal Mission Songs | ZPMTPM Songs | TPM Tamil Songs | 2014 - 2018 Mix Songs | Jukebox | The Pentecostal Mission Songs | ZPMTPM SONGS | TPM Songs Tamil 2019 | International Convention songs | With SubtitlesTPM SONGS | TPM Songs Tamil 2019 | International Convention songs | With SubtitlesTPM SONG-YESU ENNUM ENNUM NALLAVANALLO….TPM SONG-YESU ENNUM ENNUM NALLAVANALLO….Malayalam song TPM annual convention 2020Malayalam song TPM annual convention 2020டி பி எம்  சாங்ஸ் காலெக்ஷன்ஸ் தமிழ்  |  பெந்தேகோஸ்தே பாடல்கள்டி பி எம் சாங்ஸ் காலெக்ஷன்ஸ் தமிழ் | பெந்தேகோஸ்தே பாடல்கள்TPM Songs | Sis Glory Songs | Tamil Christian Songs | The Pentecostal Mission | CPMTPM Songs | Sis Glory Songs | Tamil Christian Songs | The Pentecostal Mission | CPMTpm Messages / உங்கள் சத்துருக்கள் பின்னிட்டு திரும்புவார்கள் / Pas Durai / Christian Message TamilTpm Messages / உங்கள் சத்துருக்கள் பின்னிட்டு திரும்புவார்கள் / Pas Durai / Christian Message TamilTPM TAMIL SONGS | 501 TO 525TPM TAMIL SONGS | 501 TO 525TPM SONGS | TPM TELUGU SONGS 2020 | Vijayawada Convention Songs | The Pentecostal Mission | ZPMTPM SONGS | TPM TELUGU SONGS 2020 | Vijayawada Convention Songs | The Pentecostal Mission | ZPM
Яндекс.Метрика