Загрузка страницы

பசுமை வீடு திட்டம் | 2.10 லட்சம் அரசு மானியம் | 3 லட்சத்தில் வீடு | செலவு 5 லட்சம் | சொந்தவீடு

பசுமை வீடு என்ன மாடலில் எப்படி கட்டலாம் என்பதை மட்டும் தான் இந்த வீடியோவில் காட்டியுள்ளோம்.நீங்களும் பசுமை வீடு கட்ட விரும்பினால் அருகில் உங்க ஏரியாவில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
As shown Video
Hall 11 x 17
Kitchen 10 x 11
Bedroom 10 x 11
Portico 5 x 11

T SHIRTS
https://www.amazon.in/s?k=Trove&rh=n%3A1953602031&dc&qid=1616040402&rnid=3576079031&ref=sr_nr_n_9

பசுமை வீடு திட்டம் | 3 லட்சத்தில் வீடு | செலவு 5 லட்சம் | 2.10 லட்சம் அரசு மானியம்

முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்

கிராமப் பகுதிகளில் வறுமை கோட்டிற்குக்கீழ் வாழும் வீடு இல்லாத ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டுதல் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்திற்கு தேவையான முழு நிதியையும் மாநில அரசே வழங்குகிறது.
ஓவ்வொரு ஆண்டும் 60,000 வீடுகள் கட்டுவதற்கு ரூ.1260 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அலகுத் தொகை - ரூ.2,10,000/-
ஒரு வீட்டிற்கான கட்டுமானத் தொகை ரூ. 1,80,000/-
சூரிய சக்தி விளக்கிற்கான தொகை ரூ. 30,000/-
சிறப்பு அம்சங்கள்
1.ஒவ்வொரு வீடும் 300 சதுர அடி பரப்பளவு கொண்டதாக இருக்கும்.
2.ஒவ்வொரு வீடும், வசிக்கும் அறை, படுக்கை அறை, சமையல் அறை, தாழ்வாரம் மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் அமைக்கப்படும்.
3.ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்படும்.
4.ஒவ்வொரு வீட்டிலும் சூரிய சக்தியில் எரியும் 5 அடர்குறு விளக்குகள் பொருத்தப்படும்.
5.கூடுதல் வசதியாக ஒவ்வொரு பயனாளியும் தமிழ்நாடு மின்சார வாரியத்திலிருந்து மீட்டர் மற்றும் மின்மாற்றிப் பொருத்தப்பட்ட மின் இணைப்பும் பெறலாம்.

7.சூரிய சக்தி விளக்குகள் அமைக்கும் பணி தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மூலம் செயல்படுத்தப்படும்.
8.இத்திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்படுவதற்கான நில எடுப்பு ஏதும் செய்யப்படமாட்டாது. வீட்டுமனைப்பட்டா உள்ளவர்கள் மட்டுமே தகுதியானவர்கள்.
9.அமைக்கப்படும் சூரிய சக்தி விளக்குகள் மற்றும் அத்துடன் கூடிய இதர உபகரணங்களை பயனாளிகள் முறையாக பயன்படுத்தும் விவரங்களைத் தெரிவிக்கும் சிற்றேடுகள் விநியோகம் செய்யப்படும்.
10.ஒவ்வொரு பசுமை வீடும் அனுமதிக்கப்பட்ட பரப்பளவான 300 சதுர அடிக்கு மிகாமல் இதற்கென தனியாக வடிவமைக்கப்பட்டவாறு கட்டப்படவேண்டும். இதன் வடிவமைப்பில் மாறுதல்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
11.இருப்பினும் அனுமதிக்கப்பட்ட வீட்டின் பரப்பளவான 300 சதுர அடியில் வீட்டின் வடிவமைப்பில் மாறுதல் செய்யாமல், சமையலறை மற்றும் படுக்கை அறை ஆகியவற்றை இட அமைவிற்கேற்ப மாற்றி அமைக்க அனுமதிக்கப்படும்.
12.பயனாளிகள் கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் தாங்களே ஏற்பாடு செய்துகொள்ளலாம். பயனாளிகளால் கதவுகள் மற்றும் ஜன்னல்களை ஏற்பாடு செய்ய இயலாத நிலையில், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கதவுகள் மற்றும் ஜன்னல்களை ஏற்பாடு செய்து வழங்கிவிட்டு அதற்கான தொகையினை திட்ட நிதியிலிருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம்.
13.இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் ஒவ்வொரு வீட்டிலும் முழு சுகாதார திட்ட நிதி ஒதுக்கீட்டினை ஒருங்கிணைத்து அனைத்து வீடுகளிலும் ஒரு கழிவறை அமைக்கப்படும்.
14.செராமிக் ஓடுகளில் இத்திட்டத்திற்கென வடிவமைக்கப்பட்ட சின்னம் அனைத்து வீடுகளிலும் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் பொருத்தப்படும்.
15.இத்திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட அனைத்து வீடுகளிலும் திட்டத்தின் பெயர், பயனாளியின் பெயர் மற்றும் வீடு கட்டப்பட்ட ஆண்டு ஆகிய விபரங்கள் தெளிவாகத் தெரியும் வகையில் வண்ணத்தினால் எழுதப்படவேண்டும்.
வீடுகள் ஒதுக்கீடு செய்தல்
1.மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சியர், கிராம ஊராட்சி வாரியாக கட்டப்பட வேண்டிய வீடுகளின் எண்ணிக்கையை முடிவு செய்வார்.
2.கிராம சபையினால் ஒப்புதலளிக்கப்பட்ட, வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் நபர்களின் பட்டியலிலிருந்து முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் ஒதுக்கப்படும்.
பணிகளுக்கான உத்தரவு வழங்குதல்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலர்களால் நில உரிமை, இடம் ஆகியவை சரிபார்க்கப்பட்டதை உறுதி செய்த பிறகு தகுதியுள்ள பயனாளிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்(வட்டார ஊராட்சி) வேலை உத்திரவினை வழங்குவார்.
திட்ட செயலாக்கம்

•வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) மூலம் திட்டம் செயல்படுத்தப்படும்.
•பயனாளிகள் வீடுகளைக் கட்டுவதற்கு ஒன்றிய / உதவி பொறியாளர்கள் தேவையான தொழில்நுட்ப உதவி புரிவார்கள்.
பயனாளிகளின் தகுதி
இத்திட்டத்தில் பயனாளிகள் கீழ்கண்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
•சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
•சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சியில் உள்ள வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களின் நிரந்தர காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
•300 சதுர அடிக்கு குறையாத வீட்டு மனை இடத்திற்கு சொந்தக்காரராக இருக்க வேண்டும்.
•குடும்ப தலைவரின் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் எவரேனும் ஒருவர் பெயரிலோ வில்லங்கமற்ற வீட்டுமனை பட்டா இருக்க வேண்டும்.
•அந்த கிராம ஊராட்சியில் அல்லது வேறு எங்கும் கான்கிரீட் கூரை போடப்பட்ட வீடு எதுவும் இருக்கக் கூடாது.
பயனாளிகள் தேர்வு
•பயனாளிகள் தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும்போது, மாற்றுத் திறனாளிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பெண்களைத் தலைவராகக் கொண்ட குடும்பங்கள், திருநங்கைகள், ஹெச்ஐவி/எய்ட்ஸ்/டிபி ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என துணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) சான்றிதழ் பெற்றவர்கள், வெள்ளம், தீ விபத்து ஆகிய இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டோருக்கும் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர் உள்ள குடும்பங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.
வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம ஊராட்சித் தலைவர் அடங்கிய குழு, தகுதியான பயனாளிகளை தேர்வு செய்யும்.
#பசுமைவீடு#3லட்சத்தில்வீடு#சொந்தவீடு

Видео பசுமை வீடு திட்டம் | 2.10 லட்சம் அரசு மானியம் | 3 லட்சத்தில் வீடு | செலவு 5 லட்சம் | சொந்தவீடு канала JP Real Estate
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
10 марта 2020 г. 19:27:13
00:09:05
Другие видео канала
5 லட்சத்தில் 900sqftல் கட்டபட்ட 2BHK பட்ஜெட் வீடு / 5 Lakhs Low Budget House5 லட்சத்தில் 900sqftல் கட்டபட்ட 2BHK பட்ஜெட் வீடு / 5 Lakhs Low Budget HouseM.K.STALIN | DMK | GIVING | FREE HOUS | ALL PEOPLE | DISCUSS | LINGA CREATIONM.K.STALIN | DMK | GIVING | FREE HOUS | ALL PEOPLE | DISCUSS | LINGA CREATION26 × 20 House plan | 26 * 20 Floor plan | East facing house | 520 sqft | 3D view26 × 20 House plan | 26 * 20 Floor plan | East facing house | 520 sqft | 3D viewவீடு விற்பனைக்கு!! | New houses for sale | Individual House | Kanavu illam | veedu | veedu onlineவீடு விற்பனைக்கு!! | New houses for sale | Individual House | Kanavu illam | veedu | veedu onlineஇலவச வீடு அறிவிப்பு |தமிழக அரசின் இலவச வீடு வழங்கும் திட்டம் 2021 | Government Free Home Scheme 2021இலவச வீடு அறிவிப்பு |தமிழக அரசின் இலவச வீடு வழங்கும் திட்டம் 2021 | Government Free Home Scheme 202130 days-ல் 4 lakh- ல்  கட்டப்பட்ட இண்டர்லாக்  வீடு| | dream house built by interlock bricks30 days-ல் 4 lakh- ல் கட்டப்பட்ட இண்டர்லாக் வீடு| | dream house built by interlock bricksMODI HOUSE VS GREEN HOUSEMODI HOUSE VS GREEN HOUSEVeedu : குறைந்த விலையில் அழகான GFRG பேனல் வீடு! | 27/04/2019Veedu : குறைந்த விலையில் அழகான GFRG பேனல் வீடு! | 27/04/201910 லட்சம் முதல் இடம்+ வீடு விற்பனைக்கு "லட்சுமி கார்டன்"புளியம்பட்டி10 லட்சம் முதல் இடம்+ வீடு விற்பனைக்கு "லட்சுமி கார்டன்"புளியம்பட்டிதமிழக அரசின் இலவச வீடு அறிவிப்பு 2021 | pasumai veedu plan details |Government Free Home Scheme 2021தமிழக அரசின் இலவச வீடு அறிவிப்பு 2021 | pasumai veedu plan details |Government Free Home Scheme 20212 சென்ட் டில் 960 Sqft ல் அழகிய 2Bedroom வீடு | 2Bhk House With False Ceiling2 சென்ட் டில் 960 Sqft ல் அழகிய 2Bedroom வீடு | 2Bhk House With False CeilingPMAY Scheme in Tamil 2021 | Tamil Nadu Free Housing scheme 2021 | government free scheme 2021PMAY Scheme in Tamil 2021 | Tamil Nadu Free Housing scheme 2021 | government free scheme 2021New model house / veedu (வீடு விற்பனைக்கு)/ house for sale #justinformNew model house / veedu (வீடு விற்பனைக்கு)/ house for sale #justinform2Lakhs Budget House | 1BHK | Jack Arch Roof House Construction🔥| Low Budget House ideas #CivilXpress2Lakhs Budget House | 1BHK | Jack Arch Roof House Construction🔥| Low Budget House ideas #CivilXpress15 லட்சத்தில் 2BHKவீடு நீங்களும் கட்டலாம்,22 அடி அகலம்45அடி நீளத்தில் சிமினி சமையலறையுடன் அழகானவீடு15 லட்சத்தில் 2BHKவீடு நீங்களும் கட்டலாம்,22 அடி அகலம்45அடி நீளத்தில் சிமினி சமையலறையுடன் அழகானவீடு1.5 சென்ட்டில் 450 sqft ல் அழகான வசதியான 1BHK காம்பாக்ட் வீடு | Budget House for Sale | Epi-131.5 சென்ட்டில் 450 sqft ல் அழகான வசதியான 1BHK காம்பாக்ட் வீடு | Budget House for Sale | Epi-137.75லட்சத்தில் அழகானபட்ஜெட் வீடு680sqft Best BudgetHouse ബജറ്റ് വീട് ಬಜೆಟ್ ಮನೆ బడ్జెట్ హౌస్ बजट घर7.75லட்சத்தில் அழகானபட்ஜெட் வீடு680sqft Best BudgetHouse ബജറ്റ് വീട് ಬಜೆಟ್ ಮನೆ బడ్జెట్ హౌస్ बजट घरபசுமை வீடு திட்டத்தில் பயன்பெற தகுதிகள் என்ன? | Pasumai Veedu Thittam Explainedபசுமை வீடு திட்டத்தில் பயன்பெற தகுதிகள் என்ன? | Pasumai Veedu Thittam Explainedபசுமை வீடு திட்டம் 2.10 லட்சம் | GREEN HOUSE | வாங்குவது எப்படி | புதிய திட்டம்பசுமை வீடு திட்டம் 2.10 லட்சம் | GREEN HOUSE | வாங்குவது எப்படி | புதிய திட்டம்
Яндекс.Метрика