Загрузка страницы

Sri Rama Baktha Anjaneya Kavasam || Sri Anjaneya Suprabhatham || Hanuman Songs || Vijay Musicals

Song : Sri Rama Baktha Anjaneyar Kavasam || Album : Sri Anjaneyar Suprabhatham || Singer : Krishnaraj || Lyrics : Senkathirvanan || Music : Kanmaniraja || Video : Kathiravan Krishnan || Lord : Anjaneya || Vijay Musicals || Tamil Devotional Song || பாடல் : ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கவசம் || ஆல்பம் : ஸ்ரீ ஆஞ்சநேயர் சுப்ரபாதம் || பாடியவர் : கிருஷ்ணராஜ் || இயற்றியவர் : செங்கதிர்வாணன் || இசை : கண்மணிராஜா || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || கடவுள் : ஆஞ்சநேயர் || விஜய் மியூஸிக்கல்ஸ் || தமிழ் பக்தி பாடல், Anjaneyar Songs

பாடல்வரிகள் | Lyrics :

ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கவசம் பாடி
அன்போடு துதிப்பவர்க்கு உண்டாகும் நன்மை கோடி

பேராற்றல் கொண்டிருக்கும் மாருதி நீயே
உனைப்போற்றி பாட வந்தோம் நீயருள் செய்வாயே

அஞ்சனா தேவியின் அருந்தவ மைந்தா
வணங்கிட வந்தோம் ஜெய் ஹநுமானே

அன்புடையோரைக் காப்பவன் நீயே
நெஞ்சினில் என்றும் வைத்தே உன்னை
சந்தனத்தாலே பொட்டினையிட்டு
சிந்தையில் வந்து நிறைந்தவன் நீயே
காற்றினில் என்றும் கலந்திருப்பவனே
கைதொழுவோரை காத்திடுவோனே
ஆற்றலும் சக்தியும் உன்னிடம் வேண்டி
ஸ்ரீஜெயராமன் நாமங்கள் சொல்லி
வேற்றுமை எண்ணம் நீங்கிடத் தானே

ராமனைக் கண்டு மற்றவரெல்லாம்
ஓடியபோதில் நீமட்டும் வந்து
துணிவுடன் நீயே தாழ் பணிந்தாயே
தூயவன் வடிவில் உனையிழந்தாயே
தேவியைத் தேடும் திவ்யப் பணியில்
வெற்றிக்கு நானும் உழைப்பேன் என்று
தசரத மைந்தன் மகிழ்ந்திடும் வண்ணம்
நல்லுரை சொன்ன நாயகன் நீயே
கெட்டவன் வாலி செத்தொழிந்தானே
நல்லவர் வாழ அருள் செய்வோனே

மார்கழித்திங்கள் பிறந்தவன் நீயே
மாறாக்கருணை கொண்டவன் நீயே
ராமனின் பாதம் பணிந்தவன் நீயே
ராம பக்தரைக் காப்பவன் நீயே
சொல்லின் செல்வன் என்றே உன்னை
கம்பனும் அன்று சொன்னான் அய்யா
பலத்தில் உனக்கு நிகரே இல்லை
பக்தியில் உனக்கு இணையே இல்லை
வானரகுலத்து வல்லமையோனே
வாழ்வினில் நல்ல வளமையைக் காண

செல்வம் பெருகும் உன்னால் என்று
சிந்தை குளிர்ந்து அருள்வாய் என்று
உள்ளம் தெளிய வைத்திட உன்னை
உன்புகழ் என்றும் சொல்லியே உன்னை
செய்யும் தொழிலைப் பெருக்கிடுவோனே
சிறப்புடன் வாழ செய்திடுவாயே
வையகம் உன்னை போற்றுவதாலே
வரங்களை அள்ளித் தருவதனாலே
நெய்யுடன் உன்னை பணிந்திடுவோரை
மேன்மையுறவே செய்பவன் நீயே

சீதையைத் தேடி தென்திசை நோக்கி
சென்றிடும் ஆற்றல் கொண்டவன் நீயே
அங்ஙனம் நீயும் இலங்கை சென்று
சீதையின் இடத்தை கண்டவன் நீயே
லங்கேஸ்வரனை வெறுத்தே சீதை
உயிரை மாய்க்க எண்ணிய வேளை
ராமனின் தூதன் வந்தேன் என்று
ஸ்ரீராமன் தந்த மோதிரம் காட்டி
சீதையை மகிழ செய்தவன் நீயே
தேவியின் அன்பை பெற்றவன் நீயே

சீதையைக் கண்ட சேதியைச் சொல்லி
ராமனுக்கின்பம் சேர்த்தவன் நீயே
வாடிய உள்ளம் மகிழ்ந்தது உன்னால்
ராமனின் உற்றத் தோழனுமானாய்
லங்கை வேந்தன் அவையில் சென்று
மன்னவன் குற்றம் சொன்னவன் நீயே
சின்னவன் என்று இகழ்ந்தவர் முன்னே
சினமே கொண்டு பேறுருவெடுத்தாய்
உந்தன் ஆற்றலை கண்டவரெல்லாம்
ஓடி ஒழிந்தார் உறுதி குலைந்தார்

வாலில் தீயை வைத்ததனாலே
இலங்கையை அன்று எரித்தனையன்றோ
ராமனைக் கண்டு நிகழ்ந்ததைக் கூறி
போரினைத் தொடங்கச் சொன்னவன் நீயே
கேடயமாக நீயே நின்று
ராம லக்ஷ்மணர் காத்தவன் நீயே
தோளின் அவரை சுமந்தே போரில்
வீரம் காட்டிய சூரனும் நீயே
அரக்கரின் கூட்டம் அஞ்சிடச் செய்தாய்
அதனால்தானே உன்திருவடியை

பிரம்மாஸ்த்திரத்தின் சக்தியினாலே
லக்கவன் மண்ணில் சாய்ந்தனன் அய்யா
ராமரும் அங்கே உள்ளவரெல்லாம்
கண்கள் கலங்கி உள்ளம் தளர்ந்தார்
மாண்டான் தம்பி என்றே எண்ணி
மாதவன் நெஞ்சம் வாடியதய்யா
ஜாம்பவானும் அந்தப் பொழுதில்
மூலிகை ஒன்று வேண்டுமே என்றார்
மூலிகை வாசம் பட்டதும் அங்கே
மாண்டவர் மீண்டும் எழுவார் என்றார்

யாரால் முடியும் என்ற பலரும்
கலங்கிய வேளை நீயே சென்றாய்
சூரியன் தோன்றும் நாழிகைக்குள்ளே
மூலிகை வேண்டும் என்றதனாலே
பர்வத மலையை கைகளினாலே
பெயர்த்தே எடுத்த வீரனும் நீயே
கண்ணிமைப் பொழுதில் காற்றாய் சென்று
மூலிகையுடனே வந்தவன் நீயே
லக்குவான் மீண்டும் உயிர்பெற்றெழவே
ராமனும் உள்ளம் களிப்புற்றானே

தம்பியை மீட்டு தந்ததனாலே
தழுவிக்கொண்டான் மார்புடன் தானே
அந்தப்பெருமை கொண்டதனாலே
ஆனந்தக் கண்ணீர் நீ வடித்தாயே
பின்னொரு நேரம் மறுமை செல்ல
பிரியமுடனே ராமன் அழைக்க
எத்தனை அணைக்க இந்த உடலை
எப்படி விட்டு நான்வருவேனே
மறுமை எனக்கு வேண்டாம் என்று
மறுத்தாய் அன்று பெரியவன் நீயே

வானரமெல்லாம் உன்மொழிக்கேட்டு
வந்தனர் துணையாய் போரினில் தானே
வல்லமையுடனே வெற்றியும் பெற்று
தர்மம் வெல்ல வழிவகுத்தாயே
வானவரெல்லாம் பூமழை சிந்த
வையக மாந்தர் பெரும் மகிழ்வெய்த
பட்டாபிஷேகம் நடைபெறும் வேளை
கண்ணார நீயும் கண்டாய் தானே
வெற்றிக்குதவும் வீரனும் நீயே
விண்ணவர் போற்றும் வலிவுடையோனே

வெண்ணையில் நாளும் குளிப்பவன் நீயே
வீரத்தை அள்ளித் தருபவன் நீயே
தன்னைமறந்த அடியார் நெஞ்சில்
என்றும் இருக்கும் ஏந்தலும் நீயே
கண்ணினைக்காக்கும் இமையினைப்போலே
காத்திட வேண்டும் எங்களை நீயே
வாலில் பொட்டு வைப்பதனாலே
வரங்களை நாளும் தருபவன் நீயே
பாலுடன் தேனும் வைத்தே உன்னை
வளமுடன் நலம் நீதரவேண்டி

ஞாயிறு அன்று கவசம் சொல்லி
நல்லருள் நீயும் செய்திடு என்று
தாயத்துக் கட்டி உன்புகழ் பாடி
தண்டனையெல்லாம் குறைந்திடத் தானே
தடைகள் யாவும் விலகிடத்தானே
திருமணம் விரைவாய் கூடிடத்தானே
சிக்களைத் தீர்க்க வேண்டியே உன்னை
ஸ்ரீ ராம நாமம் அன்புடன் சொல்லி
பக்கத்துணையாக நீயுமிருக்க
பக்தருக்கென்றும் காவல் கொடுக்க

அன்புடை ராமன் நெஞ்சினில் வாழும்
பண்புடை சீலன் பலம் மிகக் கொண்டோன்
சிந்தனைக்குள்ளே சேர்ந்திருப்பவனே
சிறப்புடன் வாழ செய்திடுவாயே
வந்தனம் சொல்லி உன்திருவடியை
வாடையினில் மாலை சாற்றியே உன்னை
துளசியில் மாலை அணிந்திருப்பவனே
தூயவர் நெஞ்சில் குடியிருப்பவனே
வளமை நூறு உன்னிடம் வேண்டி
பெருமைக்குரிய உன்புகழ் பாடி

Видео Sri Rama Baktha Anjaneya Kavasam || Sri Anjaneya Suprabhatham || Hanuman Songs || Vijay Musicals канала Vijay Musical
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
7 марта 2018 г. 9:59:21
00:14:31
Другие видео канала
அனுமன் ஜெயந்தி சிறப்பு - ஸ்ரீ ஜெய ஹனுமன் வீடியோ பாடல்கள் | Sri Jaya Hanuman Songs | Vijay Musicalsஅனுமன் ஜெயந்தி சிறப்பு - ஸ்ரீ ஜெய ஹனுமன் வீடியோ பாடல்கள் | Sri Jaya Hanuman Songs | Vijay MusicalsKanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original FullKanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Fullஅஞ்சனை மைந்தா Anjanai Mainda | Sri Jaya Hanuman | Prabhakar | Anjaneyar Songs Tamil | Vijay Musicalஅஞ்சனை மைந்தா Anjanai Mainda | Sri Jaya Hanuman | Prabhakar | Anjaneyar Songs Tamil | Vijay Musicalநோய்கள் குணமாக, உடல் ஆரோக்கியம் பெற தன்வந்தரி 108 போற்றி தினமும் காலை மாலை கேளுங்கள் | Apoorva Audioநோய்கள் குணமாக, உடல் ஆரோக்கியம் பெற தன்வந்தரி 108 போற்றி தினமும் காலை மாலை கேளுங்கள் | Apoorva Audioவிநாயகர் அகவல் | Vinayagar Agaval by T L Maharajan | Full Video | Originalவிநாயகர் அகவல் | Vinayagar Agaval by T L Maharajan | Full Video | OriginalNamo Namo Sri Narayana with Tamil Lyrics | நமோ நமோ ஸ்ரீ நாராயணா | Mahanadhi Shobana | Melody BakthiNamo Namo Sri Narayana with Tamil Lyrics | நமோ நமோ ஸ்ரீ நாராயணா | Mahanadhi Shobana | Melody BakthiPower Hanuman Suprabhatam in Tamil Overcoming Obstacles and Fear | Best Tamil Devotional SongsPower Hanuman Suprabhatam in Tamil Overcoming Obstacles and Fear | Best Tamil Devotional Songsஹனுமான் சாலிசா  Hanuman Chalisa | Anjaneya Song With Tamil Lyrics | Gayathri Girish | Vijay Musicalsஹனுமான் சாலிசா Hanuman Chalisa | Anjaneya Song With Tamil Lyrics | Gayathri Girish | Vijay Musicals#Hanuman Chalisa | SP Balasubramaniam Hanuman Songs | Jukebox | Sri Ramanjaneya | BHAKTHI#Hanuman Chalisa | SP Balasubramaniam Hanuman Songs | Jukebox | Sri Ramanjaneya | BHAKTHIPillaiyaar Kavacham | பிள்ளையார் கவசம் | Vinayagar SongsPillaiyaar Kavacham | பிள்ளையார் கவசம் | Vinayagar Songsராமர் சுப்ரபாதம் | ராமர் திருப்பள்ளியெழுச்சி | ஜெய் ஶ்ரீராம்| பக்திப் பாடல்கள் | Ramar Suprabathamராமர் சுப்ரபாதம் | ராமர் திருப்பள்ளியெழுச்சி | ஜெய் ஶ்ரீராம்| பக்திப் பாடல்கள் | Ramar SuprabathamAnjaneya | Karimalai Karuppar | Kravanah | MMP MUSICAnjaneya | Karimalai Karuppar | Kravanah | MMP MUSICAnjanai Maindha Lyrics In Tamil | Ramar Anjaneya Song | Prabhakar - Hanuman song | Vijay MusicalsAnjanai Maindha Lyrics In Tamil | Ramar Anjaneya Song | Prabhakar - Hanuman song | Vijay Musicalsசாய் பாபா கவசம் - SAI BABA KAVASAM || SHIRDI SAI BABA SONGS || ASHIRVAD || DEEPIKA || VIJAY MUSICALSசாய் பாபா கவசம் - SAI BABA KAVASAM || SHIRDI SAI BABA SONGS || ASHIRVAD || DEEPIKA || VIJAY MUSICALSHara Hara Sivane Arunachalane Annamalaye PotriHara Hara Sivane Arunachalane Annamalaye PotriAnjaneya Sri Anjaneya | Veeramanidasan | Anjaneyar Songs TamilAnjaneya Sri Anjaneya | Veeramanidasan | Anjaneyar Songs Tamilஓம் நமோ நாராயண  சிறந்த திருப்பதி பெருமாள் பாடல் || OM NAMO NARAYANA SUPER HIT PERUMAL SONGஓம் நமோ நாராயண சிறந்த திருப்பதி பெருமாள் பாடல் || OM NAMO NARAYANA SUPER HIT PERUMAL SONGஸ்ரீ ராம கவசம்| #Rama_kavasam | #BhavadhaariniAnantaraman | Thirunindravur Hari Haran #ramar #2021ஸ்ரீ ராம கவசம்| #Rama_kavasam | #BhavadhaariniAnantaraman | Thirunindravur Hari Haran #ramar #2021தீய சக்திகளை அண்டவிடாமல் காக்கும் ஹனுமான் பாடல் | Lord Hanuman Padal | Best Tamil Devotional Songsதீய சக்திகளை அண்டவிடாமல் காக்கும் ஹனுமான் பாடல் | Lord Hanuman Padal | Best Tamil Devotional Songs
Яндекс.Метрика