Загрузка страницы

மணல் குவாரிக்கு எதிர்ப்பு - கரூர் அருகே மணல் குவாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

கரூர் அருகே கடம்பங்குறிச்சி காவேரி ஆற்றில் புதிய மணல் குவாரி அமைப்பதை கண்டித்து அப்பகுதிவாழ் மக்கள் சுமார் 250 க்கும் மேற்பட்ட பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் – வட்டாட்சியரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், வாங்கல் அடுத்த கடம்பங்குறிச்சி பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், வாங்கல் கடம்பங்குறிச்சியில் மணல் அள்ளும் இடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு, சுமார் 250 க்கும் மேற்பட்ட பெண்கள் ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர். இதையறிந்த வாங்கல் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன், மண்மங்கலம் வருவாய் வட்டாட்சியர் அம்பாயிரநாதன் ஆகியோர் பிரச்சினை குறித்து பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்றார். அப்போது வருவாய் வட்டாட்சியர் அம்பாயிரநாதனையும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் மணல் அள்ளுவது கை விடப்பட்டது. மேலும் ஏற்கனவே இப்பகுதியில் கடந்த 4 வருடங்களாக முற்றிலும் மணல் அள்ளியதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள், எங்களுக்கு குடிநீர் பிரச்சினை மட்டுமில்லாமல், பாசனத்திற்காக விவசாயத்திற்கும் நீரில்லாமல் தவிப்பதால், பருவமழை பொய்த்ததாலும், காவிரி ஆற்றில் மணல் அள்ளக் கூடாது என்றும், உயிர்சேதம் மட்டுமில்லாமல், குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் தவிப்பதாகவும், விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறும் நிலை உருவாகுவதால் மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியதோடு, ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர். மேலும் காவிரி ஆற்றின் படுகைகளில் மணல் அள்ளக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்ததால் மணல் அள்ளுவதை கைவிட்டனர்.
பேட்டி : கோகிலாமணி – கடம்பங்குறிச்சி – மண்மங்கலம் வட்டம் – கரூர் மாவட்டம்

Видео மணல் குவாரிக்கு எதிர்ப்பு - கரூர் அருகே மணல் குவாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் канала boomi news
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки