Загрузка страницы

Mettur Dam History | மேட்டூர் அணையை பற்றி நீங்கள் அறிந்திராத பல ரகசியங்கள் | Tamil | Thisaikaati

சேலம் மேட்டூர் அணை- அறிந்ததும்.... அறியாததும்

காவரி ஆற்றின் நீர்தேக்க வசதிக்காக கட்டப்பட்ட மேட்டூர் அணை, சேலம் மாவட்டத்தில் உள்ளது. ’ஸ்டேன்லி நீர்தேக்கம்’ என்றும் குறிப்பிடப்படும் இந்த அணை 1934ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.தமிழகத்தின் மிகப்பெரிய அணையாக உள்ள மேட்டூர் அணை நீர்தேக்கம், அது கட்டி முடிக்கப்படும் வரை ஆசியாவின் மிக உயரமான அணையாகவும், உலகிலேயே பெரிய அணையாகவும் இருந்தது.

1801ம் ஆண்டும் முதல் 1923ம் ஆண்டு வரை மைசூர் சமஸ்தானம் முட்டுக்கட்டை போட்டு வந்ததால் மேட்டூரில் அணை கட்டுவதற்கான ஆங்கில அரசின் முயற்சி கைவிடப்பட்டு வந்தது.காவிரியின் ஆற்றின் மீது மேட்டூரில் அணை கட்டுவதற்கு ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்... 1801ம் ஆண்டு ஆங்கிலேயே கிழக்கிந்திய சபை திட்டமிட்டது. ஆனால், அன்றைய மைசூர் அரசர்கள் இதற்கு ஒப்புதல் வழங்க மறுத்தனர். இதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

காவிரி ஆற்றின் பாதையில் மேட்டூரில் அணை கட்ட வேண்டும், அதனால் தமிழக விவசாயிகளுக்கு நன்மை விளையும் என்பதை அறிந்த கிழக்கிந்திய சபை மேட்டூர் அணை திட்டத்தை மீண்டும், மீண்டும் எடுத்துக் கொண்டு வந்தது. அப்படியாக மீண்டும் 1835ம் ஆண்டு சர் ஆர்தர் காட்டன் என்ற அணை கட்டுமான பொறியாளர் மூலமாக மைசூர் அரசர்களிடம் பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது ஆங்கிலேயே அரசு. ஆனால், மீண்டும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் பிரிட்டிஷ் அரசு இந்த திட்டத்தை கைவிட்டது.

1923ம் ஆண்டு மீண்டும் மேட்டூர் அணை திட்டம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இம்முறை, திருவாங்கூர் சமஸ்தான திவான் பகதூர் சர். சி.பி. ராமசாமி அய்யர் முன், தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒன்றாக அணிதிரண்டு சென்று அணையின் முக்கியத்துவத்தை விளக்கி பேசினார்கள். இவர் மூலமாக மீண்டும் மைசூர் அரசிடம் பேசி ஒப்புதல் வாங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

சர் சிபி ராமசாமி அவர்கள், மைசூர் அரசின் திவான் பகதூர் விஸ்வேஸ்வரய்யா என்பவரை சந்தித்து மேட்டூர் அணையின் திட்டம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து களானது பேசினார். இங்கே மேட்டூர் அணைக்கு முக்கியத்துவம் எடுத்துக் கொண்டு சிபி ராமசாமி அய்யா அவர்கள் மைசூர் அரசிடம் ஒப்புதல் வாங்க முயற்சிக்க காரணம் என்று மற்றொரு தகவலும் அறியப்படுகிறது. சர் சிபி ராமசாமி அய்யாவின் மூதாதையர்கள் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்களே என்று கூறப்படுகிறது.

சர் சிபி ராமசாமி அய்யா அவர்கள் பேசியும் கூட மைசூர் அரசு ஒப்புதல் வழங்கவில்லை. எனவே, அணை இல்லாத காரணத்தால் ஏற்படும் வெள்ளத்தினால் ஒவ்வொரு ஆண்டும் தஞ்சை விவசாயிகள் சந்திக்கும் புகழ், வெள்ள இழப்புக்கு நஷ்ட ஈடாக மைசூர் அரசு வருடம் முப்பது இலட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் ஒன்று அனுப்பினார்.

அன்றைய மதிப்பில் (1920களில்) ஒரு பவுன் தங்கத்தின் விலையே ரூ.30/- தான். எனவே, முப்பது இலட்சம் என்பது வருடத்திற்கு ஒரு இலட்சம் பவுன் அளிப்பதற்கு சமம். இவ்வளவு பெரும் தொகை அளிப்பதற்கு பதிலாக, மேட்டூரில் அணைக் கட்டுவதற்கு சம்மதம் தெரிவித்துவிடலாம் என்று மைசூர் சமஸ்தானம் கடைசியாக மேட்டூர் அணை கட்ட ஒப்புதல் வழங்கியது. இங்கே ஒப்புதல் வழங்க உறுதுணையாக இருந்து, மைசூர் சமஸ்தானத்திடம் எடுத்துரைத்து பேசியவர் திருவாங்கூர் திவான் பகதூர் சர் சிபி ராமசாமி அவர்கள் தான்.

அதன்படி, சென்னையில் பணியாற்றி வந்த இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளர் ஸ்டேன்லி மூலம் 1924ம் ஆண்டில் மேட்டூரில் அணை கட்டுவதற்கான கட்டமைப்பு பணிகள் தொடங்கின.

1924-25 ஆண்டில் மேட்டூர் அணை கட்ட துவங்கி. முடிவடைய ஒன்பது ஆண்டுகள் பிடித்தது. மேட்டூர் அணையை இங்கிலாந்தை பூர்விகமாக கொண்டு சென்னை மாகாணத்தில் வசித்து வாத பொறியாளர் ஸ்டேன்லி என்பவர் தான் கட்டினார். சுமார் 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 124 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையில் 120 அடி வரை நீரை சேமித்து வைக்க முடியும்.

சுண்ணாம்பு மற்றும் காரையில் கட்டப்பட்ட மேட்டூர் அணை, இன்றும் அணை கட்டுவதற்கான தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய முன்மாதிரியாகவே பார்க்கப்படுகிறது.

மேட்டூர் அணை கட்டப்பட்ட பிறகு தான், அணை முழுவதையும் கல்லால் கட்ட வேண்டிய அவசியமில்லை என்பது தெரியவந்தது. மேலும் தேக்கப்பட்ட நீரை மதகுகள் வழியாக ஆற்றுக்கும், கால்வாய்களுக்கும் விடுவதற்கான முறைகளும் உருவாக்கப்பட்டன.

முன்னர் இந்த அணையினால் தமிழ்நாட்டில் 20 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெற்றன. தமிழ்நாட்டில் மொத்த சாகுபடியே அப்போது 16 லட்சம் ஏக்கரில் தான் நடைபெற்றது.

தமிழகத்தில் பிலிகுண்டுலு வழியாக வரும் காவிரி, ஒகேனக்கல் அருவியை அடைகிறது. பின் காவிரியானது மேட்டூர் அணையை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது.

கர்நாடாக குடகு மலையிலிருந்து தமிழகம் வரும் காவிரி, மேட்டூர் அணையை அடையும் வழியில் சுமார் 13 கிராமங்கள் இருந்தன. அந்த கிராம மக்கள் வாழ்ந்த வீடுகள், அவர்கள் வழிப்பட்ட கோயில்களும் அந்த மேட்டூர் அணை பகுதியில் இருந்தன.

அவர்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்ட பிறகே, மேட்டூர் அணை கட்டப்பட்டது. மழை குறைந்து மேட்டூர் அணையில் நீர் வரத்து குறைந்தால் அங்கியிருந்த இடம்பெயர்ந்த கிராம மக்கள் வழிப்பட்ட கோயில்கள், அதிலிருக்கும் சிற்பங்களை தற்போதும் பார்க்கலாம்.

கொள்ளளவு!

கட்ட துவங்கிய நாள்: 20.07.1925
கட்டி முடித்த நாள்: 21.08.1934
கட்டி முடிக்க ஆன செலவு : ரூ.4.80 கோடி
நீளம்: 5,300 அடி
கொள்ளளவு: 93.50 டி.எம்.சி
அதிகபட்ச உயரம்: 214 அடி
அதிகபட்ச அகலம்: 171 அடி
சேமிப்பு உயரம்: 120 அடி
நீர்ப்பிடிப்பு பரப்பளவு: 59.25 சதுர மைல்

ஒரு TMC என்பது நூறு கோடி கன அடி ஆகும். மேட்டூர் அணையில் ஒரு TMC நீர் குறைந்தால். அணையின் நீர் இருப்பு உயரம் 1.25 அடி குறையும். அணையில் ஒரு அடி நீர் குறைந்தால் 0.75 TMC நீர் அளவு குறையும். மேட்டூர் அணைக்கு கர்நாடகத்தில் இருக்கும் கபினி மற்றும் கிருஷ்ண ராஜ சேகர அணைகளில் இருந்து நீர் வருகிறது.
#thisaikaati

Видео Mettur Dam History | மேட்டூர் அணையை பற்றி நீங்கள் அறிந்திராத பல ரகசியங்கள் | Tamil | Thisaikaati канала Thisaikaati
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
13 июня 2020 г. 12:54:52
00:10:57
Другие видео канала
என்றும் திமிராய் நிற்கும் கல்லணை | 2000 வருடமாய் கரிகாலன் பெயர் சொல்லும் அதிசயம் | kallanai historyஎன்றும் திமிராய் நிற்கும் கல்லணை | 2000 வருடமாய் கரிகாலன் பெயர் சொல்லும் அதிசயம் | kallanai historyTop 10 Biggest Dams in Tamilnadu || தமிழ்நாட்டின் மிகப்பெரிய 10 அணைகள் || Tamil Tourist GuideTop 10 Biggest Dams in Tamilnadu || தமிழ்நாட்டின் மிகப்பெரிய 10 அணைகள் || Tamil Tourist Guideமேட்டூர் அணை - உயரமும் துயரமும்...History about Mettur Damமேட்டூர் அணை - உயரமும் துயரமும்...History about Mettur Damஉலகை மிரள வைக்கும் 10 அணைகள் | 10 Most Stunning Dams In The Worldஉலகை மிரள வைக்கும் 10 அணைகள் | 10 Most Stunning Dams In The Worldகல்லணையை கட்ட இந்த இடத்தை கரிகாலன் ஏன் தேர்வுசெய்தான்? | Kallanai History in Tamil| Deep Talks Tamilகல்லணையை கட்ட இந்த இடத்தை கரிகாலன் ஏன் தேர்வுசெய்தான்? | Kallanai History in Tamil| Deep Talks Tamilதஞ்சை பெரிய கோயிலும் இராஜராஜ சோழனும் | Raja Raja Chola Big Templeதஞ்சை பெரிய கோயிலும் இராஜராஜ சோழனும் | Raja Raja Chola Big Templeஅகத்தியர் Full Movie l Sirkazhi Govindarajan l T. R. Mahalingam l A.V.M Rajan l Padmini l APN Filmsஅகத்தியர் Full Movie l Sirkazhi Govindarajan l T. R. Mahalingam l A.V.M Rajan l Padmini l APN FilmsTop 10 Dangerous Waterfalls in Tamilnadu || தமிழ்நாட்டின் ஆபத்தான 10 அருவிகள் || Tamil Tourist GuideTop 10 Dangerous Waterfalls in Tamilnadu || தமிழ்நாட்டின் ஆபத்தான 10 அருவிகள் || Tamil Tourist Guideகாட்டுக்குள் மறைந்து உள்ள அந்தப்புரம் 21 மனைவி களுக்கு கட்டிய மாபெரும் அரண்மனைகாட்டுக்குள் மறைந்து உள்ள அந்தப்புரம் 21 மனைவி களுக்கு கட்டிய மாபெரும் அரண்மனைபல நூறு அடிக்கு கீழே இருப்பது என்ன.?  கோவிலுக்கடியில் மர்ம நகரம்.! | kailasa temple mystery in tamilபல நூறு அடிக்கு கீழே இருப்பது என்ன.? கோவிலுக்கடியில் மர்ம நகரம்.! | kailasa temple mystery in tamilகாவிரி சர்ச்சையின் கதை | The story of Cauvery dispute | 05.02.18 | News 7 Tamilகாவிரி சர்ச்சையின் கதை | The story of Cauvery dispute | 05.02.18 | News 7 TamilAnjala Movie HD | Vimal, Nandita, Riythvika, Pasupathy | Superhit MoviesAnjala Movie HD | Vimal, Nandita, Riythvika, Pasupathy | Superhit Moviesஉலகின் மிக பெரிய கப்பல் ஏன் மூழ்குவதில்லை | Why Cruise Ships Don't Sink?உலகின் மிக பெரிய கப்பல் ஏன் மூழ்குவதில்லை | Why Cruise Ships Don't Sink?மீனவ நண்பன் மேட்டூர் அணை_பன்னவாடி பரிசல் துறை|Pannavady parisal thurai| METTUR DAM HISTORY|Touristமீனவ நண்பன் மேட்டூர் அணை_பன்னவாடி பரிசல் துறை|Pannavady parisal thurai| METTUR DAM HISTORY|Touristஇப்படிக்கு காலம்: இந்தியாவின் முதல் உயரமான, நீளமான மேட்டூர் அணையின் வரலாறு | 12/12/2020இப்படிக்கு காலம்: இந்தியாவின் முதல் உயரமான, நீளமான மேட்டூர் அணையின் வரலாறு | 12/12/2020பல அடுக்கு பாதுகாப்புடன் கட்டப்பட்ட ராவண கோட்டை தொடக்கூட முடியாத நம் பாட்டனின் படைப்பு |பிரவீன்மோகன்பல அடுக்கு பாதுகாப்புடன் கட்டப்பட்ட ராவண கோட்டை தொடக்கூட முடியாத நம் பாட்டனின் படைப்பு |பிரவீன்மோகன்அடேங்கப்பா! பார்த்ததுமே மெய்சிலிர்க்கவைக்கும் அற்புதமான 10 இடங்கள்! | Unbelievable Amazing Placesஅடேங்கப்பா! பார்த்ததுமே மெய்சிலிர்க்கவைக்கும் அற்புதமான 10 இடங்கள்! | Unbelievable Amazing PlacesMale Mahadeswara Forest Road | Scary Forest Roads | Kolathur to Mahadheswara HillsMale Mahadeswara Forest Road | Scary Forest Roads | Kolathur to Mahadheswara Hillsஒரு நிமிடம் உறைய வைக்கும் 10 பயங்கரமான பாலங்கள்! 10 Most Scariest Bridges!ஒரு நிமிடம் உறைய வைக்கும் 10 பயங்கரமான பாலங்கள்! 10 Most Scariest Bridges!Vaigai dam water open live videoVaigai dam water open live video
Яндекс.Метрика