Загрузка...

பார்க்கிங் கட்டணத்தை திருப்ப பெற லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தல்! Chennai Port | Lorry Strike

#Partnership சென்னையில் துறைமுகம், எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில், பல கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் நடக்கிறது.

இதில் சென்னை துறைமுகத்தில் சி.சி.டி.எல், சி.ஐ.டி.பி.எல் என்ற தனியார் சரக்கு பெட்டக முனையங்களும், எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் தனியார் நிர்வகிக்கும் கன்டெய்னர் முனையங்களும் செயல்பட்டு வருகின்றன.

இதில் துறைமுகத்தை சார்ந்து, சென்னையை ஒட்டி, 40க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் பொதுத்துறை சரக்கு பெட்டக நிலையங்கள் அமைந்துள்ளன.

சரக்கு பெட்டக நிலையங்களில் இருந்து, சென்னை துறைமுகத்துக்கு கன்டெய்னர்களை எடுத்து செல்வதில் லாரி உரிமையாளர்களுக்கும், சரக்கு பெட்டக நிலைய உரிமையாளருக்கும் வாடகை உயர்வு, ஒதுக்கீடு, குறித்த காலத்தில் வாடகை வழங்குவது உள்ளிட்டவற்றில் அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது. இதனால் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சென்னை துறைமுத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கன்டெய்னர் பார்க்கிங் பிளாசாவில், ஏப்ரல் முதல் 550 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என, சென்னை துறைமுக ஆணையம் அறிவித்தது.#Chennai Port | Lorry Strike

Видео பார்க்கிங் கட்டணத்தை திருப்ப பெற லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தல்! Chennai Port | Lorry Strike канала Dinamalar
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки