Загрузка...

#அமரர் திரு .சபா ஆனந்தர் பூபதி பாலவடிவேற்கரன்#22.01.2025#RIP

Youtamiltv#growyoutube#tamil#music#
துயர்பகிர்வு
திரு சபா ஆனந்தர் பூபதி பாலவடிவேற்கரன்
யா/இணுவில் தெற்கை பிறப்பிடமாகவும் கே.கே.எஸ் வீதி இணுவில் மேற்கு மற்றும் ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சபாஆனந்தர் பூபதி பால வடிவேற்கரன் அவரகள் 22.01.2025 புதன் (இன்று) ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அவரின் பிரிவால் துயருறும் குடும்பதார்கு இணுவில் கனடா ஆழ்ந்த அநுதாபங்களை தெரிவிப்பதுடன் அவரின் ஆத்மா சாந்தியடையவும் வேண்டுகிறது.
ஓம் சாந்தி ஓம்”
எம் இதய அஞ்சலி
அமரர் சபாஆனந்தர். பூபதிபாலா வடிவேற்கரன் அவர்களின் உயிர் 22.01.2025 அன்று உடலைவிட்டு பிரிந்துவிட்டது.
இவர் ஜெர்மனியில் பிராங்க் போர்ட் நகரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவர்.
இவர் பிராங்போட் நகரத்தில் வாழும் காலத்தில் பல தமிழ் பணிகளையும் செய்து வந்திருக்கின்றார்.
நாட்டுப்பற்றாளர், தமிழ் பற்றாளர், எழுத்தாளர், கவிஞர், நடிகர் என பல பக்கங்களை தன்னகத்தை கொண்டவர் ஆவார்.
ஐரோப்பாவின் மூத்த தமிழ் சங்கமான பிராங்போட் தமிழ் சங்கத்தை உருவாக்கி வளர்த்தவர்களில் ஒருவராக இருந்ததுடன் தமிழ் நாதம் சஞ்சியை தொடர்ந்து வெளிவர முன்நின்று உழைத்தவர்.
இவரது இழப்பு எமக்கு பெரும் துயரத்தை தந்துள்ளது.
பிறப்பு :-
இவர் ஈழத்தில் இணுவிலில் தமிழ் பண்டிதர், அதிபர். திரு க. சபாஆனந்தர் அவர்களுக்கும் திருமதி அன்னம்மா சபாஆனந்தர் அவர்களுக்கும் மகனாக 19.03.1953 ஆம் ஆண்டு மூன்றாவது மகனாக பிறந்தார்.
கல்வி -
நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி (1970 ) போன்ற பாடசாலைகளில் கல்வி கற்றவர்.
1972 இல் கட்டுப்பெத்தை தொழில் நுட்பக் கல்லூரியில் கற்ற காலத்தில் நுட்பம் சஞ்சிகையின் உதவி ஆசிரியராக விளங்கியவர்.
1979 யேர்மனிக்கு புலம்பெயர்ந்தார்.
குடும்பம் :-
திருமதி .சூரியகுமாரி அவர்களை திருமணம் செய்து காயத்திரியை மகளாக பெற்றெடுத்தனர்.
நடிப்பு -
மிஸ்டர் ரவிக்குமார் , சின்னப்பு வாத்தியார் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் சுதந்திர தாகம் திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்திருக்கின்றார்.
சிறுவர் நாடகங்கள் எழுதி நெறிப்படுத்தி மேடை ஏற்றிய பெருமையும் இவருக்கு உள்ளது. ஊமை என்ற குறும்படத்தின் இயக்குனராகவும் இவர் விளங்கிருக்கின்றார்.
தாயக உதவிகள்:-
2016 இல் இருந்து தாயகம் நோக்கிய உதவிக்கரம் நீட்டும் எண்ணத்துடன் Help for Life e. V என்ற அமைப்பை நிறுவி பல உதவிகளை செய்து வந்திருக்கின்றார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன் அவரது குடும்பத்தினருக்கும் எம் ஆறுதல்களை பகிர்ந்து நிற்கின்றோம். ஓம் சாந்தி.
02.02 .2022 அன்று லண்டன் தமிழ் வானொலி, பாமுகத்தின் முற்றத்து மலர்கள் நிகழ்ச்சியில் இவரை விருந்தினராக அழைத்து நேர்காணல் செய்து வாழ்த்தி கௌரவித்திருந்தனர்.
----------------------------------------­----------------------------------------­-----
This video was a production from YouTamil TV Youtube.

Visit our website:
http://worldkovil.com

Видео #அமரர் திரு .சபா ஆனந்தர் பூபதி பாலவடிவேற்கரன்#22.01.2025#RIP канала YoutamilTV
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки