Загрузка страницы

திருமண தடை நீக்கும் திருப்பதிகம் | திருமருகல் | சடையாய் எனுமால் | திருஞானசம்பந்த சுவாமிகள்

#SriRathnagireeswararTemple #Thirumarugal #ThirugnanasambandarThevaram

"சர்ப்பதோஷத்தால் திருமணம் தள்ளிப் போவதைத் தவிர்ப்பதற்கு ஓதவேண்டிய திருப்பதிகம்."

பாண்டிய நாட்டு வணிகனாகிய தாமன் என்பவன் தன் மக்கள் எழுவரில் ஒருத்தியைத் தன் மருமகனுக்குக் கொடுப்பதாக வாக்களித்தான். ஆனால் வாக்களித்தடி நடக்காமல், அவனுடைய பெண்களுக்கு பருவம் வந்த காலத்து ஒவ்வொருத்தியாகப் பிறருக்கு மணம் செய்து கொடுத்தான். அதனை உணர்ந்த ஏழாவது பெண் தாய் தந்தையர் அறியாமல் தன் மாமனோடு வெளியேறி பெரியவர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் புரிந்து கொள்ள நிச்சயித்தனர்.

திருமருகலையடைந்து ஒரு திருமடத்தில் அவர்கள் இருவரும் இரவு தங்கினர். அன்றிரவு அந்தச் செட்டி குமரனை வினையின் காரணமாக பாம்பு தீண்டியது. அவன் இறந்தான். இறைவன் மேல் தீராத பக்தி கொண்ட அந்தப் பெண் இறைவனை நோக்கி முறையிட்டுப் புலம்பினாள். சுவாமி தரிசனத்திற்காக வந்த திருஞானசம்பந்த சுவாமிகள் திரு உள்ளத்தை இவள் அழுகை ஒலி அருள் சுரக்கச் செய்தது. இளம் பெண்ணின் அழுகைக் குரலையும் அவளின் நிராதரவான நிலையையும் கண்டு இரக்கப்பட்ட திருஞானசம்பந்தர் இறைவன் மேல்

"சடையாய் எனுமால் சரண் நீ எனுமால்..."

என்று தொடங்கும் பதிகம் பாட சுற்றிலும் உள்ளோர் அதிசயிக்கும்படி வணிகன் உயிர்பெற்று எழுந்தான். பிறகு அந்த பெண்ணிற்கும் வணிகனுக்கும் இறைவன் முன்னிலையில் சம்பந்தர் மணம் நடத்தி வாழ்த்தி அருளினார். திருமணம் ஆகி ஏதேனும் காரணங்களால் பிரிந்து வாழும் தம்பதியினர் இத்தலத்து இறைவனிடம் வேண்டிக் கொண்டு வழிபட்டால் பிரிந்தர் கூடி வாழ்வர் என்பது நிச்சயம். திருமாலை விட்டுப் பிரிந்த மஹாலக்ஷ்மியும் இத்தலத்திற்கு வந்து சிவனை வழிபாடு செய்து மீண்டும் திருமாலுடன் இணைந்து வாழ அருள் பெற்றாள் என்று தலபுராணம் கூறுகிறது.

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மாணிக்கவண்னர், ஸ்ரீ இரத்தினகிரீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ வண்டுவார் குழலி

திருமுறை : இரண்டாம் திருமுறை 018 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

பதிக குரலிசை : திரு மயிலை சற்குருநாத ஓதுவார்

சடையாய் எனுமால் சரண் நீ எனுமால்
விடையாய் எனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள் உள் மெலிவே. ..... (01)

சிந்தாய் எனுமால் சிவனே எனுமால்
முந்தாய் எனுமால் முதல்வா எனுமால்
கொந்தார் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள் ஏசறவே. ..... (02)

அறையார் கழலும் அழல் வாய் அரவும்
பிறையார் சடையும் உடையாய் பெரிய
மறையார் மருகல் மகிழ்வாய் இவளை
இறையார் வளை கொண்டு எழில் வவ்வினையே. ..... (03)

ஒலி நீர் சடையில் கரந்தாய் உலகம்
பலி நீ திரிவாய் பழியில் புகழாய்
மலி நீர் மருகல் மகிழ்வாய் இவளை
மெலி நீர் மையள் ஆக்கவும் வேண்டினையே. ..... (04)

துணி நீலவண்ணம் முகில் தோன்றியன்ன
மணி நீலகண்டம் உடையாய் மருகல்
கணி நீலவண்டார் குழலாள் இவள்தன்
அணி நீலஒண்கண் அயர்வு ஆக்கினையே. ..... (05)

பலரும் பரவப்படுவாய் சடைமேல்
மலரும் பிறை ஒன்று உடையாய் மருகல்
புலரும் தனையும் துயிலாள் புடை போந்து
அலரும் படுமோ அடியாள் இவளே. ..... (06)

வழுவாள் பெருமான் கழல் வாழ்க எனா
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவாள் உடையாய் மருகல் பெருமான்
தொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே. ..... (07)

இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்ப
துலங்க விரல் ஊன்றலும் தோன்றலனாய்
வலங்கொள் மதில்சூழ் மருகல் பெருமான்
அலங்கல் இவளை அலர் ஆக்கினையே. ..... (08)

எரியார் சடையும் அடியும் இருவர்
தெரியாதது ஒர் தீத்திரள் ஆயவனே
மரியார் பிரியா மருகல் பெருமான்
அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே. ..... (09)

அறிவில் சமணும் அலர் சாக்கியரும்
நெறி அல்லன செய்தனர் நின்று உழல்வார்
மறி ஏந்து கையாய் மருகல் பெருமான்
நெறியார் குழலி நிறை நீக்கினையே. ..... (10)

வயஞானம் வல்லார் மருகல் பெருமான்
உயர் ஞானம் உணர்ந்து அடி உள்குதலால்
இயல் ஞானசம்பந்தன பாடல் வல்லார்
வியன் ஞாலம் எல்லாம் விளங்கும் புகழே. ..... (11)

பதிகப் பலன் : தன்மயமாக்கும் திருவருள் ஞானம் பெற்றார் வாழும் மருகற் பெருமான் திருவடிகளை உயர் ஞானம் உணர்ந்து நினைதலால் பதி இயல்புற்ற ஞானசம்பந்தன் அருளிய இப்பதிகப் பாடல்களைப் பாடவல்லார் புகழ், அகன்ற இவ்வுலக மெல்லாம் விளங்கித்தோன்றும்.

ஆலய முகவரி : அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில், திருமருகல், திருமருகல் அஞ்சல், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம், PIN - 609702, இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

எப்படிப் போவது : நன்னிலத்தில் இருந்து 12 கி.மி. தொலைவில் நாகூர் செல்லும் சாலை வழியில் இத்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலை வழியாகவும் திருமருகல் தலத்தை அடையலாம். திருமருகலில் இருந்து அருகில் உள்ள திருசாத்தமங்கை, திருசெங்காட்டங்குடி, திருப்புகலூர் ஆகிய மற்ற சிவஸ்தலங்களையும் தரிசிக்கலாம். திருவாரூர், நன்னிலம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை முதலிய ஊர்களிலிருந்து இத்தலத்திற்குப் பேருந்துகள் உள்ளன.

குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

https://www.youtube.com/channel/UCEwdHs8LcSM1MToqMdxzEig

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"

Видео திருமண தடை நீக்கும் திருப்பதிகம் | திருமருகல் | சடையாய் எனுமால் | திருஞானசம்பந்த சுவாமிகள் канала Thiruneriya Thamizhosai
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
6 июня 2019 г. 18:29:52
00:09:52
Другие видео канала
சடையா எனுமால் - தேவார பதிகம் | Sadaiyaa Enumaal - Thevara Pathigam | Palan Tharum Pathikangalசடையா எனுமால் - தேவார பதிகம் | Sadaiyaa Enumaal - Thevara Pathigam | Palan Tharum Pathikangalதுயர் தீர்க்கும் திருப்பதிகம் | மாசில் வீணையும் மாலை மதியமும் | திருநாவுக்கரசு சுவாமிகள்துயர் தீர்க்கும் திருப்பதிகம் | மாசில் வீணையும் மாலை மதியமும் | திருநாவுக்கரசு சுவாமிகள்48 நாட்களுக்குள் திருமணம் நடக்க உதவும் அருணகிரிநாதரின் சக்திவாய்ந்த மந்திரம் !48 நாட்களுக்குள் திருமணம் நடக்க உதவும் அருணகிரிநாதரின் சக்திவாய்ந்த மந்திரம் !திருமண தடை நீங்கி திருமணம் நடை பெற /Thiruma Thadai  neengi  Thirumanam  Nadai  Peraதிருமண தடை நீங்கி திருமணம் நடை பெற /Thiruma Thadai neengi Thirumanam Nadai Peraதிருமணம் கைகூடத் திருமருகல் பதிகம்திருமணம் கைகூடத் திருமருகல் பதிகம்Sadaiya enumal - சடையா யெனுமால் -திருமருகல்-Thirumarugal-திருமண தடைகள் நீங்கும்-ஞானசம்பந்தர் தேவாரம்Sadaiya enumal - சடையா யெனுமால் -திருமருகல்-Thirumarugal-திருமண தடைகள் நீங்கும்-ஞானசம்பந்தர் தேவாரம்திருவீழிமிழலை திருமுறை பதிகம் | வாசி தீரவே காசு நல்குவீர் | திருஞானசம்பந்த சுவாமிகள்திருவீழிமிழலை திருமுறை பதிகம் | வாசி தீரவே காசு நல்குவீர் | திருஞானசம்பந்த சுவாமிகள்பணி நிரந்தரம், அரசுப்பணி தரும் அற்புதத் தேவாரம் | Thevaram for Permanent Government Job with Lyricsபணி நிரந்தரம், அரசுப்பணி தரும் அற்புதத் தேவாரம் | Thevaram for Permanent Government Job with Lyricsதிருமணஞ்சேரி திருமுறை திருப்பதிகம் | அயிலாரும் அம்பு அதனால் | திருஞானசம்பந்த சுவாமிகள்திருமணஞ்சேரி திருமுறை திருப்பதிகம் | அயிலாரும் அம்பு அதனால் | திருஞானசம்பந்த சுவாமிகள்திருஆவடுதுறை திருமுறை திருப்பதிகம் | இடரினும் தளரினும் எனதுறுநோய் | திருஞானசம்பந்த சுவாமிகள்திருஆவடுதுறை திருமுறை திருப்பதிகம் | இடரினும் தளரினும் எனதுறுநோய் | திருஞானசம்பந்த சுவாமிகள்KOLARU  PATHIGAM THEVARAM / Bombay Saradha/பாம்பே சாரதா/கோளறு பதிகம்/தேவாரம்-KOLARU PATHIGAM THEVARAM / Bombay Saradha/பாம்பே சாரதா/கோளறு பதிகம்/தேவாரம்-சடையா எனுமால் - தேவார பதிகம் | Sadaiyaa Enumaal - Thevara Pathigam | Palan Tharum Pathikangalசடையா எனுமால் - தேவார பதிகம் | Sadaiyaa Enumaal - Thevara Pathigam | Palan Tharum Pathikangalமூன்றாம் திருமுறை தேவாரம் பாடல்  67 பிரமபுரம்மூன்றாம் திருமுறை தேவாரம் பாடல் 67 பிரமபுரம்திருமண தடை நீக்கும் பதிகம் | திருமணம் நடக்க பதிகம் | நீறுவரி ஆடரவொ | திருஞானசம்பந்த சுவாமிகள்திருமண தடை நீக்கும் பதிகம் | திருமணம் நடக்க பதிகம் | நீறுவரி ஆடரவொ | திருஞானசம்பந்த சுவாமிகள்திருப்பைஞ்ஞீலி திருமுறை திருப்பதிகம் | ஆரிடம் பாடிலர் அடிகள் காடலால் | திருஞானசம்பந்த சுவாமிகள்திருப்பைஞ்ஞீலி திருமுறை திருப்பதிகம் | ஆரிடம் பாடிலர் அடிகள் காடலால் | திருஞானசம்பந்த சுவாமிகள்இடர்களையும் திருப்பதிகம் | திருநெடுங்களம் | மறையுடையாய் தோலுடையாய் | திருஞானசம்பந்த சுவாமிகள்இடர்களையும் திருப்பதிகம் | திருநெடுங்களம் | மறையுடையாய் தோலுடையாய் | திருஞானசம்பந்த சுவாமிகள்சடையாய் எனுமால் பதிகம் | தடைகள் நீக்கும் திருமருகல் ஈசன் | சிவன் பாடல் | Sadaiyaai enumalசடையாய் எனுமால் பதிகம் | தடைகள் நீக்கும் திருமருகல் ஈசன் | சிவன் பாடல் | Sadaiyaai enumalவினை தீர்க்கும் திருப்பதிகம் | திருமாகறல் | விங்குவிளை கழனிமிகு | திருஞானசம்பந்த சுவாமிகள்வினை தீர்க்கும் திருப்பதிகம் | திருமாகறல் | விங்குவிளை கழனிமிகு | திருஞானசம்பந்த சுவாமிகள்திருவாசகம் | திருச்சாழல் | பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம் | மாணிக்கவாசக சுவாமிகள்திருவாசகம் | திருச்சாழல் | பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம் | மாணிக்கவாசக சுவாமிகள்
Яндекс.Метрика