Загрузка страницы

பிரதோஷ சிவ மந்திரம் - பாடல்வரிகள் | Pradosha Sivan Mantram with Lyrics | Sivan song | Vijay Musicals

Pradosha Sivan Song with Lyrics in Tamil
Song : Om Namachivaya Om
Singer : Ramu
Lyrics : Dr. Ulundurpet Shanmugam
Music : Sivapuranam D V Ramani
Video : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
#pradosham#sivansong#VijayMusicals

பாடல் : பிரதோஷ சிவ மந்திரம் - பாடல்வரிகள்
குரலிசை : ராமு
கவியாக்கம் : Dr. உளுந்தூர்பேட்டை சண்முகம்
இசை : சிவபுராணம் D V ரமணி
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்

பாடல்வரிகள்:

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்ட்டிவர்த்தனம்
உருவாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்
குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வரஹ
குருர் சாட்சாத் பரப்ரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா

ஓம் நமசிவாய ஓம்
சிவாய நமஹ நமோ நம
புனிதம் புனிதம் சிவமந்த்ரம்
புவனம் முழுதும் பஞ்சாக்ஷரம்

பூதம் ஐந்தும் ஐந்தெழுத்தே
வேதத்தின் கண்கள் ஐந்தெழுத்தே
சிவனின் நடனம் ஐந்தெழுத்தே
அவனின் தொழிலும் ஐந்தெழுத்தே

சத்யம் சங்கரம் சதாசிவம்
நித்திய மங்களம் மகேஸ்வரம்
மதுர மனோகரம் சுந்தரம்
சகல செளபாக்யம் சந்தோஷம்

சிவனின் அருளே உமையம்மை
அபயம் வரதம் அருள்கின்றாள்
அவனின் கமல பொற்பாதம்
சரணம் சரணம் சரணங்களே

மான் மழு தண்டம் கை பிரம்பு
பாம்பு வெண்பிறை சூடியவன்
அன்புடன் சிவனை நோக்குகின்றான்
நந்தியம் பெருமான் தாள் சரணம்

அருவம் உருவம் அருவுருவம்
அறுபத்திநான்கு திருமேனி
எதிலும் கலந்து சிரிக்கின்றான்
எங்கும் நிறைந்து இருக்கின்றான்

திருவாரூரில் மண் லிங்கம்
ஆனைக்காவில் நீர் லிங்கம்
அண்ணாமலையில் அக்னி லிங்கம்
காளஹஸ்தியில் காற்று லிங்கம்

தில்லையிலே அவன் ஆகாயம்
திருப்பெருந்துறையில் ஆன்ம லிங்கம்
திருசிரபுரத்தில் சூர்ய லிங்கம்
மதுரையிலே அவன் சந்த்ர லிங்கம்

எட்டு வீரச் செயல் புரிந்தான்
எட்டு தளங்களில் வந்தமர்ந்தான்
கற்றை சடைமுடி சிவபெருமான்
கங்கையை நிலவை சூடிக்கொண்டான்
-------------------------------
எட்டு குணங்கள் கொண்டவனை
எட்டு மலர்கொண்டு பூஜிப்போம்
எட்டு தோள்கள் உடையவனை
தொட்டுப் பிடிக்க யாசிப்போம்

அன்பர்கள் இதயக் கோயிலிலே
வந்தே அமர்வான் வரமருள்வான்
துன்பங்கள் நீக்கும் சஞ்சீவி
என்றும் நிலைத்த சிரஞ்சீவி

காடே வீடாய் உடையவனாம்
நாடகம் நடத்தும் நாயகனாம்
பூவில் மணமாய் பொழிவானே
நாவில் சொல்லாய் மலர்வானே

மாலும் அயனும் காணாதான்
ஆதி அந்தம் ஏதுமிலான்
காலனுக்கும் காலனவன்
காலம் கடந்தான் கண்ணுதலான்

அத்தன் என்பார் அன்னை என்பார்
பித்தன் என்பார் பேயன் என்பார்
சித்தன் அவனின் சித்தம் தான்
நித்தமும் நம்மை நடத்துதம்மா

தென்னாடுடைய சிவனவனே
எந்நாட்டவர்க்கும் இறைவனன்றோ
பண்ணால் நெஞ்சம் இலகிடுவான்
பாடல்கள் கேட்டால் ஆடிடுவான்

பெண்ணை தன்னில் வைத்தானே
தன்னில் பாதி கொடுத்தானே
கண்ணப்பனுக்கு கண் தந்து
காட்சி தந்து களித்தானே

பார்வதிதேவி தடுத்தாலும்
ஆலகாலம் குடித்தானே
தேவர்கள் வாழச் செய்தானே
கால காலம் வாழ்வானே

பூதங்கள் சூழ வந்தானே
புலித்தோல் உடுத்தி நின்றானே
வேதங்கள் புகழ வருவானே
வேண்டியதெல்லாம் தருவானே

கல்லால நிழலில் கண்மூடி
சொல்லாமல் சொன்ன தத்துவனே
எல்லாம் அறிந்த வித்தகனே
எல்லோர்க்கும் உகந்த உத்தமனே

அவனின் லீலைகள் ஆயிரமாம்
அறுபத்து நான்கு என்பாரே
சிவனைப் போலே யாருள்ளார்
அவனுக்கு நிகராய் அவன் தானே

தடைகளை எல்லாம் தகர்த்திடுவான்
சமயத்தில் காக்கும் தயாநிதி
கருணாமூர்த்தி கற்பகம்
சிவனை நம்பியே ஜீவிதம்

யோகியர் உள்ள கோயிலிலே
ஜீவ ஜோதியாய் தோன்றிடுவான்
மூளும் மன இருள் ஓட்டிடுடுவான்
மீளும் வழியைக் காட்டிடுவான்

நடுவிழி முக்கண் மலர்ந்ததனால்
திரிபுரம் எரிந்ததை அறிவோமே
காமனை எரித்ததும் அவன் விழியே
முருகனைப் படைத்ததும் அவன் விழியே

பாவங்கள் பொடிபடச் செய்திடுவான்
வாழ்வுக்கு அர்த்தம் சொல்லிடுவான்
வருவதும் போவதும் அவனாலே
அறிவதும் தெளிவதும் அவனாலே

தாயாய் ஆகித் தாங்கிடுவான்
தந்தை நிலையில் தண்டிப்பான்
குருவாய் வந்து ஒளி தருவான்
பிறவிப் பிணியைப் போக்கிடுவான்

இமய பர்வதம் அவன் இல்லம்
பர்வதவர்த்தினி அவன் மனையாள்
குமரன் கணபதி ஐயப்பன்
கூடி குலாவும் பிள்ளைகளாம்

ஓம் எனும் நாதம் அவன் கானம்
ஆனந்த நடனம் எந்நாளும்
மூலம் தானே அவன் வேதம்
முற்றும் உணர்ந்தால் வரும் ஞானம்

பக்தி செய்வார் தோழனவன்
பழகப் பழகத் தொண்டனவன்
தேவர்களுக்கும் தேவனவன்
எல்லா உயிருக்கும் காவலவன்

நாகபூஷணன் கம்பீரன்
நந்தி வாகனன் நடராஜன்
நவரச நாயகன் கலைவாணன்
கனகசபேஷன் சரபேஷன்

உமாமகேசன் பரதேவன்
த்ரயம்ப காலன் நீலகண்டன்
கொன்றை வேந்தன் ஏகாம்பரன்
சோமசுந்தரம் த்யாகேசன்

அந்த காந்தன் சிதானந்தன்
ஆபத்பாந்தவன் திகம்பரன்
தக்ஷன் வேள்வியை முறித்தவன்
பக்தவக்சலன் ஜகத்குரு

சோமநாதன் விஸ்வநாதன்
ராமநாதன் ஜகந்நாதன்
வைத்யநாதன் சிவநாதன்
பஞ்சநாதன் பஞ்சதீபன்

கேதார்நாதன் பத்ரிநாதன்
பசுபதிநாதன் அமர்நாதன்
கயிலைநாதன் சிவசைலன்
கெளரி மணாளன் லிங்கோற்பவன்

ஜோதிர்லிங்கம் பன்னிரெண்டாய்
தோன்றும் அவனைப் போற்றிடுவோம்
நாளும் சிவன் புகழ் பாடிடுவோம்
நாதன் திருவடி நாடிடுவோம்

பார்த்தனுக்கு அருள் செய்தான்
தீர்த்தன் திருவடி போற்றிடுவோம்
கூத்தன் ஆடும் கோளத்தை
பார்த்துப் பார்த்து உருகிடுவோம்

காரைக்கால் அம்மைக்கு
சீரார் சிவகதி தந்தவனை
மார்கண்டேயனைக் காத்தவனை
வாழ்த்தி வாழ்த்தி வணங்கிடுவோம்

அறிவு உன்னைக் காண்பிக்கும்
அன்பு உன்னிடம் சேர்ப்பிக்கும்
பிரிவு இல்லாத நிலை தருவாய்
இறைவா பிறவா வரம் தருவாய்

Видео பிரதோஷ சிவ மந்திரம் - பாடல்வரிகள் | Pradosha Sivan Mantram with Lyrics | Sivan song | Vijay Musicals канала Vijay Musical
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
28 октября 2020 г. 5:30:01
00:20:13
Другие видео канала
அமாவாசை சிறப்பு பாடல்கள் | Amavasai Special Songs | Amman Songs | JukeBox | Vijay Musicalsஅமாவாசை சிறப்பு பாடல்கள் | Amavasai Special Songs | Amman Songs | JukeBox | Vijay Musicalsநவகிரஹங்கள் தோஷம் விலகி நன்மை உண்டாக்கும் பாடல் | கோளறு பதிகம் | Kolaru Pathigam | Vijay Musicalsநவகிரஹங்கள் தோஷம் விலகி நன்மை உண்டாக்கும் பாடல் | கோளறு பதிகம் | Kolaru Pathigam | Vijay Musicalsஅமாவாசை சிறப்பு பாடல்கள் | Amavasai Special Songs | JukeBox | Vijay Musicalsஅமாவாசை சிறப்பு பாடல்கள் | Amavasai Special Songs | JukeBox | Vijay Musicalsபிரதோஷம் - சிவன் சிறப்பு பாடல்கள் | Pradosam Sivan Songs in Tamil | Vijay Musicalsபிரதோஷம் - சிவன் சிறப்பு பாடல்கள் | Pradosam Sivan Songs in Tamil | Vijay Musicalsசங்கடஹர சதுர்த்தி சிறப்பு பாடல்கள் | Sangadahara Chathurthi Special Songs - JukeBox | Vijay Musicalsசங்கடஹர சதுர்த்தி சிறப்பு பாடல்கள் | Sangadahara Chathurthi Special Songs - JukeBox | Vijay Musicalsசித்ரா பௌர்ணமி 2023 சிறப்பு பாடல்கள் | Chitra Pournami 2023 Special Songs - JukeBox | Vijay Musicalsசித்ரா பௌர்ணமி 2023 சிறப்பு பாடல்கள் | Chitra Pournami 2023 Special Songs - JukeBox | Vijay Musicals2023 அட்சய திருதியை சிறப்பு பாடல்கள் | 2023 Akshaya Tritiya Special Songs - JukeBox | Vijay Musicals2023 அட்சய திருதியை சிறப்பு பாடல்கள் | 2023 Akshaya Tritiya Special Songs - JukeBox | Vijay Musicalsசங்கடஹர சதுர்த்தி 2023 - விநாயகர் பாடல்கள் | Sangadahara Sathurthi Vinayagar Songs | Vijay Musicalsசங்கடஹர சதுர்த்தி 2023 - விநாயகர் பாடல்கள் | Sangadahara Sathurthi Vinayagar Songs | Vijay Musicals2023 மாசி பௌர்ணமி சிவன் பாடல்கள் | 2023 Masi Pournami Sivan Songs Tamil | Vijay Musicals2023 மாசி பௌர்ணமி சிவன் பாடல்கள் | 2023 Masi Pournami Sivan Songs Tamil | Vijay Musicals2023 மாசி மகம் சிறப்பு பாடல்கள் | 2023 Masi Magam Special Songs - JukeBox | Vijay Musicals2023 மாசி மகம் சிறப்பு பாடல்கள் | 2023 Masi Magam Special Songs - JukeBox | Vijay Musicalsருத்ராக்ஷம் தரித்தவனே | Ruthraaksham Thariththavane | Guru Dakshinamoorthy Song | Vijay Musicalsருத்ராக்ஷம் தரித்தவனே | Ruthraaksham Thariththavane | Guru Dakshinamoorthy Song | Vijay Musicalsபாண்டிச்சேரி அன்னை பிறந்தநாள் சிறப்பு பாடல் | Pondicherry Mother Birthday Song | Vijay Musicalsபாண்டிச்சேரி அன்னை பிறந்தநாள் சிறப்பு பாடல் | Pondicherry Mother Birthday Song | Vijay Musicalsமாசி மாசம் அம்மன் பாடல்கள் | Maasi Maasam Amavasai Amman Songs Tamil - JukeBox | Vijay Musicalsமாசி மாசம் அம்மன் பாடல்கள் | Maasi Maasam Amavasai Amman Songs Tamil - JukeBox | Vijay Musicalsமாசி அமாவாசை சிறப்பு அம்மன் பாடல்கள் | Masi Amavasai Amman Songs Tamil | Vijay Musicalsமாசி அமாவாசை சிறப்பு அம்மன் பாடல்கள் | Masi Amavasai Amman Songs Tamil | Vijay Musicalsமகா பிரதோஷம் சிவன் பாடல்கள் | Sivapuranam & Natarajar Pathu - Pradosham Sivan Songs | Vijay Musicalsமகா பிரதோஷம் சிவன் பாடல்கள் | Sivapuranam & Natarajar Pathu - Pradosham Sivan Songs | Vijay Musicalsதைப்பூசம் மேல்மருவத்தூர் அம்மன் பாடல்கள் | Thaipusam Melmaruvathur Amman Songs | Vijay Musicalsதைப்பூசம் மேல்மருவத்தூர் அம்மன் பாடல்கள் | Thaipusam Melmaruvathur Amman Songs | Vijay Musicals2023 குடியரசு தின பாடல்கள் | 2023 Republic Day Songs | JukeBox | Vijay Musicals2023 குடியரசு தின பாடல்கள் | 2023 Republic Day Songs | JukeBox | Vijay Musicals2023 தை அமாவாசை சிறப்பு பாடல்கள் | 2023 Thai Amavasai Special Songs - JukeBox | Vijay Musicals2023 தை அமாவாசை சிறப்பு பாடல்கள் | 2023 Thai Amavasai Special Songs - JukeBox | Vijay Musicalsசூரிய பகவான் 108 போற்றி- தமிழ் | Pongal Special Surya Bhagavan 108 Potri - Tamil |  Vijay Musicalsசூரிய பகவான் 108 போற்றி- தமிழ் | Pongal Special Surya Bhagavan 108 Potri - Tamil | Vijay Musicalsசூரிய பகவான் கவசம் - தமிழ் | Pongal Special Surya Bhagavan Kavacham in Tamil |  Vijay Musicalsசூரிய பகவான் கவசம் - தமிழ் | Pongal Special Surya Bhagavan Kavacham in Tamil | Vijay Musicalsமார்கழி இருபத்தேழாவது நாள் பாடல்கள் | Day 27 Margazhi Songs | JukeBox | Vijay Musicalsமார்கழி இருபத்தேழாவது நாள் பாடல்கள் | Day 27 Margazhi Songs | JukeBox | Vijay Musicals
Яндекс.Метрика