Загрузка страницы

06.001.02 தில்லை(சிதம்பரம்) | கற்றானைக் கங்கைவார் சடையான் தன்னை

பாடல் எண் : 02
கற்றானைக் கங்கைவார் சடையான் தன்னைக்
காவிரிசூழ் வலஞ்சுழியும் கருதினானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய்வானை
ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே
மற்றாரும் தன்னொப்பார் இல்லாதானை
வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தப்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

பொருளுரை : எல்லாக் கலைகளும் கைவரப் பெற்றவன் சிவபெருமான், கங்கையைத் தனது நீண்ட சடையில் தேக்கியவன்; காவிரியால் ஒரு புறத்தில் சூழப்பட்ட வலஞ்சுழி தலத்தில் உறைபவனும் வாழ்க்கையில் துணை ஏதும் இல்லாதவர்க்கும் துன்பத்தால் வாடுகின்றவர்க்கும் அருள் செய்யும் இறைவனும்; திருவாரூர் தலம் புகுகின்றவனும் ஆகிய சிவபெருமானை நாங்கள் அறிந்து கொண்டோம். அவன், தனக்கு ஒப்பாக எவரும் இல்லாதவன்; வானவர்களால் எப்போதும் வணங்கி ஏத்தப்படுபவன். இத்தகைய பெருமை வாய்ந்த பெரும்பற்றப் புலியூரானைப் பேசாமல் கழிக்கும் வாழ்நாட்கள் வீணாகக் கழிக்கும் நாட்கள் ஆகும்.

குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

https://www.youtube.com/channel/UCEwdHs8LcSM1MToqMdxzEig

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"

Видео 06.001.02 தில்லை(சிதம்பரம்) | கற்றானைக் கங்கைவார் சடையான் தன்னை канала Thiruneriya Thamizhosai
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
19 июня 2024 г. 22:09:32
00:01:36
Яндекс.Метрика