Загрузка страницы

சர்வ மங்களம் அருளும் ஸ்ரீ காமாட்சி விருத்தம் வரிகளுடன் | Sri Kamakshi Virutham with Lyrics

காரடையான் நோன்பு அன்று படிப்பது மிகவும் சிறந்த பலன் தரும்.

ஒவ்வொரு பாராவின் நிறைவிலும் "அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே." என்கிற வரிகளை சேர்த்துக் கொண்டு பாராயணம் செய்யவும்.

காமாக்ஷி அம்மன் விருத்தம்
கணபதி காப்பு
மங்களஞ்சேர் காஞ்சிநகர் மன்னுகாமாட்சி மிசை
துங்கமுள நற்பதிகஞ் சொல்லவே -- திங்கட்
புயமருவும் பணியனியும் பரமனுளந்தனின் மகிழும்
கயமுகவைங் கரனிருதாள் காப்பு.

விருத்தம்
சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரி
சோதியாய் நின்ற உமையே
சுக்ர வாரத்திலுனை கண்டு தரிசித்தவர்கள்
துன்பத்தை நீக்கி விடுவாய்
சிந்தைதனிலுன் பாதந் தன்னையே தொழுபவர்கள்
துயரத்தை மாற்றி விடுவாய்
ஜெகமெலா முன் மாய்கை புகழவென்னா லாமோ
சிறியனால் முடிந்திடாது.
சொந்தவுன் மைந்தனா யெந்தனை யிரட்சிக்கச்
சிறிய கடன் உன்னதம்மா
சிவ சிவ மஹேஸ்வரி பரமனிட யீஸ்வரி
சிரோன்மணி மனோன் மணியுநீ
அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி
யனாத ரட்சகியும் நீயே (1)

பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது
பாடகந் தண்டை கொலுசும்
பச்சை வைடூரியம் மிச்சையா இழைத்திட்ட
பாதச் சிலம்பினொலியும்
முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்
மோகன மாலை யழகும்
முழுதும் வைடூரியம் புஷ்பரா கத்தினால்
முடிந்திட்ட தாலி யழகும்
சுத்தமாயிருக்கின்ற காதினிற் கம்மலுஞ்
செங்கையிற் பொன் கங்கணமும்
ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற
சிறுகாது கொப்பி னழகும்
அத்திவரதன் தங்கை சக்தி சிவரூபத்தை
யடியனாற் சொல்ல திறமோ (2)

கெதியாக வுந்தனைக் கொண்டாடி நினதுமுன்
குறைகளைச் சொல்லி நின்றும்கொடுமையா
யென்மீதில் வறுமையாய் வைத்து நீ
குழப்பமா யிருப்பதேனோ
சதிகாரியென்று நானறியாம லுந்தனைச்
சதமாக நம்பி னேனே
சற்றாகிலும் மனது வைத்தென்னை ரட்சிக்க
சாதகனக் கில்லையோ?
மதிபோல வொளியுற்ற புகழ்நெடுங் கரமுடைய
மதகஜனை யீன்ற தாயே
மாயனிட தங்கையே பரமனது மங்கையே
மயானத்தில் நின்ற வுமையே
அதிகாரி யென்றுநா னாசையால் நம்பினேன்
அன்பு வைத்தென்னை யாள் வாய் (3)

பூமியிற் பிள்ளையாய்ப் பிறந்தும் வளர்ந்துநான்
பேரான ஸ்தலமு மறியேன்
பெரியோர்கள் தரிசன மொருநாளும் கண்டுநான்
போற்றிக் கொண்டாடி யறியேன்
வாமியென் றுன்னைச் சிவகாமி யென்றே சொல்லி
வாயினாற் பாடியறியேன்.
மாதா பிதாவினது பாதத்தை நானுமே
வணங்கியொரு நாளுமறியேன்
சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு
சாஷ்டாங்க தெண்டனிட்டறியேன்
ஆமிந்த பூமியிலடியனைப் போல் மூடன்
ஆச்சிநீ கண்ட துண்டோ (4)

பெற்றதா யென்றுன்னை மெத்தவும் நம்பிநான்
பிரியமா யிருந்தே னம்மா
பித்தலாட்டக் காரியென்று நானறியாது உன்
புருஷனை மறந்தே னம்மா
பக்தனாயிருந்து உன் சித்தமும் இரங்காமல்
பாராமுகம் பார்த்திருந்தால்
பாலன் யானெப்படி விசனமில் லாமலே
பாங்குட னிருப்பதம்மா
இத்தனை மோசங்க ளாகாது ஆகாது
இது தர்மமல் லவம்மா
எந்தனை ரக்ஷிக்க சிந்தனை களில்லையோ
யிது நீதி யல்ல வம்மா
அத்தி முகனாசையா லிப்புத்திரனை மறந்தாயோ
அதை யெனக்கருள் புரிகுவாய் (5)

மாயவன் தங்கை நீ மரகத வல்லிநீ
மணிமந்திர காரிநீயே
மாயசொ ரூபிநீ மகேஸ்வரியு மானநீ
மலையரை யன்மக ளானநீ
தாயே மீனாட்சிநீ சற்குண வல்லிநீ
தயாநிதி விசாலாட்சிநீ
தாரணியில் பெயர் பெற்ற பெரிய நாயகியும்நீ
சரவணனை யீன்ற வளும்நீ
பேய்களுடனாடிநீ அத்தனிட பாகமதில்
பேறுபெற வளர்ந்த வளும்நீ
பிரணவசொரூபிநீ பிரசன்ன வல்லிநீ
பிரியவுண் ணாமுலையுநீ
அகிலாண்டவல்லி நீயே (6)

பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்றதாய்
புத்திகளைச் சொல்லவில்லையோ
பேய்பிள்ளை யானாலும் தான் பெற்ற பிள்ளையை
பிரியமாய் வளர்க்க வில்லையோ
கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய் விட்டுக்
கதறி நானழுத குரலில்
கடுகதனிலெட்டிலொரு கூறுவதி லாகிலுன்
காதி னில் நுழைந்த தில்லையோ
இல்லாத வன் மங்களென் மீதிலேனம்மா
இனி விடுவதில்லை சும்மா
இருவரும் மடிபிடித்துத் தெருதனில் வீழ்வது
இதுதரும மல்ல வம்மா
எல்லாரு முன்னையே சொல்லியே யேசுவார்
அது நீதியல்ல வம்மா (7)

முன்னையோர் சென்மாந்திர மேனென்ன பாவங்கள்
இம் மூடன் செய்தா னம்மா
மெய்யென்று பொய்சொல்லி கைதனிற் பொருள்தட்டி
மோசங்கள் பண்ணினேனோ
என்னமோ தெரியாது இக்கணந் தன்னிலே
இக்கட்டு வந்த தம்மா
ஏழைநான் செய்தபிழை தாய்பொறுத்தருள் தந்து
என்கவலை தீரு மம்மா.
சின்னங்களாகாது ஜெயமில்லையோ தாயே
சிறுநாண மாகுதம்மா
சிந்தனைக ளென்மீதில் வைத்து நற்பாக்கியமருள்
சிவசக்தி காமாட்சி நீ
அன்னவாகனமேறி யானந்தமாக வுன்
அடியேன் முன்வந்து நிற்பாய் (8)

எந்தனைப் போலவே செனன மெடுத்தோர்கள்
இன்பமாய் வாழ்ந் திருக்க
யான் செய்த பாவமோ யித்தனை வறுமையினுள்
உன்னடியேன் தவிப்பதம்மா
உன்னையே துணையென் றுறுதியாய் நம்பினேன்
உன் பாதஞ் சாட்சியாக
உன்னையன்றி வேறுதுணை யினியாரை யுங்காணேன்
உலகந்தனி லெந்தனுக்கு
பிள்ளை யென்றெண்ணி நீ சொல்லாம லென்வறுமை
போக்கடித் தென்னைரட்சி
பூலோக மெச்சவே பாலன் மார்க்கண்டன்போல்
பிரியமாய்க் காத்திடம்மா
அன்னையே யின்னமுன்ன டியேனை ரட்சிக்க
அட்டி செய்யா தேயம்மா (9)

பாரதனிலுள்ளவும் பக்கியத்தோடென்னைப்
பாங்குட னிரட்சிக்கவும்
பக்தியாய் உன்பாதம் நித்தந் தரிசித்த
பாலருக் கருள் புரியவும்
சீர்பெற்ற தேகத்தில் சிறுபிணிகள் வாராமல்
செங்கலிய னணு காமலும்
சேயனிட பாக்கியஞ் செல்வங்களைத் தந்து
ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும்
பேர்பெற்ற காலனைப் பின்தொடர வொட்டாமற்
பிரியமாய்க் காத்திடம்மா
பிரியமாயுன்மீதில் சிறுயனான் சொன்னகவி
பிழைகளைப் பொறுத்து ரட்சி
ஆறதனில் மணல் குவித் தரியபூசை செய்தவென்
னம்மையேகாம்பரி நீயே (10)

எத்தனை ஜெனனம் எடுத்தேனோ தெரியாது
இப்பூமி தன்னி லம்மா
இனியாகிலும் கிருபை வைத்தென்னை ரட்சியும்
இனி ஜெனன் மெடுத் திடாமல்
முத்திதர வேணுமென்று உன்னையே தொழுதுநான்
முக்காலும் நம்பி னேனே
முன்பின்னுந் தோணாத மனிதரைப் போலநீ
முழித்திருக் காதே யம்மா
வெற்றி பெற வுன்மீதில் பக்தியாய் நான் சொன்ன
விருத்தங்கள் பதினொன்றையும்
விருப்பமாய்க் கேட்டு நீயளித்திடுஞ் செல்வத்தை
விமலனா ரேசப் போறார்.
அத்தனிட பாகமதை விட்டு வந்தேயென்
அருங்குறை யைத்தீரு மம்மா (11)

- ஆத்ம ஞான மையம்

Видео சர்வ மங்களம் அருளும் ஸ்ரீ காமாட்சி விருத்தம் வரிகளுடன் | Sri Kamakshi Virutham with Lyrics канала Athma Gnana Maiyam
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
7 марта 2021 г. 9:30:03
00:19:57
Другие видео канала
Kamakshi Amman virutham with Tamil lyricsKamakshi Amman virutham with Tamil lyricsஎதிரிகளின் செயல் நம்மை பாதிக்காமல் இருக்க | எதிரிகளை சமாளிப்பது எப்படி? How to deal with enemies?எதிரிகளின் செயல் நம்மை பாதிக்காமல் இருக்க | எதிரிகளை சமாளிப்பது எப்படி? How to deal with enemies?கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருளும் 18ஆம் படி கருப்பசாமி | Pathinettam padi Karuppasamyகூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருளும் 18ஆம் படி கருப்பசாமி | Pathinettam padi Karuppasamyஎல்லாவித பிரச்சனைகளுக்கும் தீர்வு - திருப்புகழ் | Thiruppugazh is the solution for all our problemsஎல்லாவித பிரச்சனைகளுக்கும் தீர்வு - திருப்புகழ் | Thiruppugazh is the solution for all our problemsஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் & பலன்கள் | Sri Lalitha Sahasranamam Stothram Recitation & Benefitsஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் & பலன்கள் | Sri Lalitha Sahasranamam Stothram Recitation & Benefitsகோளறு பதிகம் - வாழ்க்கையில் எல்லா பிரச்சினைகளும் தீர தினமும் படியுங்கள்| Kolaru Padhigam with lyricsகோளறு பதிகம் - வாழ்க்கையில் எல்லா பிரச்சினைகளும் தீர தினமும் படியுங்கள்| Kolaru Padhigam with lyrics🔴 LIVE | ஸ்ரீ தன்வந்தரி பெருமாள் - திருமஞ்சனம் & புஷ்ப வர்ஷினி | Sri Ahobila Mutt, Chembur🔴 LIVE | ஸ்ரீ தன்வந்தரி பெருமாள் - திருமஞ்சனம் & புஷ்ப வர்ஷினி | Sri Ahobila Mutt, Chemburவீட்டில் ராகு கால துர்க்கை பூஜை செய்ய வேண்டிய நாட்கள் & செய்யும் முறை | Rahu Kala Durgai puja @ homeவீட்டில் ராகு கால துர்க்கை பூஜை செய்ய வேண்டிய நாட்கள் & செய்யும் முறை | Rahu Kala Durgai puja @ homeசிவபுராணம் தினமும் கேட்பதற்காக தமிழ் & ஆங்கில வரிகளுடன் | Sivapuranam in my voice with lyricsசிவபுராணம் தினமும் கேட்பதற்காக தமிழ் & ஆங்கில வரிகளுடன் | Sivapuranam in my voice with lyricsKamakshi Virutham - Priyanka KrishnanKamakshi Virutham - Priyanka Krishnan4. நல்ல வரன் அமைந்து, விரைவில் திருமணம் நடக்க படிக்கச் வேண்டிய பதிகம் | Padhigam for Marriage4. நல்ல வரன் அமைந்து, விரைவில் திருமணம் நடக்க படிக்கச் வேண்டிய பதிகம் | Padhigam for Marriageநித்யஸ்ரீ மகாதேவனின் சகல சௌபாக்கியங்களும் தந்திடும் காஞ்சி ஸ்ரீ காமாக்ஷி அம்மன் ஸ்தோத்திரம்நித்யஸ்ரீ மகாதேவனின் சகல சௌபாக்கியங்களும் தந்திடும் காஞ்சி ஸ்ரீ காமாக்ஷி அம்மன் ஸ்தோத்திரம்Kanakadhara Stotram | Tamil | Lyrical | TranslatedKanakadhara Stotram | Tamil | Lyrical | Translatedவீட்டில் தெய்வீக சக்தி நிறைந்திருக்க நிலைவாசலில் இதை செய்யுங்கள் | Do this on your Main door frameவீட்டில் தெய்வீக சக்தி நிறைந்திருக்க நிலைவாசலில் இதை செய்யுங்கள் | Do this on your Main door frameஉடனடி சக்தி தரும் சுவையான சத்து மாவு தயாரிப்பது எப்படி? How to prepare tasty Health Mix for familyஉடனடி சக்தி தரும் சுவையான சத்து மாவு தயாரிப்பது எப்படி? How to prepare tasty Health Mix for family7. எறிபத்த நாயனார் | Nayanmargal History - Eripatha Nayanar | நாயன்மார்கள் வரலாறு7. எறிபத்த நாயனார் | Nayanmargal History - Eripatha Nayanar | நாயன்மார்கள் வரலாறுநவராத்திரி முழுவதும் படிக்க வேண்டிய மிக முக்கிய மந்திரம் | Mantra to be chanted during Navarathriநவராத்திரி முழுவதும் படிக்க வேண்டிய மிக முக்கிய மந்திரம் | Mantra to be chanted during Navarathriபெண்கள் பூ வைத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் | Benefits of keeping flowers on the head by womenபெண்கள் பூ வைத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் | Benefits of keeping flowers on the head by womenஎங்கள் இல்லத்தில் திருவிளக்கு பூஜை| வீட்டில் திருவிளக்கு பூஜை செய்வது எப்படி? Thiruvilakku Poojaiஎங்கள் இல்லத்தில் திருவிளக்கு பூஜை| வீட்டில் திருவிளக்கு பூஜை செய்வது எப்படி? Thiruvilakku Poojai
Яндекс.Метрика