Загрузка страницы

வேர்க்கடலை சாகுபடி முறை | groundnut | groundnut | verkadalai | A to Z

வேர்க்கடலை சாகுபடி முறை | groundnut | groundnut | verkadalai | A to Z
#groundnut# balajitindivanam#

வேர்க்கடலை, கச்சான் என்று பொதுவாய் அழைக்கப்படும் நிலக்கடலை, மக்களால் விரும்பி உண்ணப்படும் கொட்டைகளைத் தரும் பருப்பு வகை தாவரமாகும்.

தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்த தாவரம் இன்று உலக நாடுகள் அனைத்திலும், உண்ணும் உணவில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் தென் ஆற்காட்டில் இந்த பயிர் அதிகம் விளைவிக்கப்பட்டதால் அது கிழக்கு கடற்கரை வழியாய் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து இந்தியா வந்ததாக கருதப்படுகிறது.

இன்று உலக அளவில் வேர்க்கடலை உற்பத்தியில் முன்னனி நாடாக இந்தியா உள்ளது. ஏறத்தாழ எட்டு மில்லியன் ஹெக்டேர்களில் கடலை சாகுபடி செய்யப்படுகிறது.

முக்கியமாக ஆந்திரம், தமிழகம், குஜராத், கர்நாடகம், மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் கடலை சாகுபடி அதிகமாக உள்ளது.

எப்படி பயிரிடுவது…?
இரகங்கள் :

டி.எம்.வி 7, டி.எம்.வி 10, கோ.3, கோ.ஜி.என் 4, கோ.ஜி.என் 5, ஏ.எல்.ஆர் 3, வி.ஆர்.ஐ2, வி.ஆர்.ஐ3, வி.ஆர்.ஐ.ஜி.என் 5, வி.ஆர்.ஐ 6 ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

பருவம்

நிலக்கடலை விதைப்புக்குச் சிறந்த பருவம் ஜுன் – ஜுலை மற்றும் டிசம்பர் – ஜனவரி மாதங்களே ஆகும்.

மண்

மணற்பாங்கான வண்டல், செம்மண் நிலங்கள் நிலக்கடலை சாகுபடிக்கு ஏற்றவை.

நிலம் தயாரித்தல்

கோடை காலத்தில் நிலத்தை நன்றாக குறுக்கு உழவு செய்து, அதிலுள்ள களைகளை நீக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கோடை மழையில் மண்ணில் மழை நீர் சேமிக்கப்படுகிறது அல்லது கோடை மழையில் சணப்பை போன்ற பயிர்களை விதைத்து பூக்கும் தருணத்தில் அதை மடக்கி உழுதும் நிலத்தைத் தயார் செய்து வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பருவமழை வந்தவுடன் விதைப்புக்கருவி கொண்டு விதைப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

செம்மண் நிலங்களைப் பொறுத்தவரையில் மேல்மண் இறுக்கம் கடலை மகசூலை மிகவும் பாதிக்கிறது.
மேல் மண் இறுக்கத்தை நிவர்த்தி செய்ய எக்டருக்கு 2 டன் சுண்ணாம்பு மற்றும் 12.5 டன் தொழு உரம் அல்லது மக்கிய தென்னை நார்க்கழிவு கடைசி உழவின் போது இட வேண்டும். மேலும் அடிமண் கடின அடுக்கை உடைக்க 3 வருடத்திற்கு ஒருமுறை உளிக்கலப்பை கொண்டு உழ வேண்டும்.

விதையளவு

எக்டருக்கு 125 கிலோ விதையினைப் பயன்படுத்தவேண்டும். பெரிய விதை கொண்ட இரகங்களுக்கு விதை அளவில் 15 சதவிகிதம் கூடுதலாக தேவைப்படும்.

விதைநேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு சூடோமோனாஸ் 10 கிராம் அல்லது டிரைக்கோடெர்மா 4 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் விதை முளைப்புத்திறன் அதிகரிக்கப்படுவதுடன் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது. விதை நேர்த்தி மிகவும் கவனமாக செய்ய வேண்டும். ஏனெனில் விதை நேர்த்தி செய்யும் போது விதை உறையில் பாதிப்பு ஏற்பட்டால் முளைப்புத்திறன் பாதிக்கப்படும்.

விதை நேர்த்தி செய்யாவிட்டால், ஏக்கருக்கு ரைசோபியம் 4 பாக்கெட்(800 கிராம்) மற்றும் பாஸ்போபாக்டீரியா 4 பாக்கெட் (800 கிராம்) உடன் 10 கிலோ தொழு உரம் மற்றும் 10 கிலோ மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன்னால் இட வேண்டும்.

விதைத்தல்

நிலக்கடலைக்கு வரிசைக்கு வரிசை 30 செ.மீ, செடிக்கு செடி 10 செ.மீ இடைவெளியும் விட்டு விதைக்க வேண்டும். மானாவாரி செம்மண் மற்றும் செம்புரை நிலங்களில் விதைப்புக்கருவி கொண்டு விதைக்கும் போது விதையின் அளவு குறைவதுடன் மண்ணில் ஈரம் குறைவதற்குள் விதைத்து விடலாம். விதைக்கருவியின் மூலம் விதைப்பதால் சரியான பயிர் இடைவெளியை கடைபிடிக்கலாம். இவ்வாறு செய்வதால் களை நிர்வாகம் செய்வதற்கு ஏதுவாகவும் மற்றும் பயிர் வளர்ச்சி சீராகவும் இருக்கும்.

நீர் நிர்வாகம்

விதைக்கும் சமயம் ஈரப்பதம் உள்ளவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் உயிர்த் தண்ணீர் விதைத்த 4-5வது நாள் விட வேண்டும். மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து வாரம் ஒரு முறை நீர் விடவேண்டும்.

உரங்கள்
ரைசோபியம் மற்றும் பாஸ்போபாக்டீரியா உயிர் உரத்தினை ஏக்கருக்கு 4 பாக்கெட் வீதம் அடியுரமாக இடுவதால் தழைச்சத்து மற்றும் மணிச்சத்து நிலக்கடலைக்கு சீராகக் கிடைக்கும்.

ஜிப்சம் இடுதல்

நிலக்கடலை உற்பத்தியில் பயிருக்கு ஜிப்சம் இடுவது மிக அவசியம். ஜிப்சத்தில் சுண்ணாம்புச் சத்தும், கந்தகச் சத்தும் அடங்கி உள்ளன. சுண்ணாம்புச் சத்து காய்கள் திறட்சியாகவும், அதிக எடை உடையதாகவும் உருவாக வழி செய்கிறது. கந்தகச் சத்து நிலக்கடலையில் எண்ணெய்ச் சத்தை அதிகரிக்கிறது. ஒரு ஏக்கருக்கு 160 கிலோ ஜிப்சத்தை விதைத்த 40-45ம் நாள் இட்டு செடிகளைச் சுற்றி மண் அணைக்க வேண்டும்.

அறுவடை

முதிர்ந்த இலைகள் காய்ந்து விடுதல் மற்றும் மேல்மட்ட இலைகள் மஞ்சளாவதும் முதிர்ச்சியைக் குறிக்கும். கால அளவைப்பொறுத்து பயிர் கண்காணிக்கப்பட வேண்டும். தோராயமாக ஒரு சில செடிகளைப் பிடுங்கி காய்களை உரிக்க வேண்டும். ஓட்டின் உட்புறம் வெள்ளையாக இல்லாமல் பழுப்பு கலந்த கறுப்பு நிறத்தில் இருப்பின் அது முதிர்ச்சி நிலையைக் குறிக்கிறது.

அறுவடைக்கு முன் நீர் பாய்ச்ச வேண்டும். நீர் பாய்ந்த நிலம்
சுலபமாக அறுவடைக்கு உதவுகிறது. மண்ணில் போதுமான ஈரப்பதம் இருப்பின் அறுவடைக்கு முன் நீர் பாய்ச்சத் தேவையில்லை. பிடுங்கப்பட்ட செடிகளைக் குவியலாக வைக்கக் கூடாது. ஏனெனில் ஈரமாக உள்ள போது, குறிப்பாகக் கொத்து ரகங்கள் முளைக்க ஆரம்பித்து விடும்
any questions

balaji tindivanam
for contact
9789506317

Видео வேர்க்கடலை சாகுபடி முறை | groundnut | groundnut | verkadalai | A to Z канала விவசாயம் செய்வோம்
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
27 декабря 2020 г. 18:39:55
00:04:58
Другие видео канала
Groundnut-Peanut Farming complete guide in TamilGroundnut-Peanut Farming complete guide in Tamilசீரக சம்பாவின் சிறப்புகள்சீரக சம்பாவின் சிறப்புகள்நிலக்கடலை நல்ல விளைச்சல் கொடுக்க பயன்படும் தொழில்நுட்ப முறைகள் | Groundnut Harvestingநிலக்கடலை நல்ல விளைச்சல் கொடுக்க பயன்படும் தொழில்நுட்ப முறைகள் | Groundnut Harvesting#நிலக்கடலை சாகுபடி | #nilakadalai sagupadi in tamil |#kadalai vivasayam #groundnut cultivation tamil#நிலக்கடலை சாகுபடி | #nilakadalai sagupadi in tamil |#kadalai vivasayam #groundnut cultivation tamil30 மூட்டை கிடைத்தாலே லாபம் 46மூட்டை எடுத்தேன் என்கிறார்30 மூட்டை கிடைத்தாலே லாபம் 46மூட்டை எடுத்தேன் என்கிறார்நிலக்கடலை சாகுபடி- டிரம் கொண்டு உருட்டுவதால் அதிக மகசூல் 🌱 #பிரிட்டோராஜ்🌱9944450552நிலக்கடலை சாகுபடி- டிரம் கொண்டு உருட்டுவதால் அதிக மகசூல் 🌱 #பிரிட்டோராஜ்🌱9944450552150 ரூபாயில் நிலக்கடலை சாகுபடி இயந்திரம்,150 ரூபாயில் நிலக்கடலை சாகுபடி இயந்திரம்,கடலை சாகுபடி நேர்காணல்கடலை சாகுபடி நேர்காணல்எளிய முறையில் 🥜நிலக்கடலை விவசாயம் செய்வதில் விவசாயிகள் மிகுந்த ஆர்வம் | வேர்க்கடலை விவசாயம்எளிய முறையில் 🥜நிலக்கடலை விவசாயம் செய்வதில் விவசாயிகள் மிகுந்த ஆர்வம் | வேர்க்கடலை விவசாயம்வேர்க்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெற பேரல் உருட்டும் முறைவேர்க்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெற பேரல் உருட்டும் முறைGroundnutGroundnutநிலக்கடலை சாகுபடி,  ஆரம்பம் முதல் அறுவடை வரை....,.நிலக்கடலை சாகுபடி, ஆரம்பம் முதல் அறுவடை வரை....,.மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடி செய்யும் முறைகள். பிரிட்டோ ராஜ் 9944450552மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடி செய்யும் முறைகள். பிரிட்டோ ராஜ் 9944450552வேர்கடலை / நிலக்கடலை விதைக்கும்  செயல்முறை  விவசாயம் | Groundnut Planting Process [ 7 Steps - Vlog ]வேர்கடலை / நிலக்கடலை விதைக்கும் செயல்முறை விவசாயம் | Groundnut Planting Process [ 7 Steps - Vlog ]நிலக்கடலையை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி ? | மலரும் பூமிநிலக்கடலையை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி ? | மலரும் பூமிநிலக்கடலையில் இரகம் தேர்வு செய்தல் / Selection of Groundnut varieties for Vaigasi and Aani pattamநிலக்கடலையில் இரகம் தேர்வு செய்தல் / Selection of Groundnut varieties for Vaigasi and Aani pattamநிலக்கடலை சொட்டு நீர் பாசனத்தின் மூலம் சாகுபடி செய்யும் முறை | Groundnut Sowing Machine |நிலக்கடலை சொட்டு நீர் பாசனத்தின் மூலம் சாகுபடி செய்யும் முறை | Groundnut Sowing Machine |கோடை காலத்தில் 🥜நிலக்கடலை விவசாயம் செய்வதில் விவசாயிகள் மிகுந்த ஆர்வம் | வேர்க்கடலை விவசாயம்கோடை காலத்தில் 🥜நிலக்கடலை விவசாயம் செய்வதில் விவசாயிகள் மிகுந்த ஆர்வம் | வேர்க்கடலை விவசாயம்மிகக்குறைந்த நீரில் அதிக இலாபம் தரும் விவசாய சுழற்சி முறை | Agriculture Cycle | Oor Naattanமிகக்குறைந்த நீரில் அதிக இலாபம் தரும் விவசாய சுழற்சி முறை | Agriculture Cycle | Oor Naattanநிலக்கடலை(கச்சான்) வரிப்பயிர்ச் செய்கைநிலக்கடலை(கச்சான்) வரிப்பயிர்ச் செய்கை
Яндекс.Метрика