Загрузка страницы

Bala Sayeebaba Kavacham

அன்றாட வேலையில்
அன்போடு அழைக்கையில்
ஶ்ரீ பாலசாயீ எனை
அரவணைத்து காக்க

நித்தமும் நின் நாமம்
நெறியோடு சொல்கையில்
ஶ்ரீ பாலசாயீ எனை
நிறைவாய் காக்க

உதியை உன் நாமம்
சொல்லி அணிகையில்
ஶ்ரீ பாலசாயீ எனை உன்னதமாய் காக்க

ஆதாயம் ஏதுமின்றி அன்னதானம் செய்கையில்
ஶ்ரீ பாலசாயீ எனை
அன்போடு காக்க

எளியோர்க்கு இயன்ற
உதவி புரிகையில்
ஶ்ரீ பாலசாயீ எனை
என்றென்றும் காக்க

தன்னடக்கத்தோடு 
தர்ம வழி நடக்கையில்
ஶ்ரீ பாலசாயீ எனை
தாராளமாய் காக்க

எல்லோரையும் நேசித்து
எளிமையாய் வாழ்தலில்
ஶ்ரீ பாலசாயீ எனை
எட்டுத் திக்கிலும் காக்க

பக்தியோடு பாங்குடனே
பரம்பொருளை வணங்கலில்
ஶ்ரீ பாலசாயீ எனை
பரவசமாய் காக்க

திமிரில்லா தியாகத்துடனே
தங்கள் திருவடி தொழுகையில்
ஶ்ரீ பாலசாயீ எனை
திருப்தியாய் காக்க

சிதறாத நம்பிக்கையோடு
சித்தனை தொடர்கையில்
ஶ்ரீ பாலசாயீ எனை
சீரடி நாதனாய் காக்க

பொறுமையோடு
பிரச்சினையை எதிர் கொள்கையில்
ஶ்ரீ பாலசாயீ எனை
புத்தனாய் காக்க

தியானத்தை தினமும்
கடைப்பிடிக்கையில்
ஶ்ரீ பாலசாயீ எனை
திகம்பரனாய் காக்க

பயமின்றி பாலன் உன் பாதம் பற்றிக்கொள்கையில் 
ஶ்ரீ பாலசாயீ எனை
பாண்டு ரங்கனாய் காக்க

ஞாயிறும் திங்களும்
ஞாலத்தின் தன்னலமற்ற சேவையை அறிகையில்
ஶ்ரீ பாலசாயீ எனை
ஞானகுருவாய் காக்க

மும்மலம் மூன்றையும்
முற்றிலும் தொலைக்கையில்
ஶ்ரீ பாலசாயீ எனை
மும்முடி பாலயோகியாய் காக்க

அனைத்திலும் உன் கருணையை உணர்கையில்
ஶ்ரீ பாலசாயீ எனை
அன்னையாய் காக்க 

காக்க காக்க
காவல் தெய்வம்
பால சாய் ராம் காக்க

பார்க்க பார்க்க
பாவம் தொலைக்கும்
பாலசாய் ராம் பார்க்க

நீக்க நீக்க
நீள்வினை அறுக்கும்
பாலசாய் ராம் நீக்க

சரணம் சரணம் அடைந்தோம்
சாயி உந்தன் பாதம்
சரணம் சரணம் சத்குரோ சரணம் 🙏🙇‍♂

Видео Bala Sayeebaba Kavacham канала Devaki Mohan
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
18 апреля 2023 г. 21:47:59
00:01:49
Яндекс.Метрика