Загрузка...

கொல்லா நெறியின் வெற்றிச் சின்னம் சைவ கிராமம் வாடிமனைப்பட்டியில் தைப்பூச பெருவிழா 10/02/2025 தொகுப்பு

வள்ளலாரின் கோட்டை - கொல்லா நெறிகாட்டும் உத்தம ஊர் !

சைவ கிராமம்_வாடிமனைபட்டி சாதித்த கிராமம் வாடிமனைபட்டி

தற்போது.கண்கூடாகப் பார்க்கின்றோம் தமிழகம் முழுவதும் ஆங்காங்குள்ள மதுக்கவைகள் மூட ஒரு புறம் அரசிடம் கோரிக்கை வைத்தும் போராடியும் வருகின்றனர் .அதேபோன்று ஆன்மீக புனித இடங்களில் இறைச்சி உணவகம் உயிர்பலி இவற்றை தடுக்க தடைசட்டமியற்றுமாறு அரசிடம் போராடி வருகின்றனர் .இறுதியில் வெற்றியானபாடில்லை ..

*ஆனால்* புதுக்கோட்டை மாவட்டம் வாடிமனைபட்டி கிராமத்தில் சாதித்துள்ளனர்.

ஆம் அரசாங்கத்திடம் சென்று போராடவில்லை .மாவட்ட ஆட்சியரிடமும் முதல்வரிடமும் மனு கொடுத்து அலையவில்லை .வீதியில் இறங்கி எந்த போராட்டமும் நடத்தவில்லை ஆனால் அந்த ஊரில் அரசு நினைத்தாலும் மதுக்கடை வைக்க முடியாது .ஏன் அந்த ஊர் பள்ளியில் அரசு நினைத்தாலும் முட்டை கூட வழங்க முடியாது .

*இது எப்படி சாத்தியமானது*
🤔

அவ்வூர் மக்கள் அனைவரும் புலால் மறுத்தவர்கள் .வள்ளலாரின் கொல்லாநெறி உபதேசம் பெற்ற நல்ல பிள்ளைகள் செல்லப் பிள்ளைகளாக உள்ளதுதான் காரணம்.

அங்கன்வாடி குழந்தை முதல் பெரியவர் வரை புலாலை தொடாத புனிதர்கள்

இரத்தம் சிந்தாத புனித பூமி வாடிமனைபட்டி .

அன்பர்களே இதிலிருந்து என்ன தெரிகின்றது என்றால்

சத்தமின்றி
போராட்டமின்றி அரசே நினைத்தாலும் மதுமாசத்தை அனுமதித்தாலும் செயல்படவிடாமல் தடுக்கமுடியும் என்பது தெரியவருகின்றதல்லவா .

வடலூர் புனித நகரம் ஆக வேண்டியது வடலூர் மக்கள் கையில்தான் உள்ளது.

வடலூர் மட்டுமல்ல அந்தந்த ஊர்களிலும் மது மாமிச புழக்கமிருப்பின் அரசே விற்றாலும் பொறுப்பு ஊர்தான் .

ஊர் கூடினால் வெற்றியெனும் தேர் நகரும்.

குழு அன்பர்களே வந்தனம் .

கொல்லா நெறியை பின்பற்றுபவர்களின் உள்ளமே *சபை*
அவர்களின் செயலே *நடம்*
அவர்களின் அறிவே *கடவுள்*

இந்த இரகசியத்தைதான் பெருமான் வெளிப்படையாக கூறிவிட்டேன் என்கிறார் .

இனி நாம் செய்ய வேண்டியதெல்லாம் .
தினந்தோறும் சபையில் ஆண்டவரின் திருநட தரிசனம் காண வேண்டியதுதான் .

ஒரு திட்டம் திருவருள் சித்தம் யாதெனில் :-

மேலவிடுதி என்பது புதுக்கோட்டைக்கும் பட்டுக்கோட்டைக்கும் இடையில் உள்ள ஒரு முதன்மை பிரதான சாலையில் உள்ள ஒரு ஊர் .இந்த மேல விடுதியிலிருந்து 1 1/2 கிலோமீட்டர் தொலைவில்தான் நம் பெருமானாரின் வெற்றிச் சின்னமாகிய சைவ கிராமம் வாடிமனைப்பட்டி உள்ளது .

இந்த மேலவிடுதியில் 4 உணவகங்கள் உள்ளன இதில் 3 அசைவ உணவகங்கள் .இதில் ஒன்று மட்டும் சைவ உணவகம் முட்டை கூட பயன்படுத்துவதிலாலை .இந்த உணவகம் காலை மாலை இரு வேலையும் டிபன் வழங்கும் உணவகம் .

இவ்வுணவகம் சாதாரண கூரைக்கொட்டகையில்தான் உள்ளது .உணவு உண்பவர்களுக்கு அமர்ந்து உண்ணும் வகையில் டேபிள் பென்ச் வசதியில்லை .எனவே இந்த உணவகத்திற்கு டேபிள் பென்ச் உபயமாக கொடுத்து இவ்வுணவகத்தை ஊக்குவித்தோமேயானால்.

3 நன்மைகள் நடைபெற வாய்ப்புள்ளது.
1.இவர்க்கு அசைவ உணவகமாக மாற்றலாமா என்ற சிந்தனையே வராது .

2.இவருடை ஜீவனத்திற்கு வழி வகுக்கும் வருமானம் பெருகும்.

3.இந்த சைவ உணவகம் அங்கு இல்லையெனில் அனைவரும் அசைவ உணவகத்தில்தான் சென்று உண்ணும் நிலை வரும் அதில் அசைவம் உண்ணவும் சூழல்வரும் .ஆனால் இவ்வுணவகம் சிறப்பாக சுகாதாரமாக இருக்கும்பட்சத்தில் அனைவரும் இங்கு வந்து சைவமாக உண்பார்கள் .அசைவம் உண்பது தவிர்க்கப்படும் .

*குறிப்பு* :- இந்த உணவகம் பிரதான சாலை 24 மணி நேரமும் பேருந்து செல்லும் மக்கள் புழக்கம் உள்ள இடம் .இவ்விடத்தில் இதை நாம் வள்ளலாரின் கொல்லாநெறி பரப்பும் ஒரு இடமாக பயன்படுத்தலாம்.

எப்படியெனில் :-
இவருடைய ஒரு நாள் காலை டிபன் வியாபாரம் &1500 முதல் 2000 வரை .

இதில் நாம் ஒவ்வொரு மாதப் பூசமும் இவருடைய காலை வியாபாரத்தொகை 2000 ஆயிரத்தையும் நாம் சன்மார்க்க அன்பர்கள் ஆளுக்கு 100 ரூபாய்என 20 நபர்கள் ஒன்று கூடி அந்த 2000 தொகையை அவ்வுணவகத்திற்கு கொடுத்துவிடுவோம் .அன்று அங்கு வந்து உணவு உண்ணும் யாரிடமும் பணம் வாங்க வேண்டாம் என்று கூறச்சொல்லுவோம் ஏன் என கேட்டால் இன்று வடலூரில் வள்ளலாரின் பூசம் விழா என்று கூறுவார் அப்படியா வடலூரில் பூசம் என்பதற்கு இங்கு ஏன்யா பிரியா கொடுக்கின்றாய் என்பார் .அப்போது வள்ளலாரின் கொல்லா நெறியான புலால் மறுத்த சைவ உணவகமாக நான் நடத்தியதால் அந்த வள்ளலாரே இவங்க ரூபத்தில் வந்து இப்படி உங்களுக்கெல்லாம் இலவசமாக உணவு வழங்க வைத்துள்ளார் இந்த பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது இது நான் சைவ உணவகமாக நடத்தியதால் வந்த லாபம் என கூறுவார் .

இப்போது வள்ளலாரின் கொல்லாநெறி கொள்கையூம் பரவும்

மேலும் பல அன்பர்கள் முன் வருவார்கள் நாங்களும் இனி அசைவம் சாப்பிடுவதை நிறுத்துவிடுகிறோம் .எங்களுக்கும் வள்ளலார் உதவி செய்வாரா என கேட்பார்கள் சாப்பிட வரும் மக்கள் .

ஆம் மாறுங்க எல்லாம் நடக்கும் என்பார் நமது சைவ உணவகம் நடத்துபவர் அதற்கு நானே சாட்சி என்பார் .

இதனால் பல நபர்கள் சைவமாக மாற வாய்ப்புள்ளது .

எனவே இந்த திட்டத்திற்கு

முதல்கட்டமாக 2 செட் டேபிள் பென்ச் வாங்கித் தருவோம் .

இந்த தைப்பூசத்திலிருந்தே மாதம் ஒருநாள் மாதப்பூசம் காலை உணவு இலவசமாக வழங்க நாம் அனைவயும் ஒன்றிணைவோம் .

வாரீர் .

*திட்டம்*
மாதந்தோறும் -100.00 (நூறுரூபாய் )

தொடர்புக்கு: +91 95977 86027

#vallallar #tamil #mahamantra #love #mahamantra

Видео கொல்லா நெறியின் வெற்றிச் சின்னம் சைவ கிராமம் வாடிமனைப்பட்டியில் தைப்பூச பெருவிழா 10/02/2025 தொகுப்பு канала Mr. Vallalar - The Immortal Ruler
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки