Загрузка...

வரலட்சுமி விரதம் பாடல்/மகாலட்சுமி பாடல்/ Mahalaxmi song/Bombay Sardha/varalakshmi vratham 2023

வரலட்சுமி விரதம்: வரலட்சுமி விரதம் வரும் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. கேட்ட வரங்கள் மட்டுமல்ல கேட்காத வரங்களையும் கொடுப்பாள் அன்னை வரலட்சுமி. இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதோடு செல்வம், தைரியம், வெற்றி, அரசு பதவி, குழந்தைப் பேறு, கல்வி உள்ளிட்ட எல்லா வளங்களும் வந்து சேரும். வரலட்சுமி விரதம் இருந்தால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். சித்ரநேமி என்ற கணதேவதை வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து தன்னுடைய குஷ்ட ரோகம் நீங்கப் பெற்றாள். வரலட்சுமி விரதம் எப்படி தோன்றியது இந்த விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என புராண கதையே உள்ளது.
புராண கதை: மகத நாட்டில் குஞ்சினாபுரம் என்ற ஊரில் வாழ்ந்த பெண் சாருமதி. இவள் தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்கள் போல் கருதாமல் இறைவனாகவே கருதி அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். அவளது மனப்பான்மை மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியை அளித்தது. அவளின் அன்பான மனதைக் கண்டு, மகாலட்சுமி தேவி மகிழ்ச்சியடைந்தாள். ஒரு நாள் சாருமதியின் கனவில் தோன்றிய லட்சுமிதேவி, என்னைத் துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களின் இல்லத்தில் நான் வசிப்பேன் என்று கூறியதுடன், அந்த விரதத்தை கடைப் பிடிக்கும் வழிமுறைகளையும் சாருமதிக்கு எடுத்துரைத்தார். அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் சிறப்பு மிகுந்த பணியையும் அவளிடம் லட்சுமிதேவி ஒப்படைத்தாள். சாருமதியும், தேவியின் எண்ணப்படியே அனைத்தையும் செய்து முடித்தாள். சாருமதி வரலட்சுமி விரதம் இருந்து பல நன்மை களைப் பெற்றாள். அதைக் கண்ட மற்ற பெண்களும் அந்த விரதத்தை கடைப் பிடிக்கத் தொடங்கினர். அதன் காரணமாக அந்த நாடே சுபீட்சம் அடைந்தது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
.
சாப விமோசனம்: பல காலத்திற்கு பிறகு அங்கு தேவ கன்னிகைகள் வந்து தேவி பூஜையில் ஈடுபடுவதைக் கண்டு தன்னைப்பற்றி கூறி தாங்கள் அனுஷ்டிக்கும் விரதம் பற்றி கூறுமாறு கேட்டான். அவன் மேல் பரிதாபம் கொண்ட கன்னிகைகள் தாங்கள் அனுஷ்டிப்பது வரலஷ்மி விரதம். சூரியன் கடகத்தில் இருக்கும் போது கங்கையும் யமுனையும் சேரும் காலத்தில் துங்கபத்திரா நதிக்கரையில் சிராவண மாதத்தில் சுக்லபக்ஷத்தில் வெள்ளிக்கிழமையில் முறைப்படி மஹாலஷ்மியை பற்றியதான இந்த விரதத்தை தொடங்க வேண்டும். என்று விரதம் பற்றி கூறினார்கள். அவர்கள் செய்த பூஜையை கண்ட சித்ரநேமிக்கு குஷ்டம் நீங்கி மீண்டும் கைலாயம் சென்றான். பார்வதி அனுஷ்டித்த நோன்பு: பார்வதி தேவியும் இந்த விரதத்தை அனுஷ்டித்து ஷண்முகரை பெற்றாள்.விக்ரமாதித்தன் இவ்விரதம் கடைபிடித்து நந்தனிடமிருந்து ராஜ்யம் பெற்றான். நந்தனின் மனைவி அனுஷ்டித்து பிள்ளைப்பேறு பெற்றாள். குண்டினம் என்ற நகரத்தில் வசித்த சாருமதி என்ற பெண் இவ்விரதமிருந்து சகல சௌபாக்கியமும் பெற்றாள். என்ன செய்ய வேண்டும்: வரலட்சுமி விரத நாளில் புண்ணிய நதிகளில் நீராடலாம். இது ஓராண்டு லட்சுமி வழிபாட்டுக்குரிய பலன்களை நமக்குத் தரும். வரலட்சுமி பூஜை தினத்தன்று சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து வணங்கினால் நல்லது. வரலட்சுமியை எந்த அளவுக்கு தாமரை மலர்களால் அலங்கரித்து வழிபாடு செய்கிறோமோ, அந்த அளவுக்கு புண்ணியம் சேரும். மகாலட்சுமிக்கு மஞ்சள் நிறப்பட்டு என்றால் பிரியம் அதிகம். லட்சுமி, அனைவருக்கும் நன்மை தருபவள் என்று அதர்வன வேதத்தில் கூறப்பட்டுள்ளது. லட்சுமி, வழிபாட்டின் போது மறக்காமல் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்வது மிகவும் நல்லது. அம்மனுக்கு நைவேத்தியம்: வரலட்சுமி தினத்தன்று அன்னம், பருப்பு, வடை, பாயசம், கொழுக்கட்டை, அப்பம், இட்லி முதலியவற்றுடன் பழவகைகளை நைவேத்தியம் செய்ய வேண்டும். வரலட்சுமி பூஜைக்கு கொழுக்கட்டை நைவேத்தியமே பிரதானமானது. வரலட்சுமி பூஜையின் போது அருகம்புல்லை தூவி வழி பட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். வரலட்சுமி பூஜைக்கு பயன்படுத்தும் கும்பத்தை பிறகு பத்திரப்படுத்தி, சுத்தமான இடத்தில் வைத்துக் கொள்ளலாம். வேறு பூஜைகள் நடத்தும் போது அதை பயன்படுத்தலாம். வழிபாட்டு பலன்கள்: வரலட்சுமி பூஜையின் போது சந்தனத்தில் லட்சுமி செய்து வழி படலாம். ஆனால் மறுநாள் அதை நீர் நிலைகளில் கரைத்து விட வேண்டும். வரலட்சுமி தினத்தன்று புண்ணிய நதிகளில் நீராடலாம். இது ஓராண்டு லட்சுமி வழிபாட்டுக்குரிய பலன்களை நமக்குத் தரும். வரலட்சுமி பூஜை தினத்தன்று சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து வணங்கினால் நல்லது. வரலட்சுமியை எந்த அளவுக்கு தாமரை மலர்களால் அலங்கரித்து வழிபாடு செய்கிறோமோ, அந்த அளவுக்கு புண்ணியம் சேரும். சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்: அன்னை மகாலஷ்மியை மகிழ்விக்கும் இந்த விரதமிருக்கும் பெண்மணி இவ்வுலகில் சகல போகங்களையும் பெற்று அனுபவித்தபின் வைகுந்தம் சேருவாள். எல்லா சுக்லபட்ச வெள்ளிக்கிழமைகளில் மஹாலஷ்மியை முறைப்படி பூஜிப்பவர்கள் வாழ்நாள் முழுதும் செல்வ செழிப்புடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள். அவர்கள் குடும்பம் தழைக்கும். வரலட்சுமி விரதக்கதையை படிப்பவர்கள் கேட்பவர்களும் வரலஷ்மியின் அருளால் தனதான்ய சம்பத்துடன் சௌக்கியமாக வாழ்வார்கள் என தேவர்கள் வாழ்த்துகின்றனர். செப்டம்பர் மாத ராசி பலன் 2023.. வக்ரமடையும் குரு பகவான்... லட்சுமி குபேர யோகம் யாருக்கு கிடைக்கும்? செப்டம்பர் மாத ராசி பலன் 2023.. வக்ரமடையும் குரு பகவான்... லட்சுமி குபேர யோகம் யாருக்கு கிடைக்கும்? வரலட்சுமி நோன்பின் பலன்கள்: வரலட்சுமி விரதம் இருந்து மாலையில் பூஜை செய்யும் போது அக்கம் பக்கத்தில் இருக்கும் கன்னிப் பெண்கள், சுமங்கலிப் பெண்களை அந்த விரத பூஜையில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுக்க வேண்டும். வரலட்சுமி நோன்பு விரதத்தை நடத்துபவருக்கு எவ்வளவு சிறப்புகள் கிடைக்குமோ, அதேபோல் அதில் கலந்து கொள்பவர் களுக்கும் சிறப்பு வந்து சேரும். இந்த விரதத்தை ஒவ்வொரு ஆண்டும் தவறாது அனுஷ்டித்து வந்தால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணமும், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Видео வரலட்சுமி விரதம் பாடல்/மகாலட்சுமி பாடல்/ Mahalaxmi song/Bombay Sardha/varalakshmi vratham 2023 канала Hasini Musicals
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки