Загрузка...

அரசு ஊழியர்கள் நலன் | Government Employee welfare | Government Teachers welfare

அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் நலன்:
அரசு எந்திரத்தின் அச்சாணிகளாக இருக்கும் அரசு ஊழியர்களும், எதிர்கால சமூகத்தை உருவாக்குவதற்கான பணியில் தங்களை அர்ப்பணித்திருக்கும் ஆசிரியர்களும், மக்களின் உயிர்காக்கும் மருத்துவர்களும் எதற்காகவும் போராடாத சூழ்நிலையை ஏற்படுத்துவது வளர்ச்சிக்கு முக்கியம். அவர்களது நியாயமான கோரிக்கைகள் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றித் தரப்பட வேண்டும். அதேநேரத்தில் காலத்திற்கேற்ப நிர்வாகத்தை மேம்படுத்துவதிலும், கற்பித்தலைத் தரமாக்கிடுவதிலும், உள்ளன்போடு சிகிச்சை அளிப்பதிலும் அவர்களுக்குள்ள பொறுப்பை உணர்த்தி, அரசு ஊழியர் – ஆசிரியர்கள், மருத்துவர்களின் முழுமையான பங்களிப்போடும், ஒத்துழைப்போடும் அரசாட்சி நடக்க வேண்டும் என்பதே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை.
காலியாக உள்ள ஆசிரியர், அரசு ஊழியர் உள்ளிட்ட அரசுப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும். பகுதி நேர ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர்கள், இசை, ஓவியம் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு காலியிடங்களை நிரப்புவதில் முன்னுரிமை வழங்கப்படும்.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையே செயல்படுத்தப்படும்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களுக்கு அருகிலேயே குடியிருப்பு வசதியும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை. தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் பணியமர்த்தப்படும் ஊழியர்கள் அங்கே போக மறுப்பதற்கு குடியிருப்பு வசதிகள் போதிய அளவு இல்லாமல் இருப்பதே காரணம்.
இதைக் கருத்தில் கொண்டு ஊராட்சி ஒன்றியம் தோறும் அரசு ஊழியர்கள் குடியிருப்பு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
100 பேருக்கு குறையாமல் வேலைசெய்யும் அரசு அலுவலக வளாகங்கள் அனைத்திலும் சலுகை விலை உணவகங்கள் அமைக்கப்படும். இந்த உணவகங்களை நடத்த மகளிர் மற்றும் இளைஞர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

Songs Download - https://ammkitwing.in/songs/​
Election Manifesto - https://ammkitwing.in/election-manifesto-2021/
AMMK Election Manifesto 2021

#வெற்றிசின்னம்குக்கர்
#TTV4TNCM
#TTVDhinakaran #AMMK
#பிரஷர்குக்கர் #Cooker
#Election2021

Видео அரசு ஊழியர்கள் நலன் | Government Employee welfare | Government Teachers welfare канала AMMK IT WING Official
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки