Загрузка...

WeWonderWomenAward2023 for Her Excellence in the field of Literature-Storytelling #vanithamani

விருது பெற அழைத்தபொழுதான் We Wonder Women அமைப்பை பற்றி முதன்முதலில் அறிகிறேன். கதைக்களம் புதிய கட்டிட திறப்புவிழாவின் எண்ணற்ற வேலைகளை மூழ்கி மூச்சடைத்துக் கொண்டிருந்த நான் WWW award பற்றி அவர்களுக்கு பதிலளிக்க மறந்து விட்டேன். சில நாட்களில் அமைப்பின் இயக்குநர் சுபிதா அழைத்து பேசும் பொழுது ஐயோ மறந்தேனே என படபடபக்க Cool Mam என சகோதரியாய் ஆசுவாசப்படுத்தி விருது நிகழ்விற்கு அழைப்பு விடுத்தார். அப்போதுதான் விளக்கம் கேட்டேன். We Wonder Women Year Award 2023 - for Her Excellence in the field of Literature (Storytelling)என சொன்னார். அருகிலேயே கதைக்கள குழு நண்பர்கள் இருக்க நான் Speaker போட்டுத்தான் பேசிக் கொண்டிருந்தேன். அனைவரும் பெரும் புன்னகையோடு கட்டைவிரலை உயர்த்தி மகிழ்ச்சியை தெரிவிக்க , விருது பெற வருவதாக சம்மதித்தேன். August 26ல் கோவையில் Jenny clubன் அழகிய அரங்கொன்றில் அட்டகாசமாக நிகழ்வு துவங்கியது. பல சாதனைப் பெண்கள் கூடியிருந்தனர். மிக மூத்த பெண்மணி சதிராட்டத்தின் கடைசி குரு, 25000 பிரசவம் பார்த்த பெண் மருத்துவர் அமுதா கிரிதர் (எனக்கும் பிரசவம் பார்த்தவர் இவர்தான்) முதன் முதலில் லாரி ஓட்டுநராய் ஆன மூத்த பெண், பறை இசையை பரப்பும் இளம்பெண், முகத்திலுள்ள தழும்புகளை மறைக்காமல் மாடலிங் செய்யும் பெண், Weight liftingல் வெற்றி பெற்ற பெண் என விருது பெற வந்த பல சாதனைப் பெண்கள் பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி. WWW அமைப்புக்கு நன்றி.

-சி.வனிதாமணி அருள்வேல்
கதைக்களம் (The Storytelling Academy)
www.kathaikalam.com

Видео WeWonderWomenAward2023 for Her Excellence in the field of Literature-Storytelling #vanithamani канала Vanithamani Storytellerகதைக்களம்
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки