Загрузка страницы

Sister Marriage sentiment Emotional Wedding scene. love you sister....

#பிறந்த_வீடு..!!#பூலோக_சொர்க்கம்..!!

எல்லா பெற்றோருக்கும் தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்று தான்..!!

அவளுடைய பெற்றோரும் அப்படி தான் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்..!! படித்த மாப்பிள்ளை. கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன். இருவருக்கும் இருவரையும் பிடித்தது..!!

உடனே நிச்சயம் செய்து விட்டனர்..!! இருவரும் தினமும் அலைபேசியில் பேசத் தொடங்கினர்..!!

திருமண நாள் நெருங்க நெருங்க அவள் வீட்டில் ஒரே பதட்டம்..!! வேலைகள் தலைக்கு மேல் கிடந்தது..!! இருவரது வீட்டிலும் வேலைகள் துரிதமாக நடந்தது..!!

நாளை திருமண நாள்..!! அவளுக்கு மனது என்னவோ போல் இருந்தது..!! வீட்டை ஒரு முறை சுற்றி பார்க்க வேண்டும் போல் இருந்தது..!!
தினமும் அவருடன் பேசியதில் வீட்டை விட்டு செல்ல போகிறோம் என்று அவள் அப்போது நினைக்கவில்லை..!! ஆனால் ஏதோ ஒன்றை இழக்கப்போகிறோம் என்று அவள் மனம் பரிதவித்தது..!! தந்தையையும், தாயையும் பார்த்தாள். எல்லோரும் வேலையாய் இருந்தனர்..!!

அவள் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள்..!! விரித்த கண்களோடு வீட்டை பார்த்தாள். கண்கள் சுருங்கி பின்னர் ஓரத்தில் நீர் துளி சொட்டியது..!!

அங்கே.. தங்கை.. புதுத்துணி பரவசத்தில் "அக்கா"... என ஓடி வந்தாள்..!! அவளை பார்த்ததும்.. "என்னாச்சுக்கா..?" என்றாள்..!!

"பூ வாங்கினால் கூட சரிசமமாக வெட்ட சொல்லி சண்டை போடும் நான் இனி யாருடன் சண்டை போடுவேன்..?? இந்த சின்ன சின்ன மகிழ்ச்சிகளை கொடுத்து விட்டு நான் செல்ல போகிறேனே" என விழியோரம் வடிந்த நீரை துடைத்துக் கொண்டே எண்ணினாள்..!!

"அடுப்படியில் பால் கொதிக்கிறது நீ எங்கே போன..??" என்று அவளை திட்டினாள் அவளை பெற்றவள். அவளை வளர்த்தவள்.. !! அம்மாவை அடிக்கடி திட்டுவதும்.. பின்னர் கட்டி அணைப்பதும் இனி கிடைக்குமா..??

அப்பா யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்..!! அவள் பக்கத்தில் சென்று அமர்ந்தாள்..!! அப்பா பேசிக்கொண்டே அவளை பார்த்து "அம்மாவை கொஞ்சம் கூப்பிடுமா..!!" என்றார்..!!

"நீ எது கேட்டாலும் வாங்கி தருகிறேன். நீ என் செல்லம்டா.." என்று அன்பை கொட்டும் அப்பாவின் அன்பை இனி நான் எங்கே தேடுவேன்..!!

எச்சிலையும், சோகத்தையும் தொண்டையில் விழுங்கி விட்டு அம்மாவை அழைத்து விட்டு வெளியில் உள்ள மாடிப்படியில் உட்கார்ந்தாள்..!!

எங்கிருந்தோ குரல்.."அடியே உள்ள போ.. கறுத்து போக போற.. நாளைக்கு கல்யாணத்த வச்சிக்கிட்டு வெளியே வந்து உட்காராத..!!" பாட்டியின் குரல் தான் அது..!!

எப்போதும் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கும் பாட்டியின் பேச்சை கேட்காமல் முறைப்பாள்..!! ஆனால் இப்போது முறைக்க தோணவில்லை. முகம் அப்படியே அழுவது போல பொங்கியது. "என்னாச்சுடி என் ராசாத்தி..??" பாட்டி அருகில் வந்து கேட்டவுன் அதற்கு மேல் முடியவில்லை. வீட்டிற்குள் ஓடி சென்று கத்தி அழுதாள்..!!

எல்லோரும் பயந்து கொண்டு ஓடி வந்தனர். அவள் அம்மாவிடம் "அம்மா நான் இங்கேயே இருந்து விடுகிறேன். உங்களை விட்டு நான் எப்படி செல்வேன். அங்கே எப்படி இருக்குமோ எனக்கு பயமாக இருக்கிறது..!!" என்று அழுதாள்..!!

உடனே அப்பாவின் மனம் அழுதது. அம்மா சமாதானம் செய்தாள்..!!

அப்பா அவ்வளவு நெருக்கம் இல்லாமல் இருந்தாலும் அப்பாவிற்கும் மகளுக்கும் உள்ள பாசம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது..!!

தங்கை குலுங்கி குலுங்கி அழுதாள். "அழாதே அக்கா, மாமா உன்ன நல்லா பாத்துப்பாருக்கா.." என வெகுளி பேச்சில் சமாதானம் செய்தாள்..!!

அன்று இரவு.. அவளுக்கு பிடித்த அத்தனையும் சமைத்து கொடுத்தாள் அம்மா..!! ஆனால் அவள் மனம் புண்பட்டு போய் இருந்தாள்..!!

நாளை திருமணம். போகும் இடம் சொர்க்கமோ இல்லையோ என்றெல்லாம் தெரியாது. ஆனால் வாழ்ந்த ஒரு சொர்க்கத்தை விட்டு மட்டும் அவள் செல்ல போகிறாள் என்பது தெரிந்தது..!!

ஆணின் திருமணம் என்பது ஆண்கள் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு..!! ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்..!!

அவள் வாழ்ந்த வீட்டில் இருந்து வேரோடு பிடுங்கி எடுத்து மற்றொரு இடத்தில் நட்டு வைப்பதுதான் பெண்ணின் திருமணம்..!!

Видео Sister Marriage sentiment Emotional Wedding scene. love you sister.... канала Amma Media Channel
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
19 августа 2018 г. 20:48:38
00:03:11
Другие видео канала
அண்ணன் தங்கைஅண்ணன் தங்கைShe is Everything for us | Father's true love | JRD Realtorss,Kovaipudur |The PhotoToday PhotographyShe is Everything for us | Father's true love | JRD Realtorss,Kovaipudur |The PhotoToday PhotographySister Wedding Highlight Brother LoveSister Wedding Highlight Brother LoveRelation of a brother and sister is cutest in the world.. | whatsapp status | status videoRelation of a brother and sister is cutest in the world.. | whatsapp status | status videoDedicated to all brothers who love their Sisters...Dedicated to all brothers who love their Sisters...ക്യാമറ മാൻ വരെ കരഞ്ഞു പോയി 😢 Wedding Emotional Momentsക്യാമറ മാൻ വരെ കരഞ്ഞു പോയി 😢 Wedding Emotional Momentsemotional moment in marriage|tamil marriage tik tok video |marriage tik tok video tamil 2020emotional moment in marriage|tamil marriage tik tok video |marriage tik tok video tamil 2020Unkoodave Porakkanum Sister & Brother EmotionalUnkoodave Porakkanum Sister & Brother EmotionalLove & Emotion of Brother and Sister | Poetry by Mystic StudiosLove & Emotion of Brother and Sister | Poetry by Mystic StudiosTOP 50 Songs of M.G.R | Kannadasan | T.M. Soundararajan | One Stop Jukebox | Tamil | HD SongsTOP 50 Songs of M.G.R | Kannadasan | T.M. Soundararajan | One Stop Jukebox | Tamil | HD SongsA mother's treasure is her daughter | Sudheer & Sneha | Wedding Film | CaptureGuru PhotographyA mother's treasure is her daughter | Sudheer & Sneha | Wedding Film | CaptureGuru PhotographySister & Brother MomentsSister & Brother MomentsBrother sister emotional moment in marriage | tamil song | sister brother feeling whatsapp status ♥️Brother sister emotional moment in marriage | tamil song | sister brother feeling whatsapp status ♥️ഏട്ടനും പെങ്ങളൂട്ടിയും നമ്മളെയും കൂടെ കരയിപ്പിച്ചു കളഞ്ഞല്ലോ😪😓 Sister Brother Emotional Momentsഏട്ടനും പെങ്ങളൂട്ടിയും നമ്മളെയും കൂടെ കരയിപ്പിച്ചു കളഞ്ഞല്ലോ😪😓 Sister Brother Emotional Momentsகல்யாணம் முடிந்து கண்கலங்க வைக்கும் அண்ணன் தங்கச்சி பாசம் Tamil Dubsmash அட்டுழியங்கள் 2020கல்யாணம் முடிந்து கண்கலங்க வைக்கும் அண்ணன் தங்கச்சி பாசம் Tamil Dubsmash அட்டுழியங்கள் 2020திருமண தினத்தன்று குறும்புக்கார மாப்பிள்ளையின் குறும்புத்தனம் Tamil Dubsmash அட்டுழியங்கள் 2019திருமண தினத்தன்று குறும்புக்கார மாப்பிள்ளையின் குறும்புத்தனம் Tamil Dubsmash அட்டுழியங்கள் 2019Brother & Sister ❤ || Heart Touching Emotional Moment 😞||south Indian weddingBrother & Sister ❤ || Heart Touching Emotional Moment 😞||south Indian weddingAnna Thangachi Pasam song/Anna Thangachi Marriage Sentiment/ Anna Thangachi Songs/Murugan TechAnna Thangachi Pasam song/Anna Thangachi Marriage Sentiment/ Anna Thangachi Songs/Murugan Techதிருமணங்களில் நடந்த அழகான தருணங்களின் Tamil Dubsmash அட்டுழியங்கள் 2019திருமணங்களில் நடந்த அழகான தருணங்களின் Tamil Dubsmash அட்டுழியங்கள் 2019
Яндекс.Метрика